< சகரியா 13 >
1 ௧ அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிமக்களுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.
I taua ra ka tuwhera he puna mo te whare o Rawiri, mo nga tangata ano o Hiruharama, hei mea mo te hara, mo te poke.
2 ௨ அந்நாளிலே நான் விக்கிரகங்களின் பெயரும் தேசத்தில் இல்லாதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
I taua ra, e ai ta Ihowa o nga mano, ka hatepea atu e ahau nga ingoa o nga whakapakoko i runga i te whenua; e kore ano e maharatia a muri ake nei; ka kore ano i ahau nga poropiti, me te wairua poke, i runga i te whenua.
3 ௩ இனி ஒருவன் தரிசனம் சொன்னால், அவனைப்பெற்ற அவன் தகப்பனும் தாயும் அவனை நோக்கி: நீ யெகோவாவுடைய நாமத்தைக்கொண்டு பொய்பேசுகிறதினால் நீ உயிரோடிருக்கக்கூடாது என்று சொல்லி, அவனைப்பெற்ற அவன் தகப்பனும் தாயும் அவன் தரிசனம் சொல்லும்போது அவனைக் குத்திப்போடுவார்கள்.
Na, tenei ake, ki te poropiti tetahi a muri ake nei, ka mea tona papa ki a ia, raua ko tona whaea i whanau ai ia, E kore koe e ora; kua korero teka hoki koe i runga i te ingoa o Ihowa: na ka werohia ia e tona papa raua ko tona whaea i whanau ai i a, ina poropiti ia.
4 ௪ அந்நாளிலே தரிசனம் சொல்லுகிற அவனவன் தான் சொன்ன தரிசனத்தினால் வெட்கப்பட்டு, பொய் சொல்லும்படிக்கு இனி கம்பளியைப் போர்த்துக்கொள்ளாமல்,
I taua ra ka whakama nga poropiti, tenei, tenei, ki tana kite, i te mea ka poropiti ia; e kore ano e kakahuria e ratou he kakahu huruhuru hei mea tinihanga.
5 ௫ நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைவாங்கினான் என்பான்.
Engari ka mea ia, Ehara ahau i te poropiti, he paruauru ahau, he pononga hoki ahau no toku taitamarikitanga ake.
6 ௬ அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த தழும்புகள் என்னவென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான்.
A ka mea tetahi ki a ia, He aha enei patunga i ou ringa? a ka mea ia, Ko oku patunga i roto i te whare o oku hoa aroha.
7 ௭ பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய மனிதன்மேலும் எழும்பு என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்கள்மேல் திரும்பவைப்பேன்.
E ara, e te hoari, ki taku hepara, ki te tangata i takahoatia ki ahau, e ai ta Ihowa o nga mano; patua te hepara, kia marara hoki nga hipi; ka tahuri atu ano toku ringa ki nga mea ririki.
8 ௮ தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனிதர்கள் அழிக்கப்பட்டு இறந்துபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும்.
Na i te whenua katoa, e ai ta Ihowa, e rua nga wahi o reira ka hatepea atu, ka mate; ka toe ia te tuatoru o nga wahi ki reira.
9 ௯ அந்த மூன்றாம் பங்கை நான் நெருப்புக்குட்படச்செய்து, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் மக்களென்று நான் சொல்லுவேன், யெகோவா என் தேவன் என்று அவர்கள் சொல்லுவார்கள்.
Ka kawea ano e ahau te tuatoru o nga wahi i roto i te ahi, ka tahia hoki te para, ka peratia me te hiriwa e tahia ana, ka whakamatautauria ano ratou e ahau, ka peratia me te koura; ka karanga ratou ki toku ingoa, a ka whakarongo ahau ki a ratou: ka mea ahau, He iwi ratou naku; a ka mea ratou, Ko Ihowa toku Atua.