< மத்தேயு 23 >

1 பின்பு இயேசு மக்களையும் தம்முடைய சீடர்களையும் பார்த்து:
然后,耶稣对民众和门徒说:
2 வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் மோசேயினுடைய இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள்;
“宗教老师和法利赛人负责解读摩西的律法,
3 ஆகவே, நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற எல்லாவற்றையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்களுடைய செய்கையின்படி செய்யாமலிருங்கள்; ஏனென்றால், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.
凡他们吩咐你们所做之事,你们都要遵行和谨守,但不可效法他们的行为,因为他们不会实践所宣扬的事情。
4 சுமக்கமுடியாத பாரமான சுமைகளைக் கட்டி மனிதர்களுடைய தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.
他们把重担捆起来,压在人的肩头,但自己却一个指头也不肯动。
5 தங்களுடைய செயல்களையெல்லாம் மனிதர்கள் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்களுடைய காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்களுடைய ஆடைகளின் தொங்கல்களைப் பெரிதாக்கி,
他们所做的一切都只是做给人看,把经文的匣子做大,把他们衣服的流苏做长,
6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும்,
他们喜欢筵席上的首位、会堂里的高位,
7 சந்தைவெளிகளில் வணக்கங்களையும், மனிதர்களால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.
他们喜欢民众在市场向他们问安,称呼他们为‘拉比’
8 நீங்களோ ரபீ என்று அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார், நீங்கள் எல்லோரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள்.
然而不要让人们称你为‘拉比’,因为只有一人是你们的老师,其他人都是兄弟。
9 பூமியிலே ஒருவனையும் உங்களுடைய பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக இருக்கிறார்.
不要称呼世上之人为父,因为只有一位为你们之父,就是天父。
10 ௧0 நீங்கள் போதகர் என்றும் அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார்.
也不要让人们称你为老师,因为只有一位是你们之师,那就是弥赛亚。
11 ௧௧ உங்களில் பெரியவனாக இருக்கிறவன் உங்களுக்கு வேலைக்காரனாக இருக்கவேண்டும்.
你们中间最伟大之人,必做你们的仆人。
12 ௧௨ தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
凡自称伟大的人,必被看轻,凡自己谦卑者,必被称为伟大。
13 ௧௩ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, மனிதர்கள் பிரவேசிக்கமுடியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களை பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.
虚伪的宗教老师和法利赛人呐,你们即将面临灾祸!你们在人面前关了天国之门,自己不进去,还拦着想要进去之人。
14 ௧௪ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்செய்து, விதவைகளின் வீடுகளை அழித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக தண்டனையை அடைவீர்கள்.
15 ௧௫ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (Geenna g1067)
虚伪的宗教老师和法利赛人呐,你们即将面临灾祸!你们走遍海洋陆地,只为让人入教。但当其他人入了教,你们却使他沦为哥和拿之子,比你们有过之而不及。 (Geenna g1067)
16 ௧௬ குருடர்களான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாவது தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்செய்தால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
你们说:‘凡指着神庙起誓,皆无用处,凡指着神庙的金子起誓,必须遵守。’这样说多么愚蠢,你们就是盲人啊!
17 ௧௭ மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?
你们这些盲目的愚昧人,到底是金子伟大,还是赋予黄金神圣地位的神庙伟大?
18 ௧௮ மேலும், எவனாவது பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்செய்தால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
你们又说:‘凡指着祭坛起誓,皆无用处,但指着坛上的祭物起誓,必须遵守。’
19 ௧௯ மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
盲目之人呐!到底是祭物伟大,还是赋予祭物上帝圣的祭坛伟大?
20 ௨0 ஆகவே, பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்செய்கிறான்.
所以,凡指着祭坛起誓,他就是指着祭坛和其上的一切起誓;
21 ௨௧ தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான்.
指着神庙起誓,就是指着神庙和住在里面的上帝起誓;
22 ௨௨ பரலோகத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான்.
指天起誓,就是指着上帝宝座和宝座上的上帝起誓。
23 ௨௩ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினாவிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாமலிருக்கவேண்டுமே.
虚伪的宗教老师和法利赛人呐,你们即将面临灾祸!你们把十分之一的薄荷、茴香和孜然献祭,却忽略律法上更重要的内容:正义、怜悯和信任。固然献出十分之一的财富很重要,但你们忘记了其他事情。
24 ௨௪ குருடர்களான வழிகாட்டிகளே, கொசு இல்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாக இருக்கிறீர்கள்.
你们这些盲目的向导,你们滤掉了水中的蚊虫,却把骆驼吞下去。
25 ௨௫ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
虚伪的宗教老师和法利赛人呐,你们即将面临灾祸!你们清洗了杯子和盘子的外在,内在却满是贪婪和自我放纵。
26 ௨௬ குருடனான பரிசேயனே! உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.
瞎眼的法利赛人呐,先把杯和盘的里面洗净,才能让外面也干净。
27 ௨௭ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாக இருக்கிறீர்கள், அவைகள் வெளியே அலங்காரமாகக் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் எல்லா அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.
虚伪的宗教老师和法利赛人呐,你们即将面临灾祸!你们就是这样,
28 ௨௮ அப்படியே நீங்களும் வெளியே மனிதர்களுக்கு நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
外表看来像正人君子,内在却充满虚伪和邪恶。
29 ௨௯ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளை அலங்கரித்து:
虚伪的宗教老师和法利赛人呐,你们即将面临灾祸!你建造坟墓纪念先知,装饰漂亮的坟墓。
30 ௩0 எங்களுடைய பிதாக்களின் நாட்களில் இருந்திருந்தோமானால், அவர்களோடு நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.
你们说:‘我们若活在祖先的时代,决不会和先知一样流血。’
31 ௩௧ ஆகவே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள்.
但这样说,你们就是指证自己就是杀害先知之人的子孙。
32 ௩௨ நீங்களும் உங்களுடைய பிதாக்களின் அக்கிரமத்தின் அளவை நிறைவாக்குங்கள்.
那么,用你们祖先的方法完成这一切吧!
33 ௩௩ சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? (Geenna g1067)
你们就是蛇,就是毒蛇所生,你们怎能逃脱定罪的审判呢? (Geenna g1067)
34 ௩௪ ஆகவே, இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபண்டிதர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்களுடைய ஜெப ஆலயங்களில் சாட்டையினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்;
我派先知、智慧人和宗教老师到你们那里,但有的你们要杀害,钉在十字架上,有的你们要在会堂里鞭打,从这城追到那城。
35 ௩௫ நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.
所有义人流在地上的血, 从义人亚伯到你们在神庙和祭坛之间所杀的巴拉加的儿子赛迦利亚,都归到你们身上。
36 ௩௬ இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
告诉你们吧,这一切的后果必落在这代人的身上。
37 ௩௭ எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச்சேர்த்துக்கொள்ளுவதுபோல நான் எத்தனைமுறையோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமல்போனது.
耶路撒冷啊,耶路撒冷,你们杀害先知,又用石头把派过去的人杀害。我屡次想招聚你的民众,如母鸡将小鸡招到翅膀下,只是你们不愿意。
38 ௩௮ இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.
你看,你们的家必成为一片荒芜,彻底空荡荡。
39 ௩௯ கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் போற்றப்பட்டவர் என்று நீங்கள் சொல்லும்வரை, இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
我告诉你们,从今后你们一定见不到我,直到那一天你们说:‘愿上帝保佑那位以主的名义来的。’”

< மத்தேயு 23 >