< யோபு 9 >

1 அதற்கு யோபு மறுமொழியாக:
Mas Jó respondeu, dizendo:
2 “ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்; தேவனுக்கு முன்பாக மனிதன் நீதிமானாயிருப்பதெப்படி?
Na verdade sei que é assim; mas como pode o ser humano ser justo diante de Deus?
3 அவர் அவனுடன் வழக்காட விருப்பமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு பதில் சொல்லமாட்டானே.
Ainda se quisesse disputar com ele, não conseguiria lhe responder uma coisa sequer em mil.
4 அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?
Ele é sábio de coração, e poderoso em forças. Quem se endureceu contra ele, e teve paz?
5 அவர் மலைகளை திடீரென்று பெயர்க்கிறார்; தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார்.
Ele transporta as montanhas sem que o saibam; e as transtorna em seu furor.
6 பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் இடத்திலிருந்து அசையவைக்கிறார்.
Ele remove a terra de seu lugar, e faz suas colunas tremerem.
7 அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார்.
Ele dá ordem ao sol, e ele não brilha; e sela as estrelas.
8 அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.
Ele é o que sozinho estende os céus, e anda sobre as alturas do mar.
9 அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும், அறுமீனையும், தெற்கு மண்டலங்களையும் உண்டாக்கினவர்.
Ele é o que fez a Usra, o Órion, as Plêiades, e as constelações do sul.
10 ௧0 ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
Ele é o que faz coisas grandes e incompreensíveis, e inúmeras maravilhas.
11 ௧௧ இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைப் பார்க்கமுடியவில்லை; அவர் கடந்துபோகிறார், நான் அவரை அறியவில்லை.
Eis que ele passa diante de mim, sem que eu não o veja; ele passará diante de mim, sem que eu saiba.
12 ௧௨ இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை தடுப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?
Eis que, quando ele toma, quem pode lhe impedir? Quem poderá lhe dizer: O que estás fazendo?
13 ௧௩ தேவன் தம்முடைய கோபத்தை நிறுத்தமாட்டார்; ஒருவருக்கொருவர் துணைநிற்கிற அகங்காரிகள் அவருக்கு அடங்கவேண்டும்.
Deus não reverterá sua ira, e debaixo dele se encurvam os assistentes de Raabe.
14 ௧௪ இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், அவருடன் வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளவும் நான் எம்மாத்திரம்?
Como poderia eu lhe responder, e escolher minhas palavras contra ele?
15 ௧௫ நான் நீதிமானாயிருந்தாலும் அவருடன் வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்காகக் கெஞ்சுவேன்.
A ele, ainda que eu fosse justo, não lhe responderia; a meu juiz pediria misericórdia.
16 ௧௬ நான் கெஞ்சுவதினாலும், அவர் எனக்கு பதில் கொடுத்தாலும், அவர் என் விண்ணப்பத்தைக் கேட்டார் என்று நம்பமாட்டேன்.
Ainda que eu lhe chamasse, e ele respondesse, mesmo assim não creria que ele tivesse dado ouvidos à minha voz.
17 ௧௭ அவர் புயலினால் என்னை முறிக்கிறார்; காரணமில்லாமல் அநேக காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.
Pois ele tem me quebrantado com tempestade, e multiplicado minhas feridas sem causa.
18 ௧௮ நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், கசப்பினால் என்னை நிரப்புகிறார்.
Ele não me permite respirar; em vez disso, me farta de amarguras.
19 ௧௯ பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால் என் பக்கத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்?
Quanto às forças, eis que ele é forte; e quanto ao juízo, [ele diria]: Quem me convocará?
20 ௨0 நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.
Ainda que eu seja justo, minha boca me condenaria; se eu fosse inocente, então ela me declararia perverso.
21 ௨௧ நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்; என் வாழ்க்கையை வெறுப்பேன்.
Mesmo se eu for inocente, não estimo minha alma; desprezo minha vida.
22 ௨௨ ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார்.
É tudo a mesma coisa; por isso digo: ele consome ao inocente e ao perverso.
23 ௨௩ வாதையானது உடனே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப் பார்த்து சிரிக்கிறார்.
Quando o açoite mata de repente, ele ri do desespero dos inocentes.
24 ௨௪ உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், வேறு யார் இதைச் செய்கிறார்.
A terra está entregue nas mãos dos perversos. Ele cobre o rosto de seus juízes. Se não é ele, então quem é?
25 ௨௫ என் நாட்கள் தபால்காரர் ஓட்டத்திலும் வேகமாயிருக்கிறது; அவைகள் நன்மையைப் பார்க்காமல் பறந்துபோகும்.
Meus dias foram mais rápidos que um homem que corre; fugiram, e não viram o bem.
26 ௨௬ அவைகள் வேகமாக ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது.
Passaram como barcos de papiro, como a águia que se lança à comida.
27 ௨௭ என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால்,
Se disser: Esquecerei minha queixa, mudarei o aspecto do meu rosto, e sorrirei,
28 ௨௮ என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; என்னைக் குற்றமில்லாதவனாக நினைக்கமாட்டீர் என்று அறிவேன்.
[Ainda] teria pavor de todas as minhas dores; [pois] sei que não me terás por inocente.
29 ௨௯ நான் பொல்லாதவனாயிருந்தால், வீணாகப் போராடவேண்டியது என்ன?
Se eu já estou condenado, então para que eu sofreria em vão?
30 ௩0 நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளை சோப்பினால் சுத்தம்செய்தாலும்,
Ainda que me lave com água de neve, e limpe minhas mãos com sabão,
31 ௩௧ நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் உடையே என்னை அருவருக்கும்.
Então me submergirias no fosso, e minhas próprias vestes me abominariam.
32 ௩௨ நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும், நாங்கள் ஒன்றுகூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனிதன் அல்லவே.
Pois ele não é homem como eu, para que eu lhe responda, e venhamos juntamente a juízo.
33 ௩௩ எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க நடுவர் எங்களுக்குள் இல்லையே.
Não há entre nós árbitro que ponha sua mão sobre nós ambos,
34 ௩௪ அவர் தமது கோலை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கவைக்காதிருப்பதாக.
Tire de sobre mim sua vara, e seu terror não me espante.
35 ௩௫ அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.
[Então] eu falaria, e não teria medo dele. Pois não está sendo assim comigo.

< யோபு 9 >