< சங்கீதம் 147 >
1 ௧ யெகோவாவை துதியுங்கள்; நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது.
Хваліть Господа, — добрий бо Він, виспівуйте нашому Богу, — приємний бо Він, — Йому подоба́є хвала́!
2 ௨ யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார்.
Господь Єрусалима будує, збирає вигна́нців Ізраїлевих.
3 ௩ இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
Він зламаносе́рдих лікує, і їхні рани болю́чі обв'я́зує,
4 ௪ அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்.
вирахо́вує Він число зо́рям, і кожній із них дає йме́ння.
5 ௫ நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.
Великий Господь наш, та дужий на силі, Його мудрости міри нема!
6 ௬ யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார்.
Господь підіймає слухня́них, безбожних понижує аж до землі.
7 ௭ யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள்.
Дайте відповідь Господу нашому вдячною піснею, заграйте для нашого Бога на гу́слах:
8 ௮ அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார்.
Він хмарами небо вкриває, пригото́влює дощ для землі, обро́щує гори травою,
9 ௯ அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
худобі дає її корм, вороня́там — чого вони кличуть!
10 ௧0 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார்.
Не в силі коня уподо́ба Його, і не в чле́нах люди́ни Його закоха́ння, —
11 ௧௧ தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் யெகோவா பிரியமாக இருக்கிறார்.
Госпо́дь любить тих, хто боїться Його, хто наді́ю склада́є на милість Його!
12 ௧௨ எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.
Хвали Господа, Єрусалиме, прославляй Свого Бога, Сіоне,
13 ௧௩ அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
бо зміцняє Він за́суви брам твоїх, синів твоїх благословляє в тобі,
14 ௧௪ அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
чинить мир у границі твоїй, годує тебе пшеницею щирою,
15 ௧௫ அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது.
посилає на землю нака́за Свого, — дуже швидко летить Його Слово!
16 ௧௬ பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
Дає сніг, немов во́вну, розпоро́шує па́морозь, буцім то по́рох,
17 ௧௭ அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
Він кидає лід Свій, немов ті кришки́, — і перед морозом Його хто усто́їть?
18 ௧௮ அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
Та Він пошле́ Своє слово, — та й розто́пить його, Своїм вітром повіє, — вода потече!
19 ௧௯ யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
Своє слово звіщає Він Якову, постано́ви Свої та Свої правосуддя — Ізраїлю:
20 ௨0 அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா.
для жодного люду Він так не зробив, — той не знають вони правосуддя Його! Алілуя!