< சங்கீதம் 99 >
1 ௧ யெகோவா ராஜரிகம்செய்கிறார், மக்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார், பூமி அசைவதாக.
Господ царува; нека треперят племената; Той обитава между херувимите; нека се потресе земята.
2 ௨ யெகோவா சீயோனில் பெரியவர், அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர்.
Господ е велик в Сион, И високо е издигнат над всичките племена.
3 ௩ மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது.
Нека славословят Твоето велико и страшно име; Бог е свет.
4 ௪ ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவனே நீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.
И силата на царя обича правосъдието; Ти утвърждаваш правота; Ти извършваш правосъдие и правда в Якова.
5 ௫ நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, அவர் பாதத்தைப் பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர்.
Възвишавайте Господа нашия Бог. И кланяйте се пред подножието Му; Той е свет.
6 ௬ அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும், அவர் பெயரைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறுஉத்திரவு அருளினார்.
Моисей и Аарон бяха между свещениците Му, И Самуил между призоваващите името Му; Те призоваваха Господа, и Той ги слушаше.
7 ௭ மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.
В облачния стълб Той им говореше; Те опазиха сведетелствата Му И повеленията, които им даде.
8 ௮ எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, நீர் அவர்களுக்கு உத்திரவு கொடுத்தீர்; நீர் அவர்கள் செயல்களுக்காக நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாக இருந்தீர்.
Господи Боже наш, Ти си ги слушал; Ти си им бил Бог опростител, Макар и мъздовъздател за делата им.
9 ௯ நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர்.
Възвишавайте Господа нашия Бог, И кланяйте се в светия Му хълм, Защото Господ нашият Бог е свет.