< செப்பனியா 3 >
1 ௧ கலகம் செய்கிறதும், கந்தையும், அழுக்குமாயிருக்கிற நகரத்திற்கு ஐயோ,
禍哉! 那叛逆、污穢,而殘暴的城市!
2 ௨ அது சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை; அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை; அது யெகோவாவை நம்பவில்லை; அது தன் தேவனிடத்தில் சேரவில்லை.
她從不聽呼聲,又不接受教訓;不依賴上主,也不親近她的天主。
3 ௩ அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் மாலையில் புறப்படுகிறதும் விடியற்காலம்வரை ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.
她的王侯在她中間,是一些咆哮的獅子;她的判官是夜間的豺狼,什麼也不留到天明。
4 ௪ அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்திற்குத் துரோகம்செய்தார்கள்.
她的先知都是些輕浮欺詐之徒,她火司祭褻瀆聖物,違犯法律。
5 ௫ அதற்குள் இருக்கிற யெகோவா நீதியுள்ளவர்; அவர் அநியாயம்செய்வதில்லை; அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கச்செய்கிறார்; அநியாயக்காரனுக்கு வெட்கம் தெரியாது.
但上主在她中間是正義的,從不行不義;衪每天早晨施行審判,有如不消散的光明,衪全不認識可恥的邪惡。
6 ௬ தேசங்களை அழித்தேன்; அவர்கள் கோட்டைகள் பாழாயின; அவர்களுடைய வீதிகளை ஒருவரும் கடந்துபோகாதபடிக்குப் பாழாக்கினேன்; அவர்களுடைய பட்டணங்கள் மனிதர்கள் குடியில்லாமல்போய் வெறுமையாயின.
我曾消滅了異民,他們的碉堡已化為廢墟;我使他們的街道荒涼得無人往來,他們的城市毀壞得不留一人,沒有一個遺。
7 ௭ உன் குடியிருப்பு அழிந்துபோகாமலிருக்க நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படித் தண்டித்தாலும், அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் செயல்களையெல்லாம் கேடாக்கினார்கள்.
我原想:「她必要敬畏我,接受教訓;凡我加於她的懲罰,必不致由她眼前消失。」但他們反加速使自己一切的行為墮落。
8 ௮ ஆகையால் நான் கொள்ளையடிக்க எழும்பும் நாள்வரை எனக்குக் காத்திருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; என் சினமாகிய கடுங்கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் ஊற்றும்படி தேசங்களைச் சேர்க்கவும், இராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்செய்தேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் நெருப்பினால் அழியும்.
為什麼你們等待我──上主的斷語──等到我起來作證的一天,因為我已決定聚集萬民,召集列國,在他們身上傾洩我的憤怒和我所有的怒火:全地必要為我的妒火所吞滅。
9 ௯ அப்பொழுது மக்களெல்லோரும் யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்களுடைய மொழியை செம்மையான மொழியாக மாறச்செய்வேன்.
那時,我要使萬民的口脣純潔好能稱叫上主的名號,同心協力服事上主。
10 ௧0 எத்தியோப்பியாவின் நதிகளுக்கு மறுகரையிலிருந்து என்னிடத்தில் விண்ணப்பம்செய்கிறவர்களாகிய சிதறடிக்கப்பட்டவர்களின் மகளானவள் எனக்குக் காணிக்கை கொண்டுவருவாள்.
欽崇我的人,[ 即我所分散的集團] 要從雇士河那邊給我貢獻祭品。
11 ௧௧ எனக்கு விரோதமாகத் துரோகம்செய்து, நீ செய்த உன் எல்லாச் செயல்களினிமித்தமும், அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் தங்கள் பெருமையைக்குறித்து மகிழ்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த மலையில் அகங்காரங்கொள்ளமாட்டாய்.
在那一天,你決不再因你反抗我的一切作為而羞慚,因為那時我必由你中間驅逐你那些驕矜自誇的人,使你不再在我的聖山上自誇;
12 ௧௨ உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான மக்களை மீதியாக வைப்பேன்; அவர்கள் யெகோவாவுடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள்.
但我必在你中間留下謙遜和貧苦的百姓,他們必依賴上主的名號。
13 ௧௩ இஸ்ரவேலில் மீதியானவர்கள் அநியாயம்செய்வதில்லை; அவர்கள் பொய் பேசுவதுமில்லை; வஞ்சகநாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை; அவர்கள் தங்களைப் பயப்படுத்துவாரில்லாமல் சாப்பிட்டுப் படுத்துக்கொள்வார்கள்.
以色列的遺民不再行邪惡,也不再說謊言;在他們的口裏再也找不到欺詐的吞頭;的確,他們或是牧放,或是休息,沒有人來恐嚇。
14 ௧௪ மகளாகிய சீயோனே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலர்களே, ஆர்ப்பரியுங்கள்; மகளாகிய எருசலேமே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.
熙雍女子,妳應歡樂! 以色列,你應歡呼! 耶路撒冷女子,妳應全心高興喜樂!
15 ௧௫ யெகோவா உன் ஆக்கினைகளை அகற்றி, உன் எதிரிகளை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய யெகோவா உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய்.
上主已撤銷對妳的定案,掃除了妳的仇敵;以色列的君王──上主,在妳中間,妳再不會遇見災禍!
16 ௧௬ அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்.
在那一天,人必對耶路撒冷說:「熙雍,你不用害怕,不要雙手低垂!
17 ௧௭ உன் தேவனாகிய யெகோவா உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்னைக்குறித்து சந்தோஷமாக மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் உன்னை புதியவனாக்குவார்; அவர் உன்னைக்குறித்து கெம்பீரமாகக் களிகூருவார்.
上主你的天主,在你中間,他是一位施救的勇士,衪為你喜自勝,對你重溫衪的愛情,且因你躍喜樂,
18 ௧௮ உன் சபையின் மனிதர்களாயிருந்து, பண்டிகை ஆசரிப்பில்லாமையால் உண்டான நிந்தையினிமித்தம் சஞ்சலப்பட்டவர்களை நான் ஏகமாகக் கூட்டிக்கொள்ளுவேன்.
有如在慶節之日。我必消滅打搫你的人,使你不再受羞辱。
19 ௧௯ இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின அனைவரையும் தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன்; அவர்கள் வெட்கம் அநுபவித்த எல்லா தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச்செய்வேன்.
看哪! 在那時,我必要了結一切迫害你的人,我必要拯救瘸腿的,聚集漂的;我必使他們在各地所受的羞辱,化為稱讚和榮譽。
20 ௨0 அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்; அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல மக்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
那時,我我必要召你們回來;那時,我必要聚集你們;當我要在你們的面前轉變你們的命運時,我必使你們在普世萬民中,獲得榮譽和稱讚──上主說。