< صَمُوئِيلَ ٱلْأَوَّلُ 7 >
فَجَاءَ أَهْلُ قَرْيَةِ يَعَارِيمَ وَأَصْعَدُوا تَابُوتَ ٱلرَّبِّ وَأَدْخَلُوهُ إِلَى بَيْتِ أَبِينَادَابَ فِي ٱلْأَكَمَةِ، وَقَدَّسُوا أَلِعَازَارَ ٱبْنَهُ لِأَجْلِ حِرَاسَةِ تَابُوتِ ٱلرَّبِّ. | ١ 1 |
௧அப்படியே கீரியாத்யாரீமின் மனிதர்கள் வந்து, யெகோவாவுடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டுவந்து வைத்து, யெகோவாவுடைய பெட்டியைக் காக்கும்படி, அவனுடைய மகனான எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.
وَكَانَ مِنْ يَوْمِ جُلُوسِ ٱلتَّابُوتِ فِي قَرْيَةِ يَعَارِيمَ أَنَّ ٱلْمُدَّةَ طَالَتْ وَكَانَتْ عِشْرِينَ سَنَةً. وَنَاحَ كُلُّ بَيْتِ إِسْرَائِيلَ وَرَاءَ ٱلرَّبِّ. | ٢ 2 |
௨பெட்டி கீரியாத்யாரீமிலே அநேக நாட்கள் தங்கியிருந்தது; 20 வருடங்கள் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல் குடும்பத்தார்கள் எல்லோரும் யெகோவா வை நினைத்து, அழுதுகொண்டிருந்தார்கள்.
وَكَلَّمَ صَمُوئِيلُ كُلَّ بَيْتِ إِسْرَائِيلَ قَائِلًا: «إِنْ كُنْتُمْ بِكُلِّ قُلُوبِكُمْ رَاجِعِينَ إِلَى ٱلرَّبِّ، فَٱنْزِعُوا ٱلْآلِهَةَ ٱلْغَرِيبَةَ وَٱلْعَشْتَارُوثَ مِنْ وَسْطِكُمْ، وَأَعِدُّوا قُلُوبَكُمْ لِلرَّبِّ وَٱعْبُدُوهُ وَحْدَهُ، فَيُنْقِذَكُمْ مِنْ يَدِ ٱلْفِلِسْطِينِيِّينَ». | ٣ 3 |
௩அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார்கள் அனைவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்பினால், அந்நிய தெய்வங்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் யெகோவாவிடம் திருப்பி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தர்களுடைய கைகளுக்கு விடுவிப்பார் என்றான்.
فَنَزَعَ بَنُو إِسْرَائِيلَ ٱلْبَعْلِيمَ وَٱلْعَشْتَارُوثَ وَعَبَدُوا ٱلرَّبَّ وَحْدَهُ. | ٤ 4 |
௪அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, யெகோவா ஒருவருக்கே ஆராதனை செய்தார்கள்.
فَقَالَ صَمُوئِيلُ: «ٱجْمَعُوا كُلَّ إِسْرَائِيلَ إِلَى ٱلْمِصْفَاةِ فَأُصَلِّيَ لِأَجْلِكُمْ إِلَى ٱلرَّبِّ» | ٥ 5 |
௫பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் யெகோவாவிடம் மன்றாடும்படி, இஸ்ரவேலர்கள் எல்லோரையும் மிஸ்பாவிலே கூடிவரச்செய்யுங்கள் என்றான்.
فَٱجْتَمَعُوا إِلَى ٱلْمِصْفَاةِ وَٱسْتَقَوْا مَاءً وَسَكَبُوهُ أَمَامَ ٱلرَّبِّ، وَصَامُوا فِي ذَلِكَ ٱلْيَوْمِ وَقَالُوا هُنَاكَ: «قَدْ أَخْطَأْنَا إِلَى ٱلرَّبِّ». وَقَضَى صَمُوئِيلُ لِبَنِي إِسْرَائِيلَ فِي ٱلْمِصْفَاةِ. | ٦ 6 |
௬அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே கூடிவந்து தண்ணீர் மொண்டு, யெகோவாவுடைய சந்நிதியில் ஊற்றி, அன்றையதினம் உபவாசம்செய்து, யெகோவாவுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் மக்களை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.
وَسَمِعَ ٱلْفِلِسْطِينِيُّونَ أَنَّ بَنِي إِسْرَائِيلَ قَدِ ٱجْتَمَعُوا فِي ٱلْمِصْفَاةِ، فَصَعِدَ أَقْطَابُ ٱلْفِلِسْطِينِيِّينَ إِلَى إِسْرَائِيلَ. فَلَمَّا سَمِعَ بَنُو إِسْرَائِيلَ خَافُوا مِنَ ٱلْفِلِسْطِينِيِّينَ. | ٧ 7 |
௭இஸ்ரவேல் மக்கள் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர்களின் ஆளுனர்கள் இஸ்ரவேலுக்கு எதிராக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் மக்கள் கேட்டு, பெலிஸ்தர்களினிமித்தம் பயந்து,
وَقَالَ بَنُو إِسْرَائِيلَ لِصَمُوئِيلَ: «لَا تَكُفَّ عَنِ ٱلصُّرَاخِ مِنْ أَجْلِنَا إِلَى ٱلرَّبِّ إِلَهِنَا فَيُخَلِّصَنَا مِنْ يَدِ ٱلْفِلِسْطِينِيِّينَ». | ٨ 8 |
௮சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய யெகோவா எங்களைப் பெலிஸ்தர்களின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கும்படி, எங்களுக்காக அவரை நோக்கி இடைவிடாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.
فَأَخَذَ صَمُوئِيلُ حَمَلًا رَضِيعًا وَأَصْعَدَهُ مُحْرَقَةً بِتَمَامِهِ لِلرَّبِّ، وَصَرَخَ صَمُوئِيلُ إِلَى ٱلرَّبِّ مِنْ أَجْلِ إِسْرَائِيلَ، فَٱسْتَجَابَ لَهُ ٱلرَّبُّ. | ٩ 9 |
௯அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் யெகோவாவை நோக்கி வேண்டிக்கொண்டான்; யெகோவா அவனுக்கு பதில் அருளினார்.
وَبَيْنَمَا كَانَ صَمُوئِيلُ يُصْعِدُ ٱلْمُحْرَقَةَ، تَقَدَّمَ ٱلْفِلِسْطِينِيُّونَ لِمُحَارَبَةِ إِسْرَائِيلَ، فَأَرْعَدَ ٱلرَّبُّ بِصَوْتٍ عَظِيمٍ فِي ذَلِكَ ٱلْيَوْمِ عَلَى ٱلْفِلِسْطِينِيِّينَ وَأَزْعَجَهُمْ، فَٱنْكَسَرُوا أَمَامَ إِسْرَائِيلَ. | ١٠ 10 |
௧0சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்தும்போது, பெலிஸ்தர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்ய நெருங்கினார்கள்; யெகோவா மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்கள்மேல் அந்த நாளிலே முழங்கச்செய்து, அவர்களைக் கலங்கடித்ததால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டு மடிந்தார்கள்.
وَخَرَجَ رِجَالُ إِسْرَائِيلَ مِنَ ٱلْمِصْفَاةِ وَتَبِعُوا ٱلْفِلِسْطِينِيِّينَ وَضَرَبُوهُمْ إِلَى مَا تَحْتَ بَيْتِ كَارٍ. | ١١ 11 |
௧௧அப்பொழுது இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தர்களைப் பின்தொடர்ந்துபோய், பெத்காரீம் பள்ளத்தாக்குவரை அவர்களை முறியடித்தார்கள்.
فَأَخَذَ صَمُوئِيلُ حَجَرًا وَنَصَبَهُ بَيْنَ ٱلْمِصْفَاةِ وَٱلسِّنِّ، وَدَعَا ٱسْمَهُ «حَجَرَ ٱلْمَعُونَةِ» وَقَالَ: «إِلَى هُنَا أَعَانَنَا ٱلرَّبُّ». | ١٢ 12 |
௧௨அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இதுவரை யெகோவா எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பெயரிட்டான்.
فَذَلَّ ٱلْفِلِسْطِينِيُّونَ وَلَمْ يَعُودُوا بَعْدُ لِلدُّخُولِ فِي تُخْمِ إِسْرَائِيلَ. وَكَانَتْ يَدُ ٱلرَّبِّ عَلَى ٱلْفِلِسْطِينِيِّينَ كُلَّ أَيَّامِ صَمُوئِيلَ. | ١٣ 13 |
௧௩இப்படியாக பெலிஸ்தர்கள் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடித் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் யெகோவாவுடைய கை பெலிஸ்தர்களுக்கு எதிராக இருந்தது.
وَٱلْمُدُنُ ٱلَّتِي أَخَذَهَا ٱلْفِلِسْطِينِيُّونَ مِنْ إِسْرَائِيلَ رَجَعَتْ إِلَى إِسْرَائِيلَ مِنْ عَقْرُونَ إِلَى جَتَّ. وَٱسْتَخْلَصَ إِسْرَائِيلُ تُخُومَهَا مِنْ يَدِ ٱلْفِلِسْطِينِيِّينَ. وَكَانَ صُلْحٌ بَيْنَ إِسْرَائِيلَ وَٱلْأَمُورِيِّينَ. | ١٤ 14 |
௧௪பெலிஸ்தர்கள் இஸ்ரவேல் கையிலிருந்து பிடித்திருந்த எக்ரோன் துவங்கிக் காத்வரை உள்ள பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத் திரும்பக் கிடைத்தது; அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்கள் கையில் இல்லாதபடி, திருப்பிக்கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும் எமோரியர்களுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.
وَقَضَى صَمُوئِيلُ لِإِسْرَائِيلَ كُلَّ أَيَّامِ حَيَاتِهِ. | ١٥ 15 |
௧௫சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
وَكَانَ يَذْهَبُ مِنْ سَنَةٍ إِلَى سَنَةٍ وَيَدُورُ فِي بَيْتِ إِيلَ وَٱلْجِلْجَالِ وَٱلْمِصْفَاةِ، وَيَقْضِي لِإِسْرَائِيلَ فِي جَمِيعِ هَذِهِ ٱلْمَوَاضِعِ. | ١٦ 16 |
௧௬அவன் ஒவ்வொரு வருடமும் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப்போய், அந்த இடங்களில் எல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தப்பின்பு,
وَكَانَ رُجُوعُهُ إِلَى ٱلرَّامَةِ لِأَنَّ بَيْتَهُ هُنَاكَ. وَهُنَاكَ قَضَى لِإِسْرَائِيلَ، وَبَنَى هُنَاكَ مَذْبَحًا لِلرَّبِّ. | ١٧ 17 |
௧௭அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது; அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.