< Ісая 34 >
1 Набли́зьтеся, люди, щоб чути, наро́ди ж, послухайте! Хай почує земля та все те, що на ній, вселе́нна й наща́дки її!
௧தேசங்களே, கேட்கிறதற்கு அருகில் வாருங்கள்; மக்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்பதாக.
2 Господній бо гнів на всі люди, а лютість на все їхнє ві́йсько: Він їх учинив за закля́ття, віддав їх на різь!
௨சகல தேசங்களின்மேலும் யெகோவாவுடைய கடுங்கோபமும், அவைகளுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களை அழிவிற்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்.
3 І їхні побиті розки́дані будуть, а з трупів їхніх зді́йметься смо́рід, розто́пляться го́ри від їхньої кро́ви.
௩அவர்களிலே கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியப்பட்டுக்கிடப்பார்கள்; அவர்களுடைய சடலங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோகும்.
4 І небесні світи́ла усі позника́ють, а небо, як звій книжкови́й, буде зви́нене, і всі його зо́рі попа́дають, як спадає оте виногра́дове листя, й як спадає з фіґо́вниці плід недозрі́лий!.
௪வானத்தின் சர்வ சேனையும் கரைந்து, வானங்கள் புத்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சைச்செடியின் இலைகள் உதிர்வதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிர்வதுபோலவும் உதிர்ந்து விழும்.
5 Бо на небі напо́єний меч Мій, — оце він на Едома спускається та на закля́тий народ Мій на суд:
௫வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ, ஏதோமின்மேலும், நான் அழிவிற்கு நியமித்த மக்களின்மேலும், அது நியாயம்செய்ய இறங்கும்.
6 меч Господній напо́внився кров'ю, став ситий від лою, від крови теля́т та козлі́в, від лою бара́нячих ни́рок, бо Господу жертва в Боцрі й різани́на велика в едо́мській землі.
௬போஸ்றா பட்டணத்திலே யெகோவாவுக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகா அழிவும் உண்டு; யெகோவாவுடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, கொழுப்பினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய சிறுநீரகங்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும்.
7 І бу́йволи зі́йдуть із ними, і телиці з бика́ми, і напо́їться кров'ю їхній край і наси́титься ту́ком їхній порох, —
௭அவைகளுடன் காண்டாமிருகங்களும், காளைகளின் கூட்டமும்வந்து மடியும்; அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு, அவர்களுடைய மண், மிருகங்களுடைய கொழுப்பினால் கொழுத்துப்போகும்.
8 бо це буде день помсти Господньої, рік заплати за за́колот проти Сіону!
௮அது யெகோவா பழிவாங்கும் நாள், சீயோனுடைய வழக்கினிமித்தம் பதிலளிக்கும் வருடம்.
9 І перемі́няться в смо́лу пото́ки його, його ж порох — у сірку, і смолою палю́чою стане їхній край,
௯அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போகும்.
10 Не погасне вночі ані вдень, дим його підійма́тися буде пові́к, з роду в рід опусто́шений буде, на віки віків не пере́йде по ньому ніхто.
௧0இரவும் பகலும் அது அணையாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும்; சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.
11 І пося́де його пеліка́н та їжа́к, і перебува́тимуть в ньому сова́ та ворона, і над ним Він розтя́гне міри́льного шнура спусто́шення та виска зни́щення.
௧௧நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும், ஆந்தையும் காக்கையும் அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் அளவுநூலையும், வெறுமையின் தூக்குநூலையும் பிடிப்பார்.
12 Не буде шляхе́тних у ньому, щоб царство там проголоси́ти, і стануть нічи́м усі князі його.
௧௨அரசாட்சிசெய்ய அதின் மேன்மக்களை அழைத்தால், அங்கே அவர்களில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்; அதின் பிரபுக்கள் அனைவரும் இல்லாமற்போவார்கள்.
13 І буде терни́на рости по пала́тах його, кропи́ва й будя́ччя в тверди́нях його, і він стане мешка́нням шака́лів, подвір'ям для стру́сів.
௧௩அதின் அரண்மனைகளில் முட்செடிகளும், அதின் கோட்டைகளில் முட்புதர்களும் முட்பூண்டுகளும் முளைக்கும்; அது வலுசர்ப்பங்களின் குடியிருப்பும், ஆந்தைகளின் மாளிகையுமாயிருக்கும்.
14 І будуть стрічатися там дикі звірі пустинні з гієнами, а польови́к буде кликати друга свого́; Ліліт тільки там заспоко́їться і зна́йде собі відпочи́нок!
௧௪அங்கே காட்டுமிருகங்களும் நரிகளும் ஒன்றையொன்று சந்தித்து, காட்டாட்டைக் காட்டாடு கூப்பிடும்; அங்கே ஆந்தைகளும் தங்கி, இளைப்பாறும் இடத்தைக் கண்டடையும்.
15 Там ку́блитись буде скаку́ча гадюка й склада́тиме я́йця, і виси́джувати буде та вигріва́тиме яйця свої. Там теж я́струби будуть збиратись один до одно́го.
௧௫அங்கே இராஜாளிக்கழுகு கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரித்து, அவைகளைத் தன் நிழலிலே கூட்டிக்கொள்ளும்; அங்கே பருந்துகளும் ஜோடிஜோடியாகச் சேரும்.
16 Пошукайте у книзі Господній й читайте: Із них не забракне ні о́дного, не будуть шукати один о́дного, бо у́ста Його — то вони наказали, а Дух Його — Він їх зібрав!
௧௬யெகோவாவுடைய புத்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் இணை இல்லாமல் இருக்காது; அவருடைய வாய் இதைச் சொன்னது; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.
17 І Він кинув для них жеребка́, а рука Його шнуром міри́льним його поділила для них, і пося́дуть його аж повік, з роду в рід будуть в нім пробува́ти!
௧௭அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்; அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சொந்தமாக்கிக்கொண்டு தலைமுறை தலைமுறையாக அதிலே வசிக்கும்.