< யோபு 36 >

1 பின்னும் எலிகூ:
És folytatá Elihu, és monda:
2 “நான் பேசிமுடியும்வரை சற்றேபொறும்; இன்னும் தேவனின் சார்பாக நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக் காண்பிப்பேன்.
Várj még egy kevéssé, majd felvilágosítlak, mert az Istenért még van mit mondanom.
3 நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கச்செய்வேன்.
Tudásomat messzünnen veszem, és az én teremtőmnek igazat adok.
4 மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்; உம்முடன் பேசுகிறவன் அறிவில் தேறினவன்.
Mert az én beszédem bizonyára nem hazugság; tökéletes tudású ember áll melletted.
5 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.
Ímé, az Isten hatalmas, még sem vet meg semmit; hatalmas az ő lelkének ereje.
6 அவர் துன்மார்க்கரைப் பிழைக்க விடாதிருக்கிறார்; சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.
Nem tartja meg a gonosznak életét, de a szegénynek igaz törvényt teszen.
7 அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களுடன் சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த இடத்தில் என்றைக்கும் அமர்ந்திருக்கவும் செய்கிறார்.
Nem veszi le az igazról szemeit, sőt a királyok mellé, a trónba ülteti őket örökre, hogy felmagasztaltassanak.
8 அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும்,
És ha békókba veretnek, és fogva tartatnak a nyomorúság kötelein:
9 அவர், அவர்களுடைய செயல்களையும், அதிகமான அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி,
Tudtokra adja cselekedetöket, és vétkeiket, hogyha elhatalmaztak rajtok.
10 ௧0 அக்கிரமத்தைவிட்டுத் திரும்பும்படி அவர்கள் காது கேட்க கடிந்துகொள்ளுகிறார்.
Megnyitja füleiket a feddőzésnek és megparancsolja, hogy a vétekből megtérjenek:
11 ௧௧ அவர்கள் அடங்கி அவரை ஆராதித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருடங்களைச் செழிப்பான வாழ்வாகவும் போக்குவார்கள்.
Ha engednek és szolgálnak néki, napjaikat jóban végzik el, és az ő esztendeiket gyönyörűségekben.
12 ௧௨ அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி, ஞானம் அடையாமல் இறந்துபோவார்கள்.
Ha pedig nem engednek, fegyverrel veretnek által, és tudatlanságban múlnak ki.
13 ௧௩ மாயமுள்ள இருதயத்தார் கோபத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போதும் தேவனைக் கெஞ்சிக் கூப்பிடுவதில்லை.
De az álnok szívűek haragot táplálnak, nem kiáltanak, mikor megkötözi őket.
14 ௧௪ அவர்கள் இளவயதிலே இறந்துபோவார்கள்; இழிவானவர்களுக்குள்ளே அவர்கள் இறப்பார்கள்.
Azért ifjúságukban hal meg az ő lelkök, és életök a paráznákéhoz hasonló.
15 ௧௫ சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு விலக்கி, அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கும்போது அவர்கள் செவியைத் திறக்கிறார்.
A nyomorultat megszabadítja az ő nyomorúságától, és a szorongattatással megnyitja fülöket.
16 ௧௬ அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்திலிருந்து விலக்கி, இடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய உணவுப்பந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.
Téged is kiszabadítana az ínség torkából tág mezőre, a hol nincs szorultság, és asztalod étke kövérséggel lenne rakva;
17 ௧௭ ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்; நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும்.
De ha gonosz ítélettel vagy tele, úgy utolérnek az ítélet és igazság.
18 ௧௮ கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால் அவர் உம்மை ஒரு அடியினால் அழித்துவிடாமலிருக்க எச்சரிக்கையாயிரும்; அப்பொழுது மீட்கும் பொருளை அதிகமாகக் கொடுத்தாலும் அதற்கு நீர் தப்பமாட்டீர்.
Csakhogy a harag ne ragadjon téged csúfkodásra, és a nagy váltságdíj se tántorítson el.
19 ௧௯ உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே.
Ad-é valamit a te gazdagságodra? Sem aranyra, sem semmiféle erőfeszítésre!
20 ௨0 மக்கள் தங்கள் இடத்தைவிட்டு அழிந்துபோகச்செய்கிற இரவை விரும்பாதிரும்.
Ne kívánjad az éjszakát, a mely népeket mozdít ki helyökből.
21 ௨௧ பாவத்தைத் திரும்பவும் செய்யாமல் எச்சரிக்கையாயிரும்; உபத்திரவத்தைவிட அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே.
Vigyázz! ne pártolj a bűnhöz, noha azt a nyomorúságnál jobban szereted.
22 ௨௨ இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப் போல் போதிக்கிறவர் யார்?
Ímé, mily fenséges az Isten az ő erejében; kicsoda az, a ki úgy tanítson, mint ő?
23 ௨௩ அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்? நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்?
Kicsoda szabta meg az ő útjait, vagy ki mondhatja azt: Igazságtalanságot cselekedtél?
24 ௨௪ மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும்.
Legyen rá gondod, hogy magasztaljad az ő cselekedetét, a melyről énekelnek az emberek!
25 ௨௫ எல்லா மனிதரும் அதைக் காண்கிறார்களே; தூரத்திலிருந்து அது மனிதருக்கு வெளிப்படுகிறது.
Minden ember azt szemléli; a halandó távolról is látja.
26 ௨௬ இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருடங்களின் தொகை எண்ணமுடியாதது.
Ímé, az Isten fenséges, mi nem ismerhetjük őt! esztendeinek száma sem nyomozható ki.
27 ௨௭ அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது.
Hogyha magához szívja a vízcseppeket, ködéből mint eső cseperegnek alá,
28 ௨௮ அதை மேகங்கள் பெய்து, மனிதர்கள் மேல் அதிகமாகப் பொழிகிறது.
A melyet a fellegek özönnel öntenek, és hullatnak le temérdek emberre.
29 ௨௯ மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?
De sőt értheti-é valaki a felhő szétoszlását, az ő sátorának zúgását?
30 ௩0 இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்; சமுத்திரத்தை இருளால் மூடுகிறார்.
Ímé, szétterjeszti magára az ő világosságát, és ráborítja a tengernek gyökereit.
31 ௩௧ அவைகளால் மக்களை தண்டிக்கிறவரும், ஆகாரம்கொடுத்து காப்பாற்றுகிறவருமாயிருக்கிறார்.
Mert ezek által ítéli meg a népeket, ád eledelt bőségesen.
32 ௩௨ அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, அது எவைகளையெல்லாம் அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார்.
Kezeit elborítja villámlással, és kirendeli a lázadó ellen.
33 ௩௩ அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும், புயல் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் தெரியப்படுத்தும்.
Az ő dörgése ad hírt felőle, mint a barom a közeledő viharról.

< யோபு 36 >