< எரேமியா 16 >

1 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
וַיְהִי דְבַר־יְהֹוָה אֵלַי לֵאמֹֽר׃
2 நீ பெண்ணைத் திருமணம் செய்யவேண்டாம்; இவ்விடத்தில் உனக்கு மகன்களும் மகள்களும் இருக்கவேண்டாம் என்றார்.
לֹא־תִקַּח לְךָ אִשָּׁה וְלֹֽא־יִהְיוּ לְךָ בָּנִים וּבָנוֹת בַּמָּקוֹם הַזֶּֽה׃
3 இவ்விடத்தில் பிறக்கிற மகன்களையும் மகள்களையும், இந்தத் தேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற தகப்பன்களையும் குறித்துக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்,
כִּי־כֹה ׀ אָמַר יְהֹוָה עַל־הַבָּנִים וְעַל־הַבָּנוֹת הַיִּלּוֹדִים בַּמָּקוֹם הַזֶּה וְעַֽל־אִמֹּתָם הַיֹּלְדוֹת אוֹתָם וְעַל־אֲבוֹתָם הַמּוֹלִדִים אוֹתָם בָּאָרֶץ הַזֹּֽאת׃
4 மகா கொடிய வியாதிகளால் இறப்பார்கள், அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்செய்வாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் இறந்து போவார்கள்; அவர்களுடைய உடல் வானத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
מְמוֹתֵי תַחֲלֻאִים יָמֻתוּ לֹא יִסָּֽפְדוּ וְלֹא יִקָּבֵרוּ לְדֹמֶן עַל־פְּנֵי הָאֲדָמָה יִהְיוּ וּבַחֶרֶב וּבָֽרָעָב יִכְלוּ וְהָיְתָה נִבְלָתָם לְמַאֲכָל לְעוֹף הַשָּׁמַיִם וּלְבֶהֱמַת הָאָֽרֶץ׃
5 ஆகையால், நீ துக்கவீட்டில் நுழையாமலும், புலம்புவதற்க்குப்போகாமலும் அவர்களுக்கு பரிதாபப்படாமலும் இருப்பாயாக என்று யெகோவா சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த மக்களைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
כִּי־כֹה ׀ אָמַר יְהֹוָה אַל־תָּבוֹא בֵּית מַרְזֵחַ וְאַל־תֵּלֵךְ לִסְפּוֹד וְאַל־תָּנֹד לָהֶם כִּֽי־אָסַפְתִּי אֶת־שְׁלוֹמִי מֵאֵת הָעָם הַזֶּה נְאֻם־יְהֹוָה אֶת־הַחֶסֶד וְאֶת־הָרַחֲמִֽים׃
6 இந்த தேசத்தில் பெரியோரும் சிறியோரும் இறப்பார்கள்; அவர்களை அடக்கம்செய்வாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்களுக்காக கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.
וּמֵתוּ גְדֹלִים וּקְטַנִּים בָּאָרֶץ הַזֹּאת לֹא יִקָּבֵרוּ וְלֹא־יִסְפְּדוּ לָהֶם וְלֹא יִתְגֹּדַד וְלֹא יִקָּרֵחַ לָהֶֽם׃
7 இறந்தவர்களுக்காக ஏற்படுகிற துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு ஆகாரம் பரிமாறப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவோ, ஒருவனுடைய தாய்க்காவோ துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை.
וְלֹא־יִפְרְסוּ לָהֶם עַל־אֵבֶל לְנַחֲמוֹ עַל־מֵת וְלֹֽא־יַשְׁקוּ אוֹתָם כּוֹס תַּנְחוּמִים עַל־אָבִיו וְעַל־אִמּֽוֹ׃
8 நீ அவர்களுடன் அமர்ந்து சாப்பிட விருந்துவீட்டிலும் நுழையாதே.
וּבֵית־מִשְׁתֶּה לֹֽא־תָבוֹא לָשֶׁבֶת אוֹתָם לֶאֱכֹל וְלִשְׁתּֽוֹת׃
9 ஏனெனில், இதோ, இவ்விடத்தில் நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணமகனின் சத்தத்தையும், மணமகளின் சத்தத்தையும் ஓயச்செய்வேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
כִּי כֹה אָמַר יְהֹוָה צְבָאוֹת אֱלֹהֵי יִשְׂרָאֵל הִנְנִי מַשְׁבִּית מִן־הַמָּקוֹם הַזֶּה לְעֵינֵיכֶם וּבִימֵיכֶם קוֹל שָׂשׂוֹן וְקוֹל שִׂמְחָה קוֹל חָתָן וְקוֹל כַּלָּֽה׃
10 ௧0 நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த மக்களுக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: யெகோவா எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கை ஏன் சொல்லவேண்டும் என்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகச் செய்த எங்கள் பாவம் என்ன என்றும் கேட்பார்களானால்,
וְהָיָה כִּי תַגִּיד לָעָם הַזֶּה אֵת כׇּל־הַדְּבָרִים הָאֵלֶּה וְאָמְרוּ אֵלֶיךָ עַל־מֶה דִבֶּר יְהֹוָה עָלֵינוּ אֵת כׇּל־הָרָעָה הַגְּדוֹלָה הַזֹּאת וּמֶה עֲוֺנֵנוּ וּמֶה חַטָּאתֵנוּ אֲשֶׁר חָטָאנוּ לַיהֹוָה אֱלֹהֵֽינוּ׃
11 ௧௧ நீ அவர்களை நோக்கி: உங்கள் முற்பிதாக்கள் என்னைவிட்டு அந்நியதெய்வங்களைப் பின்பற்றி, அவர்களை வணங்கி, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே.
וְאָֽמַרְתָּ אֲלֵיהֶם עַל אֲשֶׁר־עָזְבוּ אֲבוֹתֵיכֶם אוֹתִי נְאֻם־יְהֹוָה וַיֵּלְכוּ אַֽחֲרֵי אֱלֹהִים אֲחֵרִים וַיַּעַבְדוּם וַיִּשְׁתַּחֲווּ לָהֶם וְאֹתִי עָזָבוּ וְאֶת־תּוֹרָתִי לֹא שָׁמָֽרוּ׃
12 ௧௨ நீங்கள் உங்கள் முற்பிதாக்களைப் பார்க்கிலும் அதிகக் கேடாக நடந்தீர்களே; இதோ, உங்களில் ஒவ்வொருவரும் என் சொல்லைக்கேளாமல், உங்கள் பொல்லாத இருதயக் கடினத்தின்படி நடக்கிறீர்கள்.
וְאַתֶּם הֲרֵעֹתֶם לַעֲשׂוֹת מֵאֲבוֹתֵיכֶם וְהִנְּכֶם הֹלְכִים אִישׁ אַֽחֲרֵי שְׁרִרוּת לִבּֽוֹ־הָרָע לְבִלְתִּי שְׁמֹעַ אֵלָֽי׃
13 ௧௩ ஆகவே, உங்களை இந்தத் தேசத்திலிருந்து நீங்களும் உங்கள் முற்பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நிய தெய்வங்களை வணங்குவீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.
וְהֵטַלְתִּי אֶתְכֶם מֵעַל הָאָרֶץ הַזֹּאת עַל־הָאָרֶץ אֲשֶׁר לֹא יְדַעְתֶּם אַתֶּם וַאֲבוֹתֵיכֶם וַעֲבַדְתֶּם־שָׁם אֶת־אֱלֹהִים אֲחֵרִים יוֹמָם וָלַיְלָה אֲשֶׁר לֹא־אֶתֵּן לָכֶם חֲנִינָֽה׃
14 ௧௪ ஆகவே, இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து வரவழைத்த யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம் செய்யாமல்,
לָכֵן הִנֵּה־יָמִים בָּאִים נְאֻם־יְהֹוָה וְלֹא־יֵאָמֵר עוֹד חַי־יְהֹוָה אֲשֶׁר הֶעֱלָה אֶת־בְּנֵי יִשְׂרָאֵל מֵאֶרֶץ מִצְרָֽיִם׃
15 ௧௫ இஸ்ரவேல் மக்களை வடதேசத்திலும், தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரவழைத்த யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்செய்வார்கள்; நான் அவர்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்திற்கு அவர்களைத் திரும்பிவரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
כִּי אִם־חַי־יְהֹוָה אֲשֶׁר הֶעֱלָה אֶת־בְּנֵי יִשְׂרָאֵל מֵאֶרֶץ צָפוֹן וּמִכֹּל הָאֲרָצוֹת אֲשֶׁר הִדִּיחָם שָׁמָּה וַהֲשִֽׁבֹתִים עַל־אַדְמָתָם אֲשֶׁר נָתַתִּי לַאֲבוֹתָֽם׃
16 ௧௬ இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லாக் குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள்.
הִנְנִי שֹׁלֵחַ (לדוגים) [לְדַיָּגִים] רַבִּים נְאֻם־יְהֹוָה וְדִיגוּם וְאַחֲרֵי־כֵן אֶשְׁלַח לְרַבִּים צַיָּדִים וְצָדוּם מֵעַל כׇּל־הַר וּמֵעַל כׇּל־גִּבְעָה וּמִנְּקִיקֵי הַסְּלָעִֽים׃
17 ௧௭ என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்திற்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை; அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.
כִּי עֵינַי עַל־כׇּל־דַּרְכֵיהֶם לֹא נִסְתְּרוּ מִלְּפָנָי וְלֹֽא־נִצְפַּן עֲוֺנָם מִנֶּגֶד עֵינָֽי׃
18 ௧௮ முதலாவது நான் அவர்களுடைய அக்கிரமத்திற்கும், அவர்களுடைய பாவத்திற்கும் இரட்டிப்பாக நீதி செய்வேன்; அவர்கள் என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் பங்கைச் சீயென்று அருவருக்குமளவுக்கு தங்கள் காரியங்களின் அசுத்தமான விக்கிரகங்களினால் நிரப்பினார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
וְשִׁלַּמְתִּי רִאשׁוֹנָה מִשְׁנֵה עֲוֺנָם וְחַטָּאתָם עַל חַלְּלָם אֶת־אַרְצִי בְּנִבְלַת שִׁקּֽוּצֵיהֶם וְתוֹעֲבוֹתֵיהֶם מָלְאוּ אֶת־נַחֲלָתִֽי׃
19 ௧௯ என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய யெகோவாவே, அந்நியமக்கள் பூமியின் கடைசிமுனைகளிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் முற்பிதாக்கள் பிரயோஜனமில்லாத வீணான விக்கிரங்களைக் கைப்பற்றினார்கள் என்பார்கள்.
יְהֹוָה עֻזִּי וּמָעֻזִּי וּמְנוּסִי בְּיוֹם צָרָה אֵלֶיךָ גּוֹיִם יָבֹאוּ מֵֽאַפְסֵי־אָרֶץ וְיֹאמְרוּ אַךְ־שֶׁקֶר נָחֲלוּ אֲבוֹתֵינוּ הֶבֶל וְאֵֽין־בָּם מוֹעִֽיל׃
20 ௨0 மனிதன் தனக்குத் தெய்வங்களை உண்டாக்கலாமோ? அவைகள் தெய்வங்கள் அல்லவே.
הֲיַעֲשֶׂה־לּוֹ אָדָם אֱלֹהִים וְהֵמָּה לֹא אֱלֹהִֽים׃
21 ௨௧ ஆதலால் இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியவைப்பேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரிவிப்பேன்; என் பெயர் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
לָכֵן הִנְנִי מֽוֹדִיעָם בַּפַּעַם הַזֹּאת אוֹדִיעֵם אֶת־יָדִי וְאֶת־גְּבוּרָתִי וְיָדְעוּ כִּֽי־שְׁמִי יְהֹוָֽה׃

< எரேமியா 16 >