< சங்கீதம் 36 >

1 இராகத் தலைவனுக்கு, யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல். துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை.
Zborovođi. Od sluge Jahvina Davida. Grešan je naum u srcu zlotvora, straha Božjega nema on pred očima.
2 அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை, தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான்.
Sam sebi on laska suviše, grijeha svog ne vidi i ne mrzi.
3 அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.
Riječi usta njegovih prijevara su i zlodjelo, za razumnost i dobro on više ne mari.
4 அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லது இல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான்.
Bezakonje smišlja na postelji svojoj, na opaku ostaje putu, od zla ne odustaje.
5 யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது.
Do neba je, Jahve, dobrota tvoja, do oblaka vjernost tvoja.
6 உமது நீதி மகத்தான மலைகள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
Pravednost je tvoja k'o Božji vrhunci, a sudovi tvoji k'o duboko more: ljude i stoku ti, Jahve, spasavaš.
7 தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
Kako li je dragocjena, Bože, dobrota tvoja, pod sjenu krila tvojih ljudi se sklanjaju;
8 உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
site se pretilinom Doma tvojega, potocima svojih slasti ti ih napajaš.
9 வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
U tebi je izvor životni, tvojom svjetlošću mi svjetlost vidimo.
10 ௧0 உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும்.
Zakrili dobrotom sve koji te štuju i pravednošću svojom sve koji su srca čestita.
11 ௧௧ பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும், துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக.
Neka me ne zgazi noga ohola, i ruka grešnika neka me ne goni.
12 ௧௨ அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்; எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள்.
Gle, padoše koji čine bezakonje: oboreni su da više ne ustanu.

< சங்கீதம் 36 >