< யோனா 2 >
1 ௧ அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன்னுடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து:
I modlil se Jonáš Hospodinu Bohu svému v střevách té ryby,
2 ௨ என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். (Sheol )
A řekl: Z ssoužení svého volal jsem k Hospodinu, a ozval se mi; z břicha hrobu křičel jsem, a vyslyšel jsi hlas můj. (Sheol )
3 ௩ கடலின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
Nebo jsi mne uvrhl do hlubiny, do prostřed moře, a řeka obklíčila mne; všecka vlnobití tvá i rozvodnění tvá na mne se svalila.
4 ௪ நான் உமது கண்களுக்கு எதிரே இல்லாதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆனாலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.
Bylť jsem již řekl: Vyhnán jsem od očí tvých, ale ještěť pohledím na tvůj svatý chrám.
5 ௫ தண்ணீர்கள் என்னுடைய ஜீவனை எடுக்க என்னை நெருக்கினது; ஆழங்கள் என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.
Obklíčily mne vody až k duši, propast obklíčila mne, lekno otočilo se okolo hlavy mé.
6 ௬ மலைகளின் அடிவாரங்கள்வரைக்கும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாக இருந்தது; ஆனாலும் என் தேவனாகிய யெகோவாவே, நீர் என் உயிரை அழிவிலிருந்து காப்பாற்றினீர்.
Až k spodkům hor dostal jsem se, země závorami svými zalehla mi na věčnost, ty jsi však vysvobodil od porušení život můj, ó Hospodine Bože můj.
7 ௭ என்னுடைய ஆத்துமா எனக்குள் சோர்ந்துபோகும்போது யெகோவாவை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.
Když se svírala ve mně duše má, na Hospodina jsem se rozpomínal, i přišla k tobě modlitba má do chrámu svatého tvého.
8 ௮ பொய்யான விக்கிரக தெய்வங்களைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் புறக்கணிக்கிறார்கள்.
Kteříž ostříhají marností pouhých, dobroty Boží se zbavují.
9 ௯ நானோ, துதியின் சத்தத்தோடு உமக்குப் பலியிடுவேன்; நான் செய்த பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு யெகோவாவுடையது என்றான்.
Já pak s hlasem díkčinění obětovati budu tobě; což jsem slíbil, splním. Hojné vysvobození jest u Hospodina.
10 ௧0 யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிப்போட்டது.
Rozkázal pak byl Hospodin rybě té, i vyvrátila Jonáše na břeh.