< சங்கீதம் 125 >
1 ௧ யெகோவாவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் மலையைப்போல் இருப்பார்கள்.
Hodočasnička pjesma. Tko se uzda u Jahvu, on je kao brdo Sion: ne pomiče se, ostaje dovijeka.
2 ௨ மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல், யெகோவா இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார்.
Bregovi okružuju Jeruzalem: Jahve okružuje narod svoj odsada i dovijeka.
3 ௩ நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்களுடைய கைகளை நீட்டாதபடிக்கு, துன்மார்க்கத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சொத்தின்மேல் நிலைத்திருக்காது.
I neće vladati žezlo bezbožničko nad udesom pravednih, da ne bi pravedni ruke za bezakonjem pružili.
4 ௪ யெகோவாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும்.
Učini, Jahve, dobro dobrima i čestitima u srcu.
5 ௫ தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.
A koji na krive skreću putove nek' ih istrijebi Jahve sa zločincima! Mir nad Izraelom!