< மத்தேயு 13 >
1 ௧ இயேசு அன்றைய தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.
Nivi kima Yesu a rju ni koha hi ka son ni nyu kiekle nne'a.
2 ௨ திரளான மக்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கரையிலே நின்றார்கள்.
Kpontren ndi baka hu kagon ma wa ka wlu ri ni mi ghu nda kuson nimi ma u j'bu ndi ba wawu mba wu baka kli ni korah nju kiekle nne'a.
3 ௩ அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
Ni nton Yesu a hla kpi gbugbu wu ni bawu ni (misali) {lan bininkon} A tre Indi ri u ron (cu) ahi nda ka cu.
4 ௪ அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; பறவைகள் வந்து அவைகளைச் சாப்பிட்டன.
A cu'a u ibii bari ba kuhle ni nkon u cincen baka ye vurli.
5 ௫ சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தன; மண் ஆழமாக இல்லாததினாலே அவைகள் சீக்கிரமாக முளைத்தன.
Ibii bari baka kuhle ni meme wahe ni tslatsa tita (dancon?) Bati gbla rju ni tuwa meme a he bran na.
6 ௬ வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயின.
U irji a rjunda whu' u baka quu ngblanme.
7 ௭ சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன; முள் வளர்ந்து அவைகளை நெருக்கிப்போட்டது.
Ibii bari ba kuhle ni mi kunkron bi ncon u kunkron ncon ba gbron na nyi ba.
8 ௮ சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன, சில விதைகள் நூறாகவும், சில விதைகள் அறுபதாகவும், சில விதைகள் முப்பதாகவும் பலன் தந்தன.
Ibii bari ba kuhle ni meme dindi ma na rju bi nda tie bii, bari ibii darli ni tu wa a cu'a bari ibii ise ton u bari ibii ise tra hamma ni tane.
9 ௯ கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார்.
Iwa ahe ni ton u wo'a kawo”
10 ௧0 அப்பொழுது, சீடர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடு உவமைகளாக பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
U bi hua baye nda tre ni Yesu “Ani tu ngye mba u tre ni j'bu ndi ni (lan bi ninkon?) “misali?”
11 ௧௧ அவர்களுக்கு அவர் மறுமொழியாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
Yesu a saa' bawu nda tre, “Ba nnoyi nkon u toh kpye u mulki shulu wa ba rli ni bawu a.
12 ௧௨ உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
E wa ahe niwu'a ba nno nhatia, u ani he wu babran. U indi wa ana hewu na' ikpye wa ahe wu'a ba kpawu.
13 ௧௩ அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் கேளாதவர்களாகவும், உணர்ந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடு பேசுகிறேன்.
Ngye kpye wa ani ndu me tre ni ba ni lan bi ninkon a yi: ko wa ba' yah bano toh na u ko wa wa'a bana wo na nda name' toh tuma zuna.
14 ௧௪ ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.
Ni' bawuyi itre Isheya a ye tsra, wa a tre din, Ni wo biwo ndi tie bre toh njima uni' yah bi toh indi na toh tuma zuna.
15 ௧௫ இந்த மக்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாகக் கேட்டு, தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்பதே.
E isron ndi mbayi aka tie bwu' nda sen gbirhi rhi me nda na wo na nda gru shishi mba ni ndu ba - ba na toh ni shishi mba na, ka ndu ba na woni ton mba na, ka nda toh njima ni sron mba ni ndu ba kmaye ndu me den ba.
16 ௧௬ உங்களுடைய கண்கள் காண்கிறதினாலும், உங்களுடைய காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
U shishi mbi ba'bi lulu niwa ba toh a, u ton mbi ngame wa ba wo a.
17 ௧௭ அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Njinyimu mi hla yiwu anabawa ni ba ndi bi tie ngyrengre gbugbu wu ba yo suron u toh ikpye wa biki toh a u bana tsh na. ba wa ba wo ikpye wa biki yoha nda na wo bana.
18 ௧௮ ஆகவே, விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.
Sren ton ndi wo misali u ndi u ron wa a cu bii a.
19 ௧௯ ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, சாத்தான் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.
U ndi wa awo lan u mulki a nda na toh njima na, ibrji meme ani ye sranwu kpa ikpye wa ba cu ni mi sron ma. Iwayi ahi bii wa ba cuwu ni nyu nkon a.
20 ௨0 கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகிறவன்;
Wawu ma wa ba cuwu ni meme u tslatsa tita a, ahi ndi wa a wo' lan'a nda kpawu gblame ni briku.
21 ௨௧ ஆனாலும் தனக்குள்ளே வேரில்லாதவனாக, கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.
Wa ana sen ngble wa ani klri bran ton nan. To iya ye ka meme tie ye ni tie lan'a, ani gbla joku
22 ௨௨ முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். (aiōn )
U wa ba cuwu ni mi kukron bi ncona, ahi ndi wa awo lan'a u hu ngbungbungblu ni gyru u kpji ngbungblu ba mha tre a wa kana klo na. (aiōn )
23 ௨௩ நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாக இருந்து, நூறுமடங்காகவும் அறுபதுமடங்காகவும் முப்பதுமடங்காகவும் பலன் தருவான் என்றார்.
Wawuma wa ba cuwu ni meme ndindi ma kimaa' ahi iwa awo lan nda toh njimaa ani klo nda nno bii wa bari mla dari u bari ise ton u ri uma ni se tra hama ni tanne zan wa ba cu'a
24 ௨௪ வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது.
Yesu ala nno ba misali ri. A tre, “mulki u shulu he na indi ri wa acu bii ndindi ma ni rju ma.
25 ௨௫ மனிதர்கள் தூங்கும்போது அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான்.
U wa ndi basi kruna, u kranwu ri ka ye nda ka cu meme bii ni mi bii ndindi a nda hi kpama.
26 ௨௬ பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
Niwa ingban alkama a tubo nda tie tu'o ni nton kima meme giga ngame ka tsro.
27 ௨௭ வீட்டெஜமானுடைய வேலைக்காரர்கள் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னே அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
Igran bi ndi u rju'a baka ye hla niwu tiekoh mbu ana bii ndindi ma ba ucu ni mi rju me ana? Nihe mu aka tie meme giga?
28 ௨௮ அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்கள்: நாங்கள்போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள்.
A hla ni bawu, ahi wa ayame ni ko shishia mba tie ndu mba. Igram ma ba ba ka tre kie hi gbi ba hle rju
29 ௨௯ அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையும்சேர்த்து வேரோடு பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
Indi u rju katre, A'an Bita ni to kima, biye gbi bii ndindi nha ni meme giga a.
30 ௩0 அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களைப் பார்த்து: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.
Ndu mba gbron bi me gbyen fyi u han ma. Ninton kimayi mi hla ni bi han ba, guci gbi meme giga ba ndi lo ba ni nkpi ma zi wa baka gon ba; u alkama mba bi vu hi sru nimi wron mu.
31 ௩௧ வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
U Yesu ala tre ni mba ni misali garti, nda hla “Ba ban mulki shulu na wlo bii mustad wa indi ka cu ni rjuma.
32 ௩௨ அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லாச் செடிகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.
Iwlo yi ahi fyime yi ni mi bii a wawuu. u aye gbron nda tie vuvu zan imbru bari ma ni rjua. A katie kukron wa cicen bakaye tie koh mba ni ba lan ma.
33 ௩௩ வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே பிசைந்துவைத்தாள் என்றார்.
Yesu ala hla misali ri ni bawu, mulki shulu ahe to yist wa iwa ni ban wu tsi ni mwu mwu kango tra waka kpawu whu
34 ௩௪ இவைகளையெல்லாம் இயேசு மக்களோடு உவமைகளாகப் பேசினார்; உவமைகளில்லாமல், அவர்களோடு பேசவில்லை.
Ikpyi biyi wawu mbawu Yesu a tre ba ni misali ana tre kpye ri hama ni misali na.
35 ௩௫ என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
Ahe towa ni ndu ikpye wa ba tre ni nyu anebi a ndu njanji, wa'a hla, “mi bwuu nyumu ni misali. Mi hla ikpyi wa ba he rii'rii' rji ni tie ngbungbu'a”.
36 ௩௬ அப்பொழுது இயேசு மக்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குப் போனார். அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டுமென்று கேட்டார்கள்.
U Yesu ka' ka j'bu ndi ba don nda rihi ni mi koh. Mrli koh ma baka ye niwu nda tre, Hla ni tawu misali ni tu meme gigah u rjua”
37 ௩௭ அவர் மறுமொழியாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனிதகுமாரன்;
Yesu a saa' nda tre wawu wa a cu bii ndindia ahi vren ndi.
38 ௩௮ நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் பிள்ளைகள்; களைகள் சாத்தானுடைய பிள்ளைகள்;
Irju'a mba hi ngbungblu; u bii ndindia bahi mrli bi mulki. Gigah ba ba mrli u meme a.
39 ௩௯ அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். (aiōn )
U ni tie shishi wa a chu ba ahi shetan. Iham ahi ikle ngbungblu u bi han bahi malaiku (aiōn )
40 ௪0 ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். (aiōn )
Nawa ba vu gigah ba ka gon ni lu'a ani he tokime ni kle ngbungblu. (aiōn )
41 ௪௧ மனிதகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற எல்லா இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து,
Ivren ndi ni ton malaika ma, uba hivu kpi biwa ba nji latre mba tie meme rju ni mulki ma.
42 ௪௨ அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
Ba' ta' ba sru nimi kpentren lu, ni kima bayi nda tan nyiyren.
43 ௪௩ அப்பொழுது, நீதிமான்கள் தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.
Nikiyi me ndi bi tie njanyi ba kpan to rji ni mulki tie mba. Ndu wa ahe ton u wo a, ndu wo.
44 ௪௪ அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற புதையலுக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் பார்த்து, மறைத்து, அதைப்பற்றிய மகிழ்ச்சியினாலேபோய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்குகிறான்.
Mulki shulu ahe to (arziki) wa ba rii wu ni mi rju. Indi ri ka toh nda rii'u. Ahi ni ngri nda ka vu ikpyi wa ahe ba le'nda hi ka le rjua.
45 ௪௫ மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக இருக்கிறது.
Ngarli mulki shulu he to ndi u woh waa ani wa shishan tita.
46 ௪௬ அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைப் பார்த்து, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான்.
Wa aye fe shishan u nkpon bi ri, a vu kpyi u wo'ma le'rju nda le wu.
47 ௪௭ அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, எல்லாவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாக இருக்கிறது.
Ngarli mulki shulu ahe na rjirji u vu lambe wa ba ka ta yo ni mi kie kleme nda vu kpyi gbugbu wu ni san mba.
48 ௪௮ அது நிறைந்தபோது, மீனவர்கள் அதைக் கரைக்கு இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துவிடுவார்கள்.
Wa rjirji'a shu'a bi vu lambe ba baka gbi wu rju ye ni rah. Ba kuson nda hla bi ndindia sru nimi gbokrju mba u bi meme ba' ba vu ba ta'hlega.
49 ௪௯ இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, (aiōn )
Ani he towayi ni kle u ngbongblu'a. (aiōn )
50 ௫0 அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
Malaika baye nda ga bi meme rju ru bi tie zizi ba sruni kpentren lu nikiyi bayi nda tan nyiyren
51 ௫௧ பின்பு, இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம் ஆண்டவரே, என்றார்கள்.
Bi toh tu kpyi mba yi wawu wu? Mrli koh ma baka tre “E”
52 ௫௨ அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இப்படி இருக்கிறபடியால், பரலோகராஜ்யத்திற்கு அடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபண்டிதன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான் என்றார்.
Yesu a hla bawo, Ahe to kima na wa u riha ri wa ani ta katie vren koh u mulki shulu'a ani he to ndi wa ahe ni koh'a wa a ju kpyi bi ciceme ni bi sisama rju nimi kpyi ma wa ahe ba.
53 ௫௩ இயேசு இந்த உவமைகளைச் சொல்லிமுடித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு,
Niwayi, wa Yesu a tre ni misali ni bawu kle'a a wluhi don bubu kima.
54 ௫௪ தாம் வளர்ந்த ஊருக்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் செய்தார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?
Yesu ahi ni ko nklan u gbu ma nda kari ni tra Rji nda tsro indi mba. Ba wo tsro ma nda manji ma wakran (lie sisri) nda tre ndi “Iguyi afe toh tsro yi ni ngbengble u tie kpyi bi sisri yi rji mame?
55 ௫௫ இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர்கள் அல்லவா?
Indiyi ana vren guh u han kunkron a na? Wa ana yima yi ba yowu ndi Maryamu na? u' ana ba Yakubu ni Isuwu mba sima u Yahuza ba mrli vayi ma na?
56 ௫௬ இவன் சகோதரிகளெல்லோரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,
Ana mrli vayi ba mrli mba wa ba he nita na? Wa afe kpyi biyi wawu rji mame”
57 ௫௭ அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் அவமதிக்கப்படமாட்டான் என்றார்.
Baka tie nfu ni wu. Yesu a tre din “E ba tsri anabi ni urji ri na anigbu ma ni koh mayi ba kpau tsri.
58 ௫௮ அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால், அவர் அங்கே அதிக அற்புதங்களைச் செய்யவில்லை.
Ana tie kpyi bi manji ma gbugbu wu ni kima na ni tu ka kpayme mba ni tre Rji.