< নহিমিয়ের বই 3 >
1 ১ পরে ইলীয়াশীব মহাযাজক ও তাঁর যাজক ভাইরা উঠে মেষ দরজা গাঁথলেন; তাঁরা তা পবিত্র করলেন ও তার দরজা স্থাপন করলেন; আর হম্মেয়া দুর্গ থেকে হননেলের দুর্গ পর্যন্ত তা পবিত্র করলেন।
௧அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசிபும், அவனுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைசெய்து, அதின் கதவுகளை வைத்து, நூறு என்கிற கோபுரம்முதல் அனானெயேலின் கோபுரம்வரைக் கட்டிப் பிரதிஷ்டை செய்தார்கள்.
2 ২ তাঁর কাছে যিরীহোর লোকেরা গাঁথল আর তার কাছে ইম্রির ছেলে সক্কূর গাঁথল।
௨அவன் அருகே எரிகோவின் மனிதர்கள் கட்டினார்கள்; அவர்கள் அருகே இம்ரியின் மகனாகிய சக்கூர் கட்டினான்.
3 ৩ হস্সনায়ার ছেলেরা মাছ দরজা গাঁথল; তারা তার কড়িকাঠ তুলল এবং তার দরজা স্থাপন করল, আর খিল ও হুড়কা দিল।
௩மீன்வாசலை அசெனாவின் மகன்கள் கட்டினார்கள்; அதற்கு உத்திரம் வைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுக்களையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
4 ৪ তাদের কাছে হক্কোসের নাতি ঊরিয়ের ছেলে মরেমোৎ সারাই করল। তাদের কাছে মশেষবেলের নাতি বেরিখিয়ের ছেলে মশুল্লম সারাই করল। তাদের কাছে বানার ছেলে সাদোক সারাই করল।
௪அவர்கள் அருகே கோசின் மகனாகிய உரியாவின் மகன் மெரெமோத் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகில் மெஷேசாபெயேலின் மகனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே பானாவின் மகனாகிய சாதோக் பழுதுபார்த்துக் கட்டினான்.
5 ৫ তাদের কাছে তকোয়ীয়েরা সারাই করল, কিন্তু তাদের প্রধানেরা নিজেদের প্রভুর কাজ করতে প্রত্যাখ্যান করলো।
௫அவர்கள் அருகே தெக்கோவா ஊரைச்சேர்ந்தவர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுடைய தலைவர்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்களுடைய பங்கை செய்யவில்லை.
6 ৬ আর পাসেহের ছেলে যিহোয়াদা ও বসোদিয়ার ছেলে মশুল্লম পুরানো দরজা সারাই করল; তারা তার কড়িকাঠ তুলল এবং তার দরজা বসালো, আর খিল ও হুড়কো দিল।
௬பழைய வாசலைப் பசெயாகின் மகனாகிய யோய்தாவும், பேசோதியாவின் மகனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதற்கு உத்திரம் வைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
7 ৭ তাদের কাছে গিবিয়োনীয় মলাটিয় ও মেরোণোথীয় যাদোন এবং গিবিয়োন ও মিসপার লোকেরা সারাই করল, এরা নদীর পারে অবস্থিত শাসনকর্ত্তার সিংহাসনের অধীন।
௭அவர்கள் அருகே கிபியோன் மிஸ்பா ஊர்களின் மனிதர்களின் மெலதீயா என்னும் கிபியோனியனும், யாதோன் என்னும் மெரோனோத்தியனும், நதிக்கு மறுபுறத்திலிருக்கிற அதிபதியின் மாகாணம்வரை பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
8 ৮ তার কাছে স্বর্ণকারদের মধ্যে হর্হয়ের ছেলে উষীয়েল সারাই করল। আর তার কাছে হনানিয় নামে এক জন সুগন্ধি প্রস্তুতকারী সারাই করল, তারা চওড়া দেওয়াল পর্যন্ত যিরূশালেম পুনরায় তৈরী করল।
௮அவர்கள் அருகே பொற்கொல்லர்களில் ஒருவனாகிய அராயாவின் மகன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே வாசனைத்திரவியம் தயாரிக்கிறவனின் மகனாகிய அனனியா பழுதுபார்த்துக்கட்டினான்; அதுமுதல் அகலமான மதில்வரை எருசலேம் இடிக்காமல் விடப்பட்டிருந்தது.
9 ৯ তাদের কাছে যিরূশালেম প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্ত্তা হূরের ছেলে রফায় সারাই করল।
௯அவர்கள் அருகே எருசலேம் பட்டணத்தின் பாதியை ஆட்சி செய்யும் ஊரின் மகன் ரெப்பாயா பழுதுபார்த்துக்கட்டினான்.
10 ১০ তাদের কাছে হরূমফের ছেলে যিদায় নিজের বাড়ির সামনে সারাই করল। তার কাছে হশব্নিয়ের ছেলে হটুশ সারাই করল।
௧0அவர்கள் அருகே அருமாப்பின் மகன் யெதாயா தன்னுடைய வீட்டுக்கு எதிரில் உள்ள பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே ஆசாப்நெயாவின் மகன் அத்தூஸ் பழுதுபார்த்துக் கட்டினான்.
11 ১১ হারীমের ছেলে মল্কিয় ও পহৎ মোয়াবের ছেলে হশূব অন্য এক অংশ ও তুন্দুরের দুর্গ সারাই করল।
௧௧மற்றப் பகுதியையும், சூளைகளின் கோபுரத்தையும், ஆரீமின் மகன் மல்கிஜாவும், பாகாத்மோவாபின் மகன் அசூபும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
12 ১২ তার কাছে যিরূশালেম প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্ত্তা হলোহেশের ছেলে শল্লুম ও তার মেয়েরা সারাই করল।
௧௨அவன் அருகே எருசலேம் பட்டணத்தின் மறுபாதியை ஆட்சி செய்யும் அல்லோகேசின் மகன் சல்லூமும், அவனுடைய மகள்களும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
13 ১৩ হানূন ও সানোহের বাসিন্দারা উপত্যকার দরজা সারাই করল; তারা তা গাঁথল এবং তার দরজা স্থাপন করল, আর খিল ও হুড়কো দিল এবং সার দরজা পর্যন্ত দেওয়ালের এক হাজার হাত সারাই করল।
௧௩பள்ளத்தாக்கின்வாசலை ஆனூனும், சானோவாகின் மக்களும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டு வாசல்வரையும் மதிலில் ஆயிரம் முழம் கட்டினார்கள்.
14 ১৪ আর বৈৎ-হক্কেরম প্রদেশের শাসনকর্ত্তা রেখবের ছেলে মল্কিয় সার দরজা সারাই করল; সে তা গাঁথল এবং তার দরজা স্থাপন করল, খিল ও হুড়কা দিল।
௧௪குப்பைமேட்டுவாசலைப் பெத்கேரேமின் மாகாணத்தை ஆட்சி செய்யும் ரெக்காவின் மகன் மல்கியா பழுதுபார்த்து, அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டான்.
15 ১৫ আর মিসপা প্রদেশের শাসনকর্ত্তা কল্হোষির ছেলে শল্লুম উনুই ফটক সারাই করল; সে তা গাঁথল, তার আবরণ তৈরী করল এবং তার দরজা স্থাপন করল, আর খিল ও হুড়কা দিল এবং যে সিঁড়ি দিয়ে দায়ূদ শহর থেকে নামে, সেই পর্যন্ত রাজার বাগানের সামনে অবস্থিত শীলোহ পুকুরের দেওয়াল সারাই করল।
௧௫ஊற்றுவாசலை மிஸ்பாவின் மாகாணத்தை ஆட்சி செய்யும் கொல்லோசேயின் மகன் சல்லூம் பழுதுபார்த்து, அதைக் கட்டி, கூரையமைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, ராஜாவின் தோட்டத்தின் அருகிலிருக்கிற சீலோவாவின் குளத்து மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள்வரை இருக்கிறதையும் கட்டினான்.
16 ১৬ তার কাছে বৈৎ-সূর প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্ত্তা অস্বূকের ছেলে নহিমিয় দায়ূদের কবরের সামনে পর্যন্ত, খোঁড়া পুকুর পর্যন্ত ও শক্তিশালীদের ঘর পর্যন্ত সারাই করল।
௧௬அவனுக்குப் பின்னாகப் பெத்சூர் மாகாணத்தின் பாதியை ஆட்சி செய்த அஸ்பூகின் மகன் நெகேமியா தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடம்வரைக்கும், வெட்டப்பட்ட குளம்வரைக்கும், பலசாலிகளின் வீடுவரைக்கும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
17 ১৭ তার কাছে লেবীয়েরা, বিশেষভাবে বানির ছেলে রহূম সারাই করল। তার কাছে কিয়ীলা প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্ত্তা হশবিয় নিজের অংশ সারাই করল।
௧௭அவனுக்குப் பின்னாக லேவியர்களில் பானியின் மகன் ரேகூமும், அவன் அருகே கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்கை ஆட்சி செய்யும் அஷபியாவும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
18 ১৮ তার পরে তাদের ভাইয়েরা, অর্থাৎ কিয়ীলা প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্ত্তা হেনাদদের ছেলে ববয় সারাই করল।
௧௮அவனுக்குப் பிறகு அவனுடைய சகோதரர்களில் கேகிலா மாகாணத்து மறுபாதியை ஆட்சி செய்யும் எனாதாதின் மகன் பாபாயி பழுதுபார்த்துக் கட்டினான்.
19 ১৯ তার কাছে মিসপার শাসনকর্ত্তা যেশূয়ের ছেলে এসর দেওয়ালের বাঁকে অবস্থিত অস্ত্রাগারে উঠবার পথের সামনে আর এক অংশ সারাই করল।
௧௯அவன் அருகே மிஸ்பாவை ஆட்சி செய்யும் யெசுவாவின் மகன் ஏசர் என்பவன் மதிலின் கடைசிமுனையிலே ஆயுதசாலையின் படிகளுக்கு எதிரேயிருக்கிற வேறொரு பகுதியை பழுதுபார்த்துக் கட்டினான்.
20 ২০ তারপরে সব্বয়ের ছেলে বারূক যত্ন করে বাঁক থেকে মহাযাজক ইলীয়াশীবের ঘরের দরজা পর্যন্ত আর এক অংশ সারাই করল।
௨0அவனுக்குப் பின்னாகச் சாபாயின் மகன் பாரூக் அந்தக் கடைசிமுனையிலிருந்து பிரதான ஆசாரியனாகிய எலியாசிபின் வாசற்படிவரை இருக்கிற பின்னொரு பகுதியை மிக கவனமாக பழுதுபார்த்துக் கட்டினான்.
21 ২১ তারপরে হক্কোসের ছেলে ঊরিয়ের ছেলে মরেমোৎ ইলীয়াশীবের বাড়ির দরজা থেকে শুরু করে ইলীয়াশীবের বাড়ীর শেষ পর্যন্ত আর এক অংশ সারাই করল।
௨௧அவனுக்குப் பிறகு கோசின் மகனாகிய உரியாவின் மகன் மெரெமோத் எலியாசிபின் வீட்டு வாசற்படியிலிருந்து அவனுடைய வீட்டின் கடைசிமுனைவரை இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
22 ২২ তারপরে যর্দ্দনের চারপাশের এলাকার যাজকেরা সারাই করল।
௨௨அவனுக்குப் பிறகு சமபூமியில் தங்கியிருக்கிற ஆசாரியர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
23 ২৩ তারপরে বিন্যামীন ও হশূব নিজের নিজের বাড়ির সামনে সারাই করল। তারপরে অননিয়ের ছেলে মাসেয়ের ছেলে অসরিয় নিজের বাড়ির পাশে সারাই করল।
௨௩அவர்களுக்குப் பிறகு பென்யமீனும், அசூபும் தங்களுடைய வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பிறகு அனனியாவின் மகனாகிய மாசேயாவின் மகன் அசரியா தன்னுடைய வீட்டின் அருகே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
24 ২৪ তারপরে হেনাদদের ছেলে বিন্নূয়ী অসরিয়ের ঘর থেকে শুরু করে বাঁক ও কোণা পর্যন্ত আর এক অংশ সারাই করল।
௨௪அவனுக்குப் பின்னாக எனாதாதின் மகன் பின்னூயி அசரியாவின் வீடுமுதல் மதிலின் கடைசிமுனைவரை வளைவுவரைக்கும் இருக்கிற வேறொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
25 ২৫ উষয়ের ছেলে পালল বাঁকের সামনে; পাহারাদারদের উঠানের কাছে অবস্থিত রাজার উঁচু বাড়ির কাছে বেরিয়ে আসা দুর্গের সামনে এবং তার পরে পরোশের ছেলে পদায় সারাই করল।
௨௫ஊசாயின் மகன் பாலால் வளைவுக்கு எதிரேயும், காவல் வீட்டின் வாசலில் ராஜாவின் உயரமான அரண்மனைக்கு வெளிப்புறமாயிருக்கிற கோபுரத்திற்கு எதிரேயும் இருக்கிறதைக் கட்டினான்; அவனுக்குப் பிறகு பாரோஷின் மகன் பெதாயாவும்,
26 ২৬ আর নথীনীয়েরা পূর্ব দিকে জল দরজার সামনে পর্যন্ত ও বেরিয়ে আসা দুর্গ পর্যন্ত ওফলে বাস করত।
௨௬ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியர்களைச் சேர்ந்த மனிதர்களும் கிழக்கேயிருக்கிற தண்ணீர்வாசலுக்கு வெளிப்புறமான கோபுரத்திற்கு எதிரேயிருக்கிற இடம்வரை கட்டினார்கள்.
27 ২৭ তারপরে তকোয়ীয়েরা বেরিয়ে আসা বিরাট দুর্গ থেকে ওফলের দেওয়াল পর্যন্ত আর এক অংশ সারাই করল।
௨௭அவர்களுக்குப் பின்னாகத் தெக்கோவா ஊரைச்சேர்ந்தவர்கள் வெளிப்புறமான பெரிய கோபுரத்திற்கு எதிரே ஓபேலின் மதில்வரை இருக்கிற மற்றொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
28 ২৮ যাজকেরা ঘোড়া দরজার উপরের দিকে, প্রত্যেকজন নিজের নিজের বাড়ির সামনে, সারাই করল।
௨௮குதிரைவாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் அவரவர் தங்களுடைய வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
29 ২৯ তারপরে ইম্মেরের ছেলে সাদোক নিজের বাড়ির সামনে সারাই করল এবং তারপরে পূর্ব দরজার পাহারাদার শখনিয়ের ছেলে শময়িয় সারাই করল।
௨௯அவர்களுக்குப் பிறகு இம்மேரின் மகன் சாதோக் தன்னுடைய வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவனுக்குப் பிறகு கிழக்குவாசலைக் காக்கிற செக்கனியாவின் மகன் செமாயா பழுதுபார்த்துக் கட்டினான்.
30 ৩০ তারপরে শেলিমিয়ের ছেলে হনানিয় ও সালফের ষষ্ঠ ছেলে হানূন আর এক অংশ সারাই করল; তারপরে বেরিখিয়ের ছেলে মশুল্লম নিজের ঘরের সামনে সারাই করল।
௩0அவனுக்குப் பிறகு செல்மீயாவின் மகன் அனனியாவும், சாலாபின் ஆறாவது மகனாகிய ஆனூனும், வேறொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பிறகு பெரகியாவின் மகன் மெசுல்லாம், தன்னுடைய அறைவீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
31 ৩১ তারপরে মল্কিয় নামে একজন স্বর্ণকার নথীনীয় ও ব্যবসায়ীদের বাড়ি পর্যন্ত এবং কোণে ওঠার রাস্তা পর্যন্ত হম্মিপকদ দরজা সামনে সারাই করল।
௩௧அவனுக்குப் பிறகு பொற்கொல்லனின் மகன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே ஆலயப் பணியாளர்களும் வியாபாரிகளும் குடியிருக்கிற இடம்முதல் கடைசி முனையின் மேல்வீடுவரைக்கும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
32 ৩২ আর কোণে উঠবার রাস্তা ও মেষ দরজার মধ্যে স্বর্ণকারেরা ও ব্যবসায়ীরা সারাই করল।
௩௨கடைசிமுனையின் மேல்வீட்டுக்கும் ஆட்டுவாசலுக்கும் நடுவே இருக்கிறதை பொற்கொல்லர்களும் வியாபாரிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.