< சங்கீதம் 22 >
1 ௧ (இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.) என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமலும் ஏன் தூரமாக இருக்கிறீர்?
Wɔde ma dwomkyerɛfoɔ. Wɔto no sɛdeɛ wɔto “Adekyeeɛ foroteɛ” dwom. Dawid dwom. Me Onyankopɔn, me Onyankopɔn, adɛn enti na woagya me? Adɛn enti na me nkwagyeɛ ne wo ntam aware, adɛn na mʼapinisie nsɛm ne wo ntam aware?
2 ௨ என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், பதில் கொடுக்கவில்லை; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதி இல்லை.
Ao me Onyankopɔn, mesu frɛ wo awia, nanso wonnye me so, mefrɛ wo anadwo, nanso mennya ɔhome.
3 ௩ இஸ்ரவேலின் துதிகளுக்குள் தங்கியிருக்கிற தேவனே நீரே பரிசுத்தர்.
Nanso, wɔasi wo ɔhene sɛ Ɔkronkronni; wo na Israel kamfo woɔ.
4 ௪ எங்களுடைய முன்னோர்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.
Wo mu na yɛn agyanom de wɔn werɛ hyɛeɛ; wɔgyee wo diiɛ, na wogyee wɔn.
5 ௫ உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாமல் இருந்தார்கள்.
Wɔsu frɛɛ wo na wogyee wɔn, wɔde wɔn ho too wo so na woanni wɔn hwammɔ.
6 ௬ நானோ ஒரு புழு, மனிதன் அல்ல; மனிதர்களால் நிந்திக்கப்பட்டும், மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
Nanso meyɛ ɔsonsono, na menyɛ onipa nnipa bɔ me ahohora na wɔbu me animtiaa.
7 ௭ என்னைப் பார்க்கிறவர்களெல்லோரும் என்னைப் பரியாசம்செய்து, உதட்டைப் பிதுக்கி, தலையை அசைத்து:
Obiara a ɔhunu me di me ho fɛw; wɔtwa me adapaa, woso wɔn ti ka sɛ:
8 ௮ யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாக இருக்கிறாரே, இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்கிறார்கள்.
“Ɔde ne ho to Awurade so; ma Awurade mmɛgye no. Ma ɔmmɛboa no, ɛfiri sɛ ɔwɔ ne mu anigyeɛ.”
9 ௯ நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என்னுடைய தாயின் மார்பில் இருக்கும் போதே என்னை உம்மேல் நம்பிக்கையாக இருக்கச்செய்தீர்.
Wo na woyii me firii awotwaa mu baeɛ na womaa mede me ho too wo so ɛberɛ a metua me maame nufoɔ ano mpo.
10 ௧0 கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என்னுடைய தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாக இருக்கிறீர்.
Ɛfiri mʼawoɔ mu na wɔde me too wo soɔ; ɛfiri me maame yafunu mu, woayɛ me Onyankopɔn.
11 ௧௧ என்னைவிட்டுத் தூரமாக இருக்கவேண்டாம்; ஆபத்து நெருங்கியிருக்கிறது, உதவி செய்ய யாரும் இல்லை.
Ntwe wo ho mfiri me ho! Ɛfiri sɛ amaneɛ abɛn na ɔboafoɔ nni baabi.
12 ௧௨ அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பாசான் தேசத்தின் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன.
Anantwinini bebree atwa me ho ahyia; Basan anantwinini a wɔn ho yɛ den atwa me ho ahyia.
13 ௧௩ பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்களுடைய வாயைத் திறக்கிறார்கள்.
Gyata a wɔbobom na wɔtete wɔn ahaboa mu abuebue wɔn anom tɛtrɛɛ de kyerɛ me.
14 ௧௪ தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்; என்னுடைய எலும்புகளெல்லாம் விலகிவிட்டன, என்னுடைய இருதயம் மெழுகுபோலாகி, என்னுடைய குடல்களின் நடுவே உருகினது.
Wɔahwie me agu sɛ nsuo, na me nnompe nyinaa ahodwo. Mʼakoma adane ayɛ sɛ nku; anane afiri me mu.
15 ௧௫ என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூசியிலே போடுகிறீர்.
Mʼahoɔden awe te sɛ kyɛmferɛ mu. Na me tɛkrɛma atare mʼanom. Wode me ato owuo mfuturo mu.
16 ௧௬ நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என்னுடைய கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள்.
Nkraman atwa me ho ahyia nnebɔneyɛfoɔ kuo atwa me ho ahyia, wɔahwire me nsa ne me nan mu.
17 ௧௭ என்னுடைய எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
Mɛtumi akan me nnompe nyinaa; Mʼatamfoɔ di me nhwɛhaa na wɔsere me.
18 ௧௮ என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என்னுடைய உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள்.
Wɔkyɛ me atadeɛ mu fa, na wɔbɔ me ntoma so ntonto.
19 ௧௯ ஆனாலும் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்; என்னுடைய பெலனே, எனக்கு உதவிசெய்ய சீக்கிரமாக வாரும்.
Na wo, Ao Awurade, ntwe wo ho. Ao mʼAhoɔden bra ntɛm bɛboa me.
20 ௨0 என்னுடைய ஆத்துமாவை வாளிற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் கொடூரத்திற்கும் தப்புவியும்.
Gye me kra firi akofena ano; gye me nkwa a ɛsom bo no firi nkraman tumi ase.
21 ௨௧ என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது என்னைக் காப்பாற்றும்.
Gye me nkwa firi gyata anom; gye me firi ɛkoɔ mmɛn so.
22 ௨௨ உம்முடைய பெயரை என் சகோதரர்களுக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
Mɛbɔ wo din akyerɛ me nuanom; mɛkamfo wo wɔ wɔn a wɔahyia hɔ no nyinaa anim.
23 ௨௩ யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லோரும் அவருக்கு மரியாதைசெய்யுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லோரும் அவர்மேல் பயபக்தியாக இருங்கள்.
Monkamfo Awurade, mo a mosuro no no! Mo a moyɛ Yakob asefoɔ, monhyɛ no animuonyam! Mo Israel asefoɔ nyinaa, monni no ni!
24 ௨௪ உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும், அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடும்போது அவனைக் கேட்டருளினார்.
Ɔmmuu nʼani nguu ɔmanehunufoɔ ateetee so, ɔmfaa nʼanim nhintaa no; na mmom watie ne sufrɛ a ɔde repɛ mmoa.
25 ௨௫ மகா சபையிலே நான் செலுத்தும் துதி உம்மாலே உண்டாகும்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என்னுடைய பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
Me botaeɛ a mede yi wo ayɛ wɔ badwa mu no firi wo; mɛdi me bɔhyɛ so wɔ wɔn a wɔsuro wo no anim.
26 ௨௬ ஒடுக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; யெகோவாவை தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்களுடைய இருதயம் என்றென்றைக்கும் வாழும்.
Ahiafoɔ bɛdidi na wɔamee; wɔn a wɔhwehwɛ Awurade bɛyi no ayɛ. Mo akoma nnya nkwa daa.
27 ௨௭ பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து யெகோவாவிடத்தில் திரும்பும்; தேசங்களுடைய வம்சங்களெல்லாம் அவர் சமுகத்தில் தொழுதுகொள்ளும்.
Asase ano nyinaa bɛkae akɔ Awurade nkyɛn, na amanaman no mmusua nyinaa bɛkoto nʼanim,
28 ௨௮ ராஜ்ஜியம் யெகோவாவுடையது; அவர் தேசங்களை ஆளுகிறவர்.
ɛfiri sɛ ahennie wɔ Awurade na ɔdi amanaman so ɔhene.
29 ௨௯ பூமியின் செல்வந்தர் அனைவரும் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் அனைவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன்னுடைய ஆத்துமா அழியாதபடி அதைக் காக்க முடியாதே.
Asase so adefoɔ nyinaa bɛdidi na wɔasɔre no; wɔn a wɔkɔ dɔteɛ mu nyinaa bɛbu nkotodwe nʼanim, wɔn a wɔrentumi mma nkwa mu.
30 ௩0 ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
Nkyirimma nyinaa bɛsom no; wɔbɛka Awurade ho asɛm akyerɛ awoɔ ntoatoasoɔ a ɛdidi soɔ.
31 ௩௧ அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற மக்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.
Wɔbɛka ne tenenee akyerɛ nnipa a wɔnnya nwoo wɔn ɛfiri sɛ ɔno na wayɛ.