< லூக்கா 16 >
1 ௧ பின்னும் அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: செல்வந்தனாகிய ஒரு மனிதனுக்கு நிர்வாகி ஒருவன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய சொத்துக்களை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.
ⲁ̅ⲛⲁϥϫⲱ ⲇⲉ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲛⲛⲓⲙⲁⲑⲏⲧⲏⲥ ϫⲉ ⲛⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲣⲱⲙⲓ ⳿ⲛⲣⲁⲙⲁ⳿ⲟ ⳿ⲉⲟⲩⲟⲛ ⳿ⲛⲧⲁϥ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲛⲟⲩⲟⲓⲕⲟⲛⲟⲙⲟⲥ ⲟⲩⲟϩ ⲫⲁⲓ ⲩⲉⲣⲇⲓ⳿ⲁⲃⲟⲗⲓⲛ ⳿ⲙⲙⲟϥ ϧⲁⲧⲟⲧϥ ϩⲱⲥ ⲉϥϫⲱⲣ ⳿ⲛⲛⲉϥϩⲩⲡⲁⲣⲭ ⲟⲛⲧⲁ ⳿ⲉⲃⲟⲗ.
2 ௨ அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் நிர்வாகத்தின் கணக்கைக் கொடு, இனி நீ நிர்வாகியாக இருக்கக்கூடாது என்றான்.
ⲃ̅ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟϥ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲟⲩ ⲡⲉ ⲫⲁⲓ ⲉϯⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲣⲟϥ ⲉⲑⲃⲏⲧⲕ ⲙⲁ ⳿ⲡⲱⲡ ⳿ⲛϯⲙⲉⲧⲟⲓⲕⲟⲛⲟⲙⲟⲥ ⲟⲩ ⲅⲁⲣ ⳿ⲭⲛⲁⲉⲣⲟⲓⲕⲟⲛⲟⲙⲟⲥ ⲁⲛ ϫⲉ.
3 ௩ அப்பொழுது அந்த நிர்வாகி: நான் என்ன செய்வேன், என் எஜமான் நிர்வாக பொறுப்பிலிருந்து என்னை நீக்கிப்போடுகிறானே நிலத்தை பண்படுத்துவதற்கும்; எனக்குப் பெலனில்லை, பிச்சையெடுக்கவும் வெட்கப்படுகிறேன்.
ⲅ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ⳿ⲛϧⲏⲧϥ ⳿ⲛϫⲉ ⲡⲓⲟⲓⲕⲟⲛⲟⲙⲟⲥ ϫⲉ ⲟⲩ ⲡⲉϯⲛⲁⲁⲓϥ ⲡⲁϫ̅ⲥ̅ ⲛⲁⲱⲗⲓ ⳿ⲛϯⲙⲉⲧⲟⲓⲕⲟⲛⲟⲙⲟⲥ ⳿ⲛⲧⲟⲧ ⳿ⲛϯⲛⲁ⳿ϣϫⲉⲙϫⲟⲙ ⲁⲛ ⳿ⲉϭⲣⲏ ⲟⲩⲟϩ ϯϣⲓⲡⲓ ⳿ⲉϣⲁⲧ ⲙⲉⲑⲛⲁⲓ.
4 ௪ நிர்வாகப் பொறுப்பைவிட்டு நான் நீக்கப்படும்போது, என்னைத் தங்களுடைய வீடுகளில் ஏற்றுக்கொள்ளுவார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;
ⲇ̅ⲓ⳿ⲉⲙⲓ ϫⲉ ⲟⲩ ⲡⲉϯⲛⲁⲁⲓϥ ϩⲓⲛⲁ ϩⲟⲧⲁⲛ ⲁⲩϣⲁⲛϩⲓⲧ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ϯⲙⲉⲧⲟⲓⲕⲟⲛⲟⲙⲟⲥ ⳿ⲛⲥⲉϣⲟⲡⲧ ⳿ⲉⲣⲱⲟⲩ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲛⲟⲩⲏⲟⲩ.
5 ௫ தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.
ⲉ̅ⲟⲩⲟϩ ⲧⲁϥⲙⲟⲩϯ ⳿ⲉ⳿ⲫⲟⲩⲁⲓ ⳿ⲫⲟⲩⲁⲓ ⳿ⲛⲛⲏⲉⲧⲉ ⲟⲩⲟⲛ ⳿ⲛⲧⲉ ⲡⲉϥϫ̅ⲥ̅ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲛⲁϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲙⲡⲓϩⲟⲩⲓⲧ ϫⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲏⲣ ⳿ⲉⲣⲟⲕ ⳿ⲛⲧⲉ ⲡⲁϫ̅ⲥ̅.
6 ௬ அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது நிர்வாகி அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாக எழுது என்றான்.
ⲋ̅⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲣ̅ ⳿ⲙⲃⲁⲧⲟⲥ ⳿ⲛⲛⲉϩ ⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲙⲟ ⳿ⲉⲛⲉⲕ⳿ⲥϧⲁⲓ ⲟⲩⲟϩ ϩⲉⲙⲥⲓ ⳿ⲛⲭⲱⲗⲉⲙ ⳿ⲥϧⲁⲓ ⳿ⲉⲛ̅.
7 ௭ பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு மூட்டை கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
ⲍ̅ⲓⲧⲁ ⲡⲉϫⲁϥ ⲛⲕⲉⲟⲩⲁⲓ ϫⲉ ⳿ⲛⲑⲟⲕ ⲇⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲏⲣ ⳿ⲉⲣⲟⲕ ⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲣ̅ ⳿ⲛⲕⲟⲣⲟⲥ ⳿ⲛⲥⲟⲩ⳿ⲟ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲙⲟ ⳿ⲉⲛⲉⲕ⳿ⲥϧⲁⲓ ⲟⲩⲟϩ ⳿ⲥϧⲁⲓ ⳿ⲉⲡ̅.
8 ௮ அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். (aiōn )
ⲏ̅ⲩⲟϩ ⲁ Ⲡ⳪ ϣⲟⲩϣⲟⲩ ⳿ⲉϫⲉⲛ ⲡⲓⲟⲓⲕⲟⲛⲟⲙⲟⲥ ⳿ⲛⲧⲉ ϯ⳿ⲁⲇⲓⲕⲓⲁ ϫⲉ ⲁϥ⳿ⲓⲣⲓ ϧⲉⲛ ⲟⲩⲙⲉⲧⲥⲁⲃⲉ ϫⲉ ⲛⲓϣⲏⲣⲓ ⳿ⲛⲧⲉ ⲡⲁⲓⲉⲛⲉϩ ϩⲁⲛⲥⲁⲃⲉⲩ ⲛⲉ ⳿ⲉϩⲟⲧⲉ ⲓϣⲏⲣⲓ ⳿ⲛⲧⲉ ⳿ⲫⲟⲩⲱⲓⲛⲓ ϧⲉⲛ ⲧⲟⲩⲅⲉⲛⲉ⳿ⲁ. (aiōn )
9 ௯ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள். (aiōnios )
ⲑ̅ⲟⲩⲟϩ ⳿ⲁⲛⲟⲕ ϩⲱ ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ⲉ ⲙⲁⲑⲁⲙⲓ⳿ⲟ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲛϩⲁⲛ⳿ϣⲫⲏⲣ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲁⲙⲱⲛⲁ ⲛⲧⲉ ⳿ⲧ⳿ⲁⲇⲓⲕⲓⲁ ϩⲓⲛⲁ ϩⲟⲧⲁⲛ ⲁⲩϣⲁⲛⲙⲟⲩⲛⲕ ⳿ⲛⲧⲟⲩϣⲉⲡ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲛⲓ⳿ⲥⲕⲩⲛⲏ ⳿ⲛⲉⲛⲉϩ. (aiōnios )
10 ௧0 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாக இருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாக இருக்கிறான்.
ⲓ̅ⲡⲓⲡⲓⲥⲧⲟⲥ ϧⲉⲛ ⲟⲩⲕⲟⲩϫⲓ ⲟⲩⲡⲓⲥⲧⲟⲥ ⲟⲛ ⲡⲉ ϧⲉⲛ ⲟⲩⲛⲓϣϯ ⲟⲩⲟϩ ⲫⲏⲉⲧϭⲓ⳿ⲛϫⲟⲛⲥ ϧⲉⲛ ⲟⲩⲕⲟⲩϫⲓ ⳿ϥϭⲓ⳿ⲛϫⲟⲛⲥ ⲟⲛ ϧⲉⲛ ⲟⲩⲛⲓϣϯ.
11 ௧௧ அநீதியான உலகப்பொருளில் நீங்கள் உண்மையாக இல்லாவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடம் நேர்மையான சொத்தை ஒப்புவிப்பார்கள்?
ⲓ̅ⲁ̅ⲓⲥϫⲉ ⲟⲩⲛ ϧⲉⲛ ⲡⲓ⳿ⲁⲇⲓⲕⲟⲥ ⲙⲁⲙⲱⲛⲁ ⳿ⲙⲡⲉⲧⲉⲛϣⲱⲡⲓ ⲉⲣⲉⲧⲉⲛ⳿ⲛϩⲟⲧ ⲡⲓⲧⲁ⳿ⲫⲙⲏⲓ ⲇⲉ ⲛⲓⲙ ⲉⲑⲛⲁ⳿ϣⲧⲉⲛϩⲉⲧ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲉⲣⲟϥ.
12 ௧௨ வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டால், உங்களுக்கு ஏதாவதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?
ⲓ̅ⲃ̅ⲟⲩⲟϩ ⲓⲥϫⲉ ϧⲉⲛ ⲡⲉⲧⲉⲫⲱⲧⲉⲛ ⲁⲛ ⲡⲉ ⲙⲡⲉⲧⲉⲛϣⲱⲡⲓ ⲉⲣⲉⲧⲉⲛ⳿ⲛϩⲟⲧ ⲡⲉⲧⲉⲫⲱⲧⲉⲛ ⲛⲓⲙ ⲉⲑⲛⲁ⳿ϣⲧⲏⲓϥ ⲛⲱⲧⲉⲛ.
13 ௧௩ எந்த வேலைக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு பணிவிடை செய்யமுடியாது; ஒருவனைப் பகைத்து மற்றவனை நேசிப்பான், அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களாலே கூடாது என்றார்.
ⲓ̅ⲅ̅⳿ⲙⲙⲟⲛ ⳿ϩⲗⲓ ⳿ⲙⲃⲱⲕ ⲛⲁ⳿ϣϫⲉⲙϫⲟⲙ ⳿ⲛⲉⲣⲃⲱⲕ ⳿ⲛϫ̅ⲥ̅ ⲃ̅ ⲓⲉ ⲅⲁⲣ ⲛⲧⲉϥⲙⲉⲥⲧⲉ ⲟⲩⲁⲓ ⲟⲩⲟϩ ⲡⲓⲕⲉⲟⲩⲁⲓ ⳿ⲛⲧⲉϥⲙⲉⲛⲣⲓⲧϥ ⲓⲉ ⳿ⲛⲧⲉϥⲥⲱⲧⲉⲙ ⳿ⲛⲥⲁ ⲟⲩⲁⲓ ⲟⲩⲟϩ ⲡⲓⲕⲉⲟⲩⲁⲓ ⳿ⲛⲧⲉϥⲉⲣⲕⲁⲧⲁ⳿ⲫⲣⲟⲛⲓⲛ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲙⲙⲟⲛ ϣϫⲟⲙ ⳿ⲙⲙⲱⲧⲉⲛ ⳿ⲉⲉⲣⲃⲱⲕ ⳿ⲙⲫϯ ⲛⲉⲙ ⲙⲁⲙⲱⲛⲁ.
14 ௧௪ இவைகளையெல்லாம் பொருளாசைக்காரர்களாகிய பரிசேயர்களும் கேட்டு, அவரைப் பரிகாசம்பண்ணினார்கள்.
ⲓ̅ⲇ̅ⲛⲁⲩⲥⲱⲧⲉⲙ ⲇⲉ ⳿ⲉⲛⲁⲓ ⲧⲏⲣⲟⲩ ⳿ⲛϫⲉ ⲛⲓⲫⲁⲣⲓⲥⲉⲟⲥ ⲉⲧⲟⲓ ⳿ⲙⲙⲁⲓϩⲁⲧ ⲟⲩⲟϩ ⲁⲩⲉⲗⲕϣⲁⲓ ⳿ⲛⲥⲱϥ ⲡⲉ.
15 ௧௫ அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனிதர்கள் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்களுடைய இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனிதர்களுக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்குமுன்பாக அருவருப்பாக இருக்கிறது.
ⲓ̅ⲉ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲛⲉ ⲛⲏⲉⲧ⳿ⲑⲙⲁⲓⲟ ⳿ⲙⲙⲱⲟⲩ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲛⲛⲓⲣⲱⲙⲓ ⲫϯ ⲇⲉ ⳿ϥⲥⲱⲟⲩⲛ ⲛⲛⲉⲧⲉⲛϩⲏⲧ ϫⲉ ⳿ⲡϭⲓⲥⲓ ⲛϩⲏⲧ ⲉⲧϧⲉⲛ ⲡⲓⲣⲱⲙⲓ ⲟⲩⲥⲱϥ ⲡⲉ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲙⲫϯ.
16 ௧௬ நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் இருந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் நற்செய்தியாக அறிவிக்கப்பட்டுவருகிறது, அனைவரும் பலவந்தமாக அதில் பிரவேசிக்கிறார்கள்.
ⲓ̅ⲋ̅ⲡⲓⲛⲟⲙⲟⲥ ⲛⲉⲙ ⲛⲓⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ϣⲁ ⲓⲱⲁⲛⲛⲏⲥ ⲓⲥϫⲉⲛ ⲓⲥⲏⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ϯⲙⲉⲧⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ ⲫϯ ⲥⲉϩⲓⲱⲓϣ ⳿ⲙⲙⲟⲥ ⲟⲩⲟϩ ⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲥⲉϭⲓ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲛϫⲟⲛⲥ ⳿ⲉⲣⲟⲥ.
17 ௧௭ வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு ஒழிந்துபோவதைவிட, வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.
ⲓ̅ⲍ̅⳿ⲥⲙⲟⲧⲉⲛ ⲇⲉ ⳿ⲛⲧⲉ ⳿ⲧⲫⲉ ⲛⲉⲙ ⲡⲕⲁϩⲓ ⲥⲓⲛⲓ ⳿ⲉϩⲟⲧⲉ ⳿ⲛⲧⲉ ⲟⲩⲕⲉⲣⲉ⳿ⲁ ϩⲉⲓ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲡⲓⲛⲟⲙⲟⲥ.
18 ௧௮ தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்கிறவன் விபசாரம் செய்கிறான், கணவனாலே விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறான்.
ⲓ̅ⲏ̅ⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲉⲧϩⲓⲟⲩ⳿ⲓ ⳿ⲛⲧⲉϥ⳿ⲥϩⲓⲙⲓ ⳿ⲉⲃⲟⲗ ⲟⲩⲟϩ ⲉⲧϭⲓ ⳿ⲛⲕⲉⲟⲩⲁⲓ ⳿ϥⲟⲓ ⲛⲛⲱⲓⲕ ⲟⲩⲟϩ ⲫⲏⲉⲧϭⲓ ⳿ⲛⲑⲏ ⲉⲧϩⲱⲟⲩ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛⲧⲉⲛ ⲡⲉⲥϩⲁⲓ ⳿ϥⲟⲓ ⳿ⲛⲛⲱⲓⲕ.
19 ௧௯ செல்வந்தனாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையுயர்ந்த உடையும் அணிந்து, அநுதினமும் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருந்தான்.
ⲓ̅ⲑ̅ⲛⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲣⲱⲙⲓ ⲇⲉ ⲡⲉ ⳿ⲛⲣⲁⲙⲁ⳿ⲟ ⲟⲩⲟϩ ⲛⲉϣⲁϥϯ ⲛⲟⲩⲡⲟⲣⲫⲩⲣⲁ ϩⲓⲱⲧϥ ⲛⲉⲙ ⲟⲩϣⲉⲛⲥ ⲉϥⲟⲩⲛⲟϥ ⳿ⲙⲙⲏⲓⲛⲓ ϧⲉⲛ ⲟⲩⲥⲟⲗⲥⲉⲗ.
20 ௨0 லாசரு என்னும் பெயர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் சரீர முழுவதும் கொப்பளங்கள் நிறைந்தவனாக, அந்த செல்வந்தனுடைய வாசலின் அருகே தங்கி,
ⲕ̅ⲟⲩϩⲏⲕⲓ ⲇⲉ ϩⲱϥ ⳿ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲗⲁⲍⲁⲣⲟⲥ ⲉϥϩⲱⲟⲩ⳿ⲓ ⲉⲡⲉϥⲡⲩⲗⲱⲛ ⲉϥⲟⲓ ⳿ⲛϣⲁϣ.
21 ௨௧ அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாக இருந்தான்; நாய்கள் வந்து அவன் கொப்பளங்களை நக்கிற்று.
ⲕ̅ⲁ̅ⲟⲩⲟϩ ⲉϥⲉⲣ⳿ⲉⲡⲓⲑⲩⲙⲓⲛ ⳿ⲉⲙⲁϩ ϧⲏⲧϥ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲏ ⳿ⲉϣⲁⲩϩⲉⲓ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓ ϯ⳿ⲧⲣⲁⲡⲉⲍⲁ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲣⲁⲙⲁ⳿ⲟ ⲗⲗⲁ ⲓⲕⲉⲟⲩϩⲱⲣ ⲛⲁⲩⲛⲏⲟⲩ ⲉⲩⲗⲱϫϩ ⳿ⲛⲛⲉϥϣⲁϣ.
22 ௨௨ பின்பு அந்த தரித்திரன் மரித்து, தேவதூதர்களால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; செல்வந்தனும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.
ⲕ̅ⲃ̅ⲁⲥϣⲱⲡⲓ ⲇⲉ ⲉⲑⲣⲉϥⲙⲟⲩ ⳿ⲛϫⲉ ⲡⲓϩⲏⲕⲓ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲟⲩⲟⲗϥ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲉⲛ ϩⲁⲛⲁⲅⲅⲉⲗⲟⲥ ⳿ⲉⲕⲉⲛϥ ⳿ⲛⲁⲃⲣⲁⲁⲙ ⲁϥⲙⲟⲩ ⲇⲉ ϩⲱϥ ⳿ⲛϫⲉ ⲡⲓⲣⲁⲙⲁ⳿ⲟ ⲟⲩⲟϩ ⲁⲩⲕⲟⲥϥ.
23 ௨௩ பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். (Hadēs )
ⲕ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ϧⲉⲛ ⲁⲙⲉⲛϯ ⲉⲧⲁϥϥⲁⲓ ⳿ⲛⲛⲉϥⲃⲁⲗ ⳿ⲉ⳿ⲡϣⲱⲓ ⲉϥⲭⲏ ⲉⲛ ϩⲁⲛ⳿ⲙⲕⲁⲩϩ ⲁϥⲛⲁⲩ ⳿ⲉⲁⲃⲣⲁⲁⲙ ϩⲓ⳿ⲫⲟⲩⲉⲓ ⲟⲩⲟϩ ⲗⲁⲍⲁⲣⲟⲥ ϧⲉⲛ ⲕⲉⲛϥ. (Hadēs )
24 ௨௪ அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாக்கைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினியில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
ⲕ̅ⲇ̅ⲟⲩⲟϩ ⳿ⲛⲑⲟϥ ⲉⲧⲁϥⲙⲟⲩϯ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲡⲁⲓⲱⲧ ⲁⲃⲣⲁⲁⲙ ⲁⲓ ⲛⲏⲓ ⲟⲩⲟϩ ⲟⲩⲱⲣⲡ ⳿ⲛⲗⲁⲍⲁⲣⲟⲥ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉϥⲥⲉⲡ ⳿ϩⲑⲏϥ ⳿ⲙⲡⲉϥⲧⲏⲃ ⳿ⲙⲙⲱⲟⲩ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉϥϯ⳿ⲭⲃⲟⲃ ⳿ⲙⲡⲁⲗⲁⲥ ϫⲉ ϯⲙⲟⲕϩ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ϧⲉⲛ ⲡⲁⲓϣⲁϩ.
25 ௨௫ அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடு இருக்கும் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
ⲕ̅ⲉ̅ⲡⲉϫⲉ ⲁⲃⲣⲁⲁⲙ ϫⲉ ⲡⲁϣⲏⲣⲓ ⲁⲣⲓ⳿ⲫⲙⲉⲩⲓ ϫⲉ ⲁⲕⲟⲩⲱ ⲉⲕϭⲓ ⳿ⲛⲛⲉⲕⲁⲅⲁⲑⲟⲛ ϧⲉⲛ ⲡⲉⲕⲱⲛϧ ⲟⲩⲟϩ ⲗⲁⲍⲁⲣⲟⲥ ϩⲱϥ ⳿ⲛⲛⲓⲡⲉⲧϩⲱⲟⲩ ϯⲛⲟⲩ ⲇⲉ ⲥⲉⲑⲱⲧ ⳿ⲙⲡⲉϥϩⲏⲧ ⳿ⲙⲡⲁⲓⲙⲁ ⳿ⲛⲑⲟⲕ ⲇⲉ ⲭⲏ ϧⲉⲛ ⲟⲩ⳿ⲙⲕⲁϩ.
26 ௨௬ அதுவுமல்லாமல், இந்த இடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அந்த இடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளவு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.
ⲕ̅ⲋ̅ⲟⲩⲟϩ ϧⲉⲛ ⲛⲁⲓ ⲧⲏⲣⲟⲩ ⲟⲩⲟⲛ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛϣⲓⲕ ⲉϥⲧⲁϫⲣⲏⲟⲩⲧ ⲩⲧⲱⲛ ⲛⲉⲙⲱⲧⲉⲛ ϩⲟⲡⲱⲥ ⲛⲏⲉⲑⲟⲩⲱϣ ⳿ⲉⲥⲓⲛⲓ ⳿ⲉⲃⲟⲗ ⲧⲁⲓ ϩⲁⲣⲱⲧⲉⲛ ⳿ⲛⲧⲟⲩ⳿ϣⲧⲉⲙϫⲉⲙϫⲟⲙ ⲟⲩⲇⲉ ⲛⲏⲉⲧϩⲁⲣⲱⲧⲉⲛ ⳿ⲉⲉⲣϫⲓⲛⲓⲟⲣ ϩⲁⲣⲟⲛ.
27 ௨௭ அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரர்கள் உண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்திற்கு வராதபடி, அவன்போய் அவர்களுக்கு சாட்சியாக அறிவிக்கும்படியாக,
ⲕ̅ⲍ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ϫⲉ ϯϯϩⲟ ⳿ⲉⲣⲟⲕ ⲡⲁⲓⲱⲧ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉⲕⲟⲩⲟⲣⲡϥ ⳿ⲉ⳿ⲡⲏⲓ ⳿ⲙⲡⲁⲓⲱⲧ.
28 ௨௮ நீர் அவனை என் தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
ⲕ̅ⲏ̅ⲟⲩⲟⲛ ⲅⲁⲣ ⲉ̅ ⳿ⲛⲥⲟⲛ ⳿ⲛⲧⲏⲓ ϩⲟⲡⲱⲥ ⳿ⲛⲧⲉϥⲉⲣⲙⲉⲑⲣⲉ ⲛⲱⲟⲩ ϩⲓⲛⲁ ⳿ⲛⲥⲉ⳿ϣⲧⲉⲙ⳿ⲓ ϩⲱⲟⲩ ⳿ⲉⲡⲁⲓⲙⲁ ⳿ⲛⲧⲉ ⲡⲁⲓ⳿ⲙⲕⲁϩ.
29 ௨௯ ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.
ⲕ̅ⲑ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲁⲃⲣⲁⲁⲙ ϫⲉ ⲟⲩⲟⲛ ⳿ⲛⲧⲱⲟⲩ ⳿ⲙⲙⲁⲩ ⲱ⳿ⲩⲥⲏⲥ ⲛⲉⲙ ⲛⲓⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲙⲁⲣⲟⲩⲥⲱⲧⲉⲙ ⳿ⲛⲥⲱⲟⲩ.
30 ௩0 அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப்போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.
ⲗ̅⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⳿ⲙⲙⲟⲛ ⲡⲁⲓⲱⲧ ⲁⲃⲣⲁⲁⲙ ⲁⲗⲗⲁ ⲉϣⲱⲡ ⲁⲣⲉϣⲁⲛ ⲟⲩⲁⲓ ⲉ ⲛⲁϥ ϩⲁⲣⲱⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲏⲉⲑⲙⲱⲟⲩⲧ ⲥⲉⲛⲁⲉⲣⲙⲉⲧⲁⲛⲟⲓⲛ.
31 ௩௧ அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.
ⲗ̅ⲁ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲁϥ ϫⲉ ⲓⲥϫⲉ ⲥⲉⲛⲁⲥⲱⲧⲉⲙ ⲁⲛ ⳿ⲛⲥⲁ ⲙⲱ⳿ⲩⲥⲏⲥ ⲛⲉⲙ ⲓ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲟⲩⲇⲉ ⲁⲣⲉϣⲁⲛ ⲟⲩⲁⲓ ⲧⲱⲛϥ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲏⲉⲑⲙⲱⲟⲩⲧ ⲡⲟⲩϩⲏⲧ ⲛⲁⲑⲱⲧ ⲁⲛ