< எண்ணாகமம் 33 >

1 மோசே ஆரோன் என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள்தங்கள் இராணுவங்களின்படி எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களுடைய பயணங்களின் விபரம்:
Ovo su putovi sinova Izrailjevijeh kad izaðoše iz zemlje Misirske u èetama svojim pod upravom Mojsijevom i Aronovom.
2 மோசே தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடி அவர்கள் புறப்பட்ட முறையாக அவர்களுடைய பயணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டு பயணித்த பயணங்களாவன:
I Mojsije popisa kako izidoše i gdje stajaše po zapovijesti Gospodnjoj; i ovo su putovi njihovi kako putovaše.
3 முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப் புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர்கள் எல்லோரும் பார்க்க, இஸ்ரவேல் மக்கள் பலத்தகையுடன் புறப்பட்டார்கள்.
Poðoše iz Ramese prvoga mjeseca petnaesti dan, sjutradan poslije pashe, i izidoše sinovi Izrailjevi rukom podignutom pred oèima svijeh Misiraca.
4 அப்பொழுது எகிப்தியர்கள் யெகோவா தங்களுக்குள்ளே அழித்த மூத்தபிள்ளைகளையெல்லாம் அடக்கம்செய்தார்கள்; அவர்களுடைய தெய்வங்களின் பெயரிலும் யெகோவா நீதிசெலுத்தினார்.
A Misirci pogrebavahu prvence koje pobi Gospod meðu njima, kad i na bogovima njihovijem izvrši Gospod sudove.
5 பின்பு இஸ்ரவேல் மக்கள் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே முகாமிட்டார்கள்.
I otišavši sinovi Izrailjevi iz Ramese stadoše u oko u Sohotu.
6 சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்திரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே முகாமிட்டார்கள்.
A iz Sohota otišavši stadoše u oko u Etamu, koji je nakraj pustinje.
7 ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன்பாக முகாமிட்டார்கள்.
A iz Etama otišavši saviše k Irotu, koji je prema Velsefonu, i stadoše u oko pred Magdalom.
8 ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்திரத்திற்குப் போய், ஏத்தாம் வனாந்திரத்திலே மூன்று நாட்கள் பயணம்செய்து, மாராவிலே முகாமிட்டார்கள்.
A od Irota otišavši prijeðoše preko mora u pustinju, i išavši tri dana preko pustinje Etama stadoše u oko u Meri.
9 மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே முகாமிட்டார்கள்.
A iz Mere otišavši doðoše u Elim, gdje bijaše dvanaest studenaca i sedamdeset palmovijeh drveta, i ondje stadoše u oko.
10 ௧0 ஏலிமிலிருந்து புறப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின் அருகே முகாமிட்டார்கள்.
A iz Elima otišavši stadoše u oko kod Crvenoga Mora.
11 ௧௧ சிவந்த சமுத்திரத்தை விட்டுப் புறப்பட்டுப்போய், சீன் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
I otišavši od Crvenoga Mora stadoše u oko u pustinji Sinu.
12 ௧௨ சீன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டுப்போய், தொப்காவிலே முகாமிட்டார்கள்.
A iz pustinje Sina otišavši stadoše u oko u Rafaku.
13 ௧௩ தொப்காவிலிருந்து புறப்பட்டுப் போய், ஆலூசிலே முகாமிட்டார்கள்.
A iz Rafaka otišavši stadoše u oko u Elusu.
14 ௧௪ ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே முகாமிட்டார்கள். அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
A iz Elusa otišavši stadoše u oko u Rafidinu, gdje nemaše narod vode da pije.
15 ௧௫ ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
A iz Rafidina otišavši stadoše u oko u pustinji Sinajskoj.
16 ௧௬ சீனாய் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலே முகாமிட்டார்கள்.
A iz pustinje Sinajske otišavši stadoše u oko u Kivrot-Atavi.
17 ௧௭ கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே முகாமிட்டார்கள்.
A iz Kivrot-Atave otišavši stadoše u oko u Asirotu.
18 ௧௮ ஆஸரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், ரித்மாவிலே முகாமிட்டார்கள்.
A iz Asirota otišavši stadoše u oko u Ratamu.
19 ௧௯ ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே முகாமிட்டார்கள்.
A iz Ratama otišavši stadoše u oko u Remnon-Faresu.
20 ௨0 ரிம்மோன்பேரேசிலிருந்து புறப்பட்டுப்போய், லிப்னாவிலே முகாமிட்டார்கள்.
A iz Remnon-Faresa otišavši stadoše u oko u Lemvonu.
21 ௨௧ லிப்னாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரீசாவிலே முகாமிட்டார்கள்.
A iz Lemvona otišavši stadoše u oko u Resanu.
22 ௨௨ ரீசாவிலிருந்து புறப்பட்டுப்போய், கேலத்தாவிலே முகாமிட்டார்கள்.
A iz Resana otišavši stadoše u oko u Makelatu.
23 ௨௩ கேலத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், சாப்பேர் மலையிலே முகாமிட்டார்கள்.
A iz Makelata otišavši stadoše u oko kod gore Safera.
24 ௨௪ சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே முகாமிட்டார்கள்.
A od gore Safera otišavši stadoše u oko u Haradu.
25 ௨௫ ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே முகாமிட்டார்கள்.
A iz Harada otišavši stadoše u oko u Makidotu.
26 ௨௬ மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே முகாமிட்டார்கள்.
A iz Makidota otišavši stadoše u oko u Katatu.
27 ௨௭ தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே முகாமிட்டார்கள்.
A iz Katata otišavši stadoše u oko u Taratu.
28 ௨௮ தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மித்காவிலே முகாமிட்டார்கள்.
A iz Tarata otišavši stadoše u oko u Meteku.
29 ௨௯ மித்காவிலிருந்து புறப்பட்டுப்போய், அஸ்மோனாவிலே முகாமிட்டார்கள்.
A iz Meteka otišavši stadoše u oko u Aselmonu.
30 ௩0 அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே முகாமிட்டார்கள்.
A iz Aselmona otišavši stadoše u oko u Mosirotu.
31 ௩௧ மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே முகாமிட்டார்கள்.
A iz Mosirota otišavši stadoše u oko u Vanakanu.
32 ௩௨ பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே முகாமிட்டார்கள்.
A iz Vanakana otišavši stadoše u oko u planini Gadadu.
33 ௩௩ கித்காத் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே முகாமிட்டார்கள்.
A iz planine Gadada otišavši stadoše u oko u Etevati.
34 ௩௪ யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், எப்ரோனாவிலே முகாமிட்டார்கள்.
A iz Etevate otišavši stadoše u oko u Evronu.
35 ௩௫ எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே முகாமிட்டார்கள்.
A iz Evrona otišavši stadoše u oko u Gesion-Gaveru.
36 ௩௬ எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
A iz Gesion-Gavera otišavši stadoše u oko u pustinji Sinu, a to je Kadis.
37 ௩௭ காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே முகாமிட்டார்கள்.
A iz Kadisa otišavši stadoše u oko kod gore Ora na meði zemlje Edomske.
38 ௩௮ அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் யெகோவாவுடைய கட்டளையின்படி ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட 40 ஆம் வருடம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.
I izide Aron sveštenik na goru Or po zapovjesti Gospodnjoj, i umrije ondje èetrdesete godine po izlasku sinova Izrailjevijeh iz zemlje Misirske, prvi dan petoga mjeseca.
39 ௩௯ ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, 123 வயதாக இருந்தான்.
A Aronu bješe sto i dvadeset i tri godine kad umrije na gori Oru.
40 ௪0 அந்த நாட்களிலே கானான் தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் மக்கள் வருகிறதைக் கேள்விப்பட்டான்.
Tada èu Hananej car Aradski, koji življaše na jugu u zemlji Hananskoj, da idu sinovi Izrailjevi.
41 ௪௧ ஓர் என்னும் மலையை விட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே முகாமிட்டார்கள்.
Potom otišavši od gore Ora stadoše u oko u Selmonu.
42 ௪௨ சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே முகாமிட்டார்கள்.
A iz Selmona otišavši stadoše u oko u Finonu.
43 ௪௩ பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே முகாமிட்டார்கள்.
A iz Finona otišavši stadoše u oko u Ovotu.
44 ௪௪ ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரிமீன் மேடுகளிலே முகாமிட்டார்கள்.
A iz Ovota otišavši stadoše u oko na humovima Avarimskim na meði Moavskoj.
45 ௪௫ அந்த மேடுகளை விட்டுப்பறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே முகாமிட்டார்கள்.
A od tijeh humova otišavši stadoše u oko u Devon-Gadu.
46 ௪௬ தீபோன்காத்திலிருந்து புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலே முகாமிட்டார்கள்.
A iz Devon-Gada otišavši stadoše u oko u Gelmon-Devlataimu.
47 ௪௭ அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே முகாமிட்டார்கள்.
A iz Gelmon-Devlataima otišavši stadoše u oko u planinama Avarimskim prema Navavu.
48 ௪௮ அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே முகாமிட்டார்கள்.
A iz planina Avarimskih otišavši stadoše u oko u polju Moavskom na Jordanu prema Jerihonu.
49 ௪௯ யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் துவங்கி, ஆபேல் சித்தீம்மட்டும் முகாமிட்டிருந்தார்கள்.
I stajahu u okolu kraj Jordana od Esimota do Vel-Satima u polju Moavskom.
50 ௫0 எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே யெகோவா மோசேயை நோக்கி:
I reèe Gospod Mojsiju u polju Moavskom na Jordanu prema Jerihonu govoreæi:
51 ௫௧ நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் போய்ச் சேரும்போது,
Kaži sinovima Izrailjevijem i reci im: kad prijeðete preko Jordana u zemlju Hanansku,
52 ௫௨ அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,
Otjerajte od sebe sve koji žive u onoj zemlji, i potrite sve slike njihove rezane, i sve slike njihove livene potrite, i sve visine njihove oborite.
53 ௫௩ தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கவேண்டும்; அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்.
A kad ih istjerate iz zemlje, naselite se u njoj; jer sam vama dao onu zemlju da je vaša.
54 ௫௪ சீட்டுப்போட்டு, தேசத்தை உங்களுடைய குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக மக்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச மக்களுக்குக் கொஞ்ச சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அந்த இடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் முன்னோர்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.
I razdijelite je u našljedstvo ždrijebom na porodice svoje; kojih ima više, njima veæe našljedstvo podajte; a kojih ima manje, njima podajte manje našljedstvo; koje mjesto kome ždrijebom dopadne, ono neka mu bude; na plemena otaca svojih razdijelite našljedstvo.
55 ௫௫ நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமல் இருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்களுடைய கண்களில் முட்களும் உங்களுடைய விலாக்களிலே கூர்களுமாக இருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்.
Ako li ne otjerate od sebe onijeh koji žive u onoj zemlji, onda æe oni koje ostavite biti trnje oèima vašima i ostani vašim bokovima, i pakostiæe vam u zemlji u kojoj æete živjeti.
56 ௫௬ அன்றியும், நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன் என்று சொல்” என்றார்.
I što sam mislio uèiniti njima, uèiniæu vama.

< எண்ணாகமம் 33 >