< எரேமியா 8 >
1 ௧ அக்காலத்தில் யூதாவினுடைய ராஜாக்களின் எலும்புகளையும், அவர்களுடைய பிரபுக்களின் எலும்புகளையும், ஆசாரியர்களின் எலும்புகளையும், தீர்க்கதரிசிகளின் எலும்புகளையும் எருசலேமுடைய குடிமக்களின் எலும்புகளையும், அவர்களுடைய கல்லறைகளிலிருந்து எடுத்து,
В то время, говорит Господь, выбросят кости царей Иуды, и кости князей его, и кости священников, и кости пророков, и кости жителей Иерусалима из гробов их;
2 ௨ அவர்கள் நேசித்ததும், சேவித்ததும், பின்பற்றினதும், தேடினதும், பணிந்துகொண்டதுமாயிருந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், வானத்தின் சர்வசேனைக்கும் முன்பாக அவைகளைப் பரப்பிவைப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவைகள் வாரி அடக்கம்செய்யப்படாமல் பூமியின்மேல் எருவாகும்.
и раскидают их пред солнцем и луною и пред всем воинством небесным, которых они любили и которым служили и в след которых ходили, которых искали и которым поклонялись; не уберут их и не похоронят: они будут навозом на земле.
3 ௩ இந்தத் துஷ்ட வம்சத்தில் மீதியாயிருந்து, என்னால் எல்லா இடங்களிலும் துரத்திவிடப்பட்டு மீந்திருக்கிற யாவருக்கும், ஜீவனைப்பார்க்கிலும் மரணமே விருப்பமாயிருக்குமென்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
И будут смерть предпочитать жизни все остальные, которые останутся от этого злого племени во всех местах, куда Я изгоню их, говорит Господь Саваоф.
4 ௪ நீ அவர்களை நோக்கி: விழுந்தவர்கள் எழுந்திருக்கிறதில்லையோ? வழிதப்பிப் போனவர்கள் திரும்புகிறதில்லையோ?
И скажи им: так говорит Господь: разве, упав, не встают и, совратившись с дороги, не возвращаются?
5 ௫ ஆனாலும் எருசலேமியராகிய இந்த மக்கள் என்றைக்கும் வழிதப்பிப்போகிறதென்ன? கபடத்தை உறுதியாகப் பிடித்திருக்கிறார்கள்; திரும்பமாட்டோம் என்கிறார்கள்.
Для чего этот народ, Иерусалим, находится в упорном отступничестве? они крепко держатся обмана и не хотят обратиться.
6 ௬ நான் கவனித்துக் கேட்டேன், அவர்கள் யதார்த்தம் பேசவில்லை; என்ன செய்தேனென்று சொல்லி, தன் பொல்லாப்பினிமித்தம் மனஸ்தாபப்படுகிறவன் ஒருவனுமில்லை; போருக்குள் பாய்கிற குதிரையைப்போல அவரவர் வேகமாய் ஓடிப்போனார்கள்.
Я наблюдал и слушал: не говорят они правды, никто не раскаивается в своем нечестии, никто не говорит: “что я сделал?”; каждый обращается на свой путь, как конь, бросающийся в сражение.
7 ௭ ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் மக்களோ யெகோவாவின் நியாயத்தை அறியார்கள் என்று யெகோவா உரைக்கிறாரென்று சொல்.
И аист под небом знает свои определенные времена, и горлица, и ласточка, и журавль наблюдают время, когда им прилететь; а народ Мой не знает определения Господня.
8 ௮ நாங்கள் ஞானிகளென்றும், யெகோவாவுடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி? மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்குகிறது.
Как вы говорите: “мы мудры, и закон Господень у нас”? А вот, лживая трость книжников и его превращает в ложь.
9 ௯ ஞானிகள் வெட்கி, கலங்கிப் பிடிபடுவார்கள்; இதோ, யெகோவாவுடைய சொல்லை வெறுத்துப்போட்டார்கள், அவர்களுக்கு ஞானமேது?
Посрамились мудрецы, смутились и запутались в сеть: вот, они отвергли слово Господне; в чем же мудрость их?
10 ௧0 ஆகையால் அவர்களுடைய பெண்களை அந்நியருக்கும், அவர்களுடைய வயல்களை அவைகளைக் கட்டிக்கொள்பவர்களுக்கும் கொடுப்பேன்; அவர்களில் சிறியோர் தொடங்கிப் பெரியோர்வரை ஒவ்வொருவரும் பொருளாசைக்காரராயிருக்கிறார்கள்; தீர்க்கதரிசிகள் தொடங்கி ஆசாரியர்கள்வரை ஒவ்வொருவரும் பொய்யராயிருந்து,
За то жен их отдам другим, поля их - иным владетелям; потому что все они, от малого до большого, предались корыстолюбию; от пророка до священника - все действуют лживо.
11 ௧௧ சமாதானமில்லாதிருந்தும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் மக்களாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.
И врачуют рану дочери народа Моего легкомысленно, говоря: “мир, мир!”, а мира нет.
12 ௧௨ தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? ஆனால் வெட்கப்படமாட்டார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Стыдятся ли они, делая мерзости? нет, они нисколько не стыдятся и не краснеют. За то падут они между падшими; во время посещения их будут повержены, говорит Господь.
13 ௧௩ அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; திராட்சைச்செடியில் குலைகள் இராது, அத்திமரத்தில் பழங்கள் இராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும் என்று சொல்.
До конца оберу их, говорит Господь, не останется ни одной виноградины на лозе, ни смоквы на смоковнице, и лист опадет, и что Я дал им, отойдет от них.
14 ௧௪ நாம் சும்மாயிருப்பானேன்? கூடி வாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் நுழைந்து, அங்கே சங்காரமாவோம்; நாம் யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய யெகோவா நம்மை அழித்து, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.
“Что мы сидим? собирайтесь, пойдем в укрепленные города, и там погибнем; ибо Господь Бог наш определил нас на погибель и дает нам пить воду с желчью за то, что мы грешили пред Господом”.
15 ௧௫ சமாதானத்திற்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கிய காலத்திற்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
Ждем мира, а ничего доброго нет, - времени исцеления, и вот ужасы.
16 ௧௬ தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்சு சத்தம் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த குதிரைகள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் மக்களையும் பட்சிப்பார்கள்.
От Дана слышен храп коней его, от громкого ржания жеребцов его дрожит вся земля; и придут и истребят землю и все, что на ней, город и живущих в нем.
17 ௧௭ மெய்யாய், இதோ, தடைகட்டப்படாத சர்ப்பங்களையும், கட்டுவிரியன்களையும் உங்களுக்குள் அனுப்புகிறேன், அவைகள் உங்களைக் கடிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்.
Ибо вот, Я пошлю на вас змеев, василисков, против которых нет заговариванья, и они будут уязвлять вас, говорит Господь.
18 ௧௮ நான் சஞ்சலத்தில் ஆறுதலடையப்பார்த்தும், என் இருதயம் பலவீனமாயிருக்கிறது.
Когда утешусь я в горести моей! сердце мое изныло во мне.
19 ௧௯ இதோ, சீயோனில் யெகோவா இல்லையோ? அதில் ராஜா இல்லையோ? என்று, என் மக்களாகிய மகள் தூரதேசத்திலிருந்து கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது; ஆனால், அவர்கள் தங்கள் சுரூபங்களினாலும் அந்நியரின் மாயைகளினாலும் எனக்குக் கோபமுண்டாக்கினது என்ன என்கிறார்.
Вот, слышу вопль дщери народа Моего из дальней страны: разве нет Господа на Сионе? разве нет Царя его на нем? - Зачем они подвигли Меня на гнев своими идолами, чужеземными, ничтожными?
20 ௨0 அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ காப்பாற்றப்படவில்லை.
Прошла жатва, кончилось лето, а мы не спасены.
21 ௨௧ என் மக்களாகிய மகளின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.
О сокрушении дщери народа моего я сокрушаюсь, хожу мрачен, ужас объял меня.
22 ௨௨ கீலேயாத்திலே பிசின் தைலமருந்து இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் மக்களாகிய மகள் சுகமடையாமற்போனாள்?
Разве нет бальзама в Галааде? разве нет там врача? Отчего же нет исцеления дщери народа моего?