< 2 Samuel 16 >
1 Dawid sian bepɔw no pɛ na ɔne Mefiboset somfo Siba hyiae. Na ɔwɔ mfurum abien a wɔahyehyɛ brodo mua ahannu, bobe aba a wɔabɔ no atɔwatɔw ɔha ne nsa nhoma kotoku ma wɔ wɔn so.
௧தாவீது மலை உச்சியிலிருந்து சற்றுதூரம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் வேலைக்காரனான சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனை சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், உலர்ந்த நூறு திராட்சைப்பழக் குலைகளும், வசந்தகாலத்து கனிகளான நூறு அத்திக் குலைகளும், ஒரு தோல்பை திராட்சைரசமும் இருந்தது.
2 Ɔhene no bisaa Siba se, “Na eyinom nso ɛ?” Na Siba buae se, “Mfurum no, mo nkurɔfo ntena wɔn so, na brodo no ne aduaba no, wɔmfa mma mmerante no na wonni. Na nsa no nso, momfa nkɔ sare so hɔ, na wɔn a ɔbrɛ nti wɔbɛtɔ beraw no anom.”
௨ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் எதற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் குடும்பத்தார்கள் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும், வாலிபர்கள் சாப்பிடுவதற்கும், திராட்சைரசம் வனாந்திரத்தில் களைத்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்.
3 Na ɔhene no bisaa no se, “Na Mefiboset wɔ he?” Siba buae se, “Ɔkaa Yerusalem. Ɔkae se, ‘Nnɛ, mɛsan agye me nena Saulo ahemman no.’”
௩அப்பொழுது ராஜா: உன் ஆண்டவனுடைய மகன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் குடும்பத்தார்கள் என் தகப்பனுடைய ராஜ்ஜியத்தை என் பக்கமாகத் திரும்பச்செய்வார்கள் என்றான் என்று சொன்னான்.
4 Ɔhene no ka kyerɛɛ Siba se, “Sɛ saa na ɛte de a, mede biribiara a ɛyɛ Mefiboset dea no rema wo.” Siba buae se, “Meda wo ase awura. Bere biara, biribiara a wobɛka akyerɛ me sɛ menyɛ no, mɛyɛ.”
௪அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உரியதையெல்லாம் உனக்கு தருகிறேன் என்றான். அதற்குச் சீபா: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
5 Bere a ɔhene Dawid ne ne nkurɔfo retwa mu wɔ Bahurim no, ɔbarima bi pue fii akuraa no ase bɛdomee wɔn. Na saa ɔbarima no din de Simei, Gera a ɔyɛ Saulo busuani babarima.
௫தாவீது ராஜா பகூரிம்வரை வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாக இருக்கிற கேராவின் மகனான சீமேயி என்னும் பெயருள்ள ஒரு மனிதன் அங்கேயிருந்து புறப்பட்டு, சபித்துக்கொண்டே நடந்துவந்து,
6 Ɔpaa Dawid ne ne mpanyimfo ne asraafo a wɔatwa wɔn ho ahyia no nyinaa abo.
௬எல்லா மக்களும், எல்லா பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கும்போது, தாவீதின்மேலும், தாவீது ராஜாவுடைய எல்லா அதிகாரிகளின் மேலும் கற்களை எறிந்தான்.
7 Ɔteɛɛ mu guu Dawid so se, “Fi ha kɔ! Mogyapɛfo a ɔte sɛ wo! Ohuhuni!
௭சீமேயி அவனை சபித்து: இரத்தப்பிரியனே, பாவியான மனிதனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.
8 Awurade atua wo ka sɛ wuhwiee Saulo ne ne fifo mogya gui. Wuwiaa nʼahengua, na afei Awurade de ahemman no ahyɛ wo babarima Absalom nsa. Wobɛnom wʼankasa wʼaduru, mogyapɛfo.”
௮சவுலின் இடத்தில் ராஜாவான உன்மேல் யெகோவா சவுல் குடும்பத்தார்களின் இரத்தப்பழியைத் திரும்பச் செய்வார்; யெகோவா ராஜ்ஜியபாரத்தை உன்னுடைய மகனான அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன்னுடைய அக்கிரமத்தில் சிக்கிக்கொண்டாய்; நீ இரத்தப்பிரியனான மனிதன் என்றான்.
9 Na Seruia babarima Abisai bisaa ɔhene no se, “Adɛn nti na ɛsɛ sɛ ɔkraman funu yi tumi dome me wura ɔhene? Ma menkɔ na minkotwa ne ti.”
௯அப்பொழுது செருயாவின் மகன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ராஜாவான என்னுடைய ஆண்டவனை ஏன் சபிக்கவேண்டும்? நான் போய் அவனுடைய தலையை வெட்டிப்போடட்டும் என்றான்.
10 Nanso ɔhene no kae se, “Dɛn na me ne mo Seruia mmabarima bɛyɛ? Sɛ Awurade aka akyerɛ no se, ɔnnome me a, me ne hena a metumi aka akyerɛ no se onnyae?”
௧0அதற்கு ராஜா: செருயாவின் மகன்களே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னை சபிக்கட்டும்; தாவீதை சபிக்கவேண்டும் என்று யெகோவா அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்பவன் யார் என்றான்.
11 Na Dawid ka kyerɛɛ Abisai ne ne mpanyimfo se, “Me babarima a ɔyɛ mʼankasa mogya pɛ sɛ okum me. Na dɛn na esiw Saulo busuani ho kwan sɛ ɔnyɛ saa ara. Munnyaa no, momma ɔnnome, efisɛ Awurade na waka akyerɛ no se ɔnyɛ saa.
௧௧பின்னும் தாவீது அபிசாயையும் தன்னுடைய வேலைக்காரர்கள் எல்லோரையும் பார்த்து: இதோ, என்னுடைய கர்ப்பத்தின் பிறப்பான என்னுடைய மகனே என்னுடைய உயிரை எடுக்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாகச் செய்வான், அவன் சபிக்கட்டும்; அப்படிச் செய்ய யெகோவா அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
12 Ebia Awurade behu sɛ wɔreyɛ me bɔne, na ɔde papa atua me nnome a me nsa aka no nnɛ yi no so ka.”
௧௨ஒருவேளை யெகோவா என்னுடைய சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் சபித்த சாபத்திற்குப் பதிலாக எனக்கு நன்மை செய்வார் என்றான்.
13 Enti Dawid ne ne mmarima toaa so kɔɔ wɔn kwan a saa bere no, na Simei nso nam bepɔw bi a ɛbɛn wɔn so. Ɔrekɔ no nyinaa, na ɔredome, totow abo bɔ Dawid, tu mfutuma gu wim.
௧௩அப்படியே தாவீதும் அவனுடைய மனிதர்களும் வழியிலே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து சபித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.
14 Ɔhene ne ne nkurɔfo nyinaa brɛɛ wɔ ɔkwan so nti, woduu Asubɔnten Yordan ho no, wogyee wɔn ahome.
௧௪ராஜாவும் அவனோடு இருந்த எல்லா மக்களும் களைத்தவர்களாக, தங்குமிடத்திலே சேர்ந்து, இளைப்பாறினார்கள்.
15 Absalom ne Israel mmarima nyinaa baa Yerusalem a Ahitofel ka wɔn ho.
௧௫அப்சலோமும் இஸ்ரவேல் மனிதர்களான எல்லா மக்களும் அவனோடு அகித்தோப்பேலும் எருசலேமிற்கு வந்தார்கள்.
16 Na Husai a ofi Arki a ɔyɛ Dawid adamfo no, kɔɔ Absalom nkyɛn kɔka kyerɛɛ no se, “Ɔhene nkwa so! Ɔhene nkwa so!”
௧௬அற்கியனான ஊசாய் என்னும் தாவீதின் நண்பன் அப்சலோமிடத்தில் வந்தபோது, ஊசாய் அப்சலோமை நோக்கி: ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க என்றான்.
17 Na Absalom bisaa Husai se, “Eyi ne ɔkwan a wode wʼadamfo Dawid fa so? Adɛn nti na wo ne wʼadamfo ankɔ?”
௧௭அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன்னுடைய நண்பன்மேல் உனக்கு இருக்கிற தயவு இதுதானோ? உன்னுடைய நண்பனோடு நீ போகாமல்போனது என்ன என்று கேட்டான்.
18 Husai ka kyerɛɛ Absalom se, “Mewɔ ha efisɛ meyɛ adwuma ma ɔbarima a Awurade ne Israel ayi no.
௧௮அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி: அப்படி அல்ல, யெகோவாவும் இந்த மக்களும் இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரோடு நான் சேர்ந்து அவரோடு இருப்பேன்.
19 Nea ɛka ho bio ne sɛ, hena na ɛsɛ sɛ mesom no? Sɛnea mesom wʼagya no, saa ara na mɛsom wo.”
௧௯இதுவும் அல்லாமல், நான் யாருக்கு பணிவிடை செய்வேன்? அவருடைய மகனிடம் தானே? உம்முடைய தகப்பனிடம் எப்படி பணிவிடை செய்தோனோ, அப்படியே உம்மிடமும் பணிவிடை செய்வேன் என்றான்.
20 Absalom dan ne ho bisaa Ahitofel se, “Dɛn bio na menyɛ?”
௨0அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது என்னவென்று ஆலோசனை சொல்லும் என்றான்.
21 Ahitofel buaa no se, “Kɔ na wo ne wʼagya mpenanom no nna, efisɛ wagyaw wɔn hɔ sɛ wɔnhwɛ ahemfi hɔ. Ɛno bɛma Israel nyinaa ahu sɛ, woabu no animtiaa a ɛboro nkabom so, na wɔde wɔn ho bɛma wo.”
௨௧அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் வைத்துப்போன அவருடைய மறுமனையாட்டிகளிடம் உறவுகொள்ளும், அப்பொழுது உம்முடைய தகப்பனால் வெறுக்கப்பட்டீர் என்பதை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லோருடைய கைகளும் பெலனடையும் என்றான்.
22 Enti wosii ntamadan wɔ ahemfi no atifi baabi a obiara behu, na Absalom kɔɔ ntamadan no mu, na ɔne nʼagya mpenanom no dae.
௨௨அப்படியே அப்சலோமுக்கு மாடியின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்; அங்கே அப்சலோம் எல்லா இஸ்ரவேலர்களின் கண்களுக்கும் முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் உறவுகொண்டான்.
23 Absalom tiee Ahitofel afotu sɛnea Dawid yɛe no pɛpɛɛpɛ. Na asɛm biara a efi Ahitofel anom bae no mu nyansa no yɛɛ sɛnea efi Onyankopɔn anom.
௨௩அந்த நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப்போல இருந்தது; அப்படி அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.