< சங்கீதம் 64 >

1 இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல். தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்; எதிரியால் வரும் பயத்தை நீக்கி, என்னுடைய உயிரை காத்தருளும்.
To the chief Musician, a Psalm of David. Hear my voice, O God, in my prayer: preserve my life from fear of the enemy.
2 துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும்.
Hide me from the secret counsel of the wicked; from the insurrection of the workers of iniquity:
3 அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி,
Who whet their tongue like a sword, [and] bend [their bows to shoot] their arrows, [even] bitter words:
4 மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றி திடீரென்று அவன்மேல் எய்கிறார்கள்.
That they may shoot in secret at the perfect: suddenly do they shoot at him, and fear not.
5 அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.
They encourage themselves [in] an evil matter: they commune of laying snares privily; they say, Who will see them?
6 அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி, தந்திரமான யோசனை நிறைவேறும்படி முயற்சி செய்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாக இருக்கிறது.
They search out iniquities; they accomplish a diligent search: both the inward [thought] of every one [of them], and the heart, [is] deep.
7 ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், திடீரென்று அவர்கள் காயப்படுவார்கள்.
But God shall shoot at them [with] an arrow; suddenly shall they be wounded.
8 அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற அனைவரும் ஓடிப்போவார்கள்.
So they shall make their own tongue to fall upon themselves: all that see them shall flee away.
9 எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, அவர் செய்கையை உணர்ந்துகொள்வார்கள்.
And all men shall fear, and shall declare the work of God; for they shall wisely consider of his doing.
10 ௧0 நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்.
The righteous shall be glad in the LORD, and shall trust in him; and all the upright in heart shall glory.

< சங்கீதம் 64 >