< Filibiyawa 1 >
1 Bulus ka-nge Timoti cangab kiristi Yeesu yã ciko nob kwamab wucake wo Fillibi ka-nge nubo tam ki nubo bwanten kwama tiye, ka-nge nubo durku lo wabbeu. ka-nge nobo durko ku wabbe.
௧இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய பவுலும், தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரர்களுக்கும் எழுதுகிறதாவது:
2 luma kimen ka-nge fuwor neret tebe kwama nin ka-nge Teluwe Yeesu kiristi.
௨நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3 mi bu kwama nin ka-ngeti diye no ma kwa kom ki nere di.
௩நற்செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் எங்களோடு ஊழியத்தில் ஐக்கியப்பட்டிருப்பதால்,
4 kir-kir mor dilo minin kimen gwam, mi kwob dilo miti ki nero fuwor.
௪நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் சந்தோஷத்தோடு ஜெபம்பண்ணி,
5 mi bu ka-ngeti dor nangenero bi mati wari mor fulen kere ka cikko ba teruwe ya ciko na wo.
௫உங்களில் நல்லசெயல்களைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்வரை நடத்திவருவார் என்று நம்பி,
6 miki bi kwamer neret wo ter nangen ken kimeneu an yaken ciko cwobka di kakuk Yeesu kiristi.
௬நான் உங்களை நினைக்கும்போதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
7 won digero ken nuwa nyo nure wuro dor kimer gwan, nyori miki kom gwam ner mir. kom yilam far nangene mi mor luma, ki bwaka miko ka-nge cerka dorek mik ka-nge tika ki bi kwan bifumero nin.
௭என் சிறைச்சாலையின் கட்டுகளிலும், நான் நற்செய்தியைப் போதித்து அதைத் உறுதிப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் வைத்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்கள் எல்லோரையும்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாக இருக்கிறது.
8 kwama warke mi, kuru kime gwam mi ciko mor cwika dur wo Yeesu kiristi ce.
௮இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பினாலே உங்களெல்லோரையும் காண எவ்வளவோ ஆவலாக இருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.
9 wo co dilo mi, cwika kime ko a yokten kab mor merangka ka-nge, ka-nge nyomko diger gwam.
௯மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும்,
10 nyori na ko ciye ki dige yor yore gwam na kom yilam nobo ki bilengke, digero bwir mani kimen ya cika dige kiristi.
௧0தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,
11 dim ki bi tutti wucake wo bouti fiye Yeesu kiristi na duktangka ka-nge caklangka kwama.
௧௧நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று நேர்மையானவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.
12 mi cwi komti ki nyimi keb mibo, dige fiya yereu matikali fiye yokka fulen keret kwama.
௧௨சகோதரர்களே, எனக்கு சம்பவித்தவைகள் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவானது என்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
13 bwaka miko mor kiristi bou ki filang nubo lo liya, nubo tõ nub tiyeu gwam, ka-nge kangum bo fiye ka-nge.
௧௩அரண்மனையில் உள்ளவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவிற்குள்ளான கட்டுகள் என்று தெரிந்து,
14 kangum yitub beb, ki kinin yilam ki bi kwan neret mor Teluwebe ker bwaka miko, ciki nero kwamer ciya miko keroti man ki taiye.
௧௪சகோதரர்களில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் தைரியம்கொண்டு பயம் இல்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாகத் துணிந்திருக்கிறார்கள்.
15 kangum bo tok ker kiristi ki kor neret ki kwilki-kwilkiye. kangum bo ki nero ken.
௧௫சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்ல மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
16 nubo ki biye wo ki ma ki cwika, ki nyomka ci bwayere na yilam kucang fulen keret.
௧௬சிலர் என் கட்டுகளோடு உபத்திரவத்தையும் சேர்க்க நினைத்து, சுத்த மனதோடு கிறிஸ்துவை அறிவிக்காமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
17 nubo wo bwiye ki tok ker kiristi do mor cwika neret ciye, kebo dor bilen keret. ci kwatiri ciyan neye dotange ki fiya cuwo mi bwambwabe.
௧௭நற்செய்திக்காக நான் உத்தரவுசொல்ல நியமிக்கப்பட்டவன் என்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
18 “la ye” diger win, mor digero gwam, bwen tano ciki ma ki cwerke kaka bilengke. cin tok fulen kwamaro, nyeu, min nuwa luma, ong min nuwa luma.
௧௮இதனால் என்ன? ஏமாற்றுவதினாலோ, உண்மையினாலோ, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இனிமேலும் சந்தோஷப்படுவேன்.
19 min nyimom wo a dok cerkamik mor dilo kime ka-nge tikali yuwa kwaman tangbe wo Yeesu kiristi.
௧௯அது உங்களுடைய வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியும் என்று அறிவேன்.
20 miki kuru kang yo neri mani ma nuwa kwenduwe ti, ka-nge ti ka kibi kwang, can ka-nge kicatecc, kiristi an fiya dur kwimi, bwar kaka'a mor dume.
௨0நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடு ஜீவனாலாவது, மரணத்தினாலாவது, கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவார் என்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தகுந்ததாக அப்படி முடியும்.
21 minen “mu ki dumeri, kiristi, no bwar di yokka.
௨௧கிறிஸ்து எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம்.
22 mor bwiyeri, mi nintang wo ti gwam.
௨௨ஆனாலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் செய்கைக்குப் பலன் கிடைத்திருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்று தெரியாது.
23 la yilam digero bwaibwaye tiber digero wo yobeu. cwika miko na kũbo na ya'a yi ka-nge Yeesu, wo dige yore gwam,
௨௩ஏனென்றால், இந்த இரண்டிற்கும் இடையே நான் நெருக்கப்படுகிறேன்; சரீரத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்க எனக்கு ஆசை உண்டு, அது அதிக நன்மையாக இருக்கும்;
24 nyeu yilam ki dume, tam nyo ker kimer.
௨௪அப்படியிருந்தும், நான் சரீரத்தில் வாழ்ந்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.
25 wo min ciya ciko, min nyimom man yim nan bwanten ka-nge kom gwam dor caka kaba ka-nge bilantum mor bilengke.
௨௫இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மீண்டும் உங்களிடம் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவிற்குள் பெருகுவதற்காக,
26 nyori fiye mi wiye na kom fiya yokka mor kiristi Yeesu no bou kimen takri.
௨௬உங்களுடைய விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் சந்தோஷத்திற்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடும் இருப்பேன் என்று அறிந்திருக்கிறேன்.
27 ki ma digero daten fulen keret kiristi, na nyori. no bou mato komri kaka'a mi mani ri, nuwa kimen kom tim kibi kwamer mor yuwa tangbe wucake wiin ki nero wiin, kwilki-kwilki ker fulen keret kwama.
௨௭நான் வந்து உங்களைப் பார்த்தாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாக நின்று, ஒரே ஆத்துமாவினாலே நற்செய்தியின் விசுவாசத்திற்காகப் போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றுக்கும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எந்தவிதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திற்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்.
28 ki nuware tai nubo wuro yilam nob kiye kime. wuro yirom cinen na wuroka ciko ce, kime fuloka kime ko-wuro kwama nin ne.
௨௮நீங்கள் பயப்படாமலிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அடையாளமாக இருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.
29 cin nekom yiber ker kiristi, kebo ka neka bilengke cinen ka-nge nuwa ka dotangen ker cer,
௨௯ஏனென்றால், கிறிஸ்துவை விசுவாசிக்கிறதற்குமட்டும் இல்லை, அவருக்காகப் பாடுகள்படுகிறதற்கும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
30 na dontang wo ka to mine neu, la can ka tuwe.
௩0நீங்கள் என்னிடம் பார்த்ததும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.