< ஏசாயா 65 >
1 ௧ என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய பெயரை அறியாதிருந்த தேசத்தை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.
Достъп дадох на ония, които не питаха за Мене; Близо бях при ония, които не Ме търсеха. Ето Ме! ето Ме! рекох На народ, който не призоваваше името Ми.
2 ௨ நலமல்லாத வழியிலே தங்கள் எண்ணங்களின்படி நடக்கிற முரட்டாட்டமான மக்களைநோக்கி நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன்.
Простирах ръцете си цял ден Към бунтовнически люде, Които ходят по недобър път След своите помисли,
3 ௩ அந்த மக்கள் என் சந்நிதியிலே எப்பொழுதும் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி,
Люде, които непрестанно Ме дразнят в лицето Ми, Като колят жертви в градини, И кадят върху кирпичени олтари:
4 ௪ பிரேதக்குழிகளுக்கு அருகில் உட்கார்ந்து, பாழான இடங்களில் இரவுதங்கி, பன்றியிறைச்சியை சாப்பிட்டு, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் குழம்பை வைத்திருந்து:
Като живеят в гробищата, И нощуват в подземията; Като ядат свинско месо, И държат в съдовете си вариво от нечисти неща;
5 ௫ நீ அங்கேயே இரு, என் அருகில் வராதே, உன்னைகாட்டிலும் நான் பரிசுத்தன் என்று சொல்கிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுவதும் எரிகிற நெருப்புமாயிருப்பார்கள்.
Като казват: Стой надалеч, не се приближавай до мене, Защото аз съм по-свет от тебе, Такива са дим в ноздрите Ми, Огън горящ през целия ден.
6 ௬ இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது; நான் மவுனமாயிராமல் தண்டிப்பேன்.
Ето, писано е пред Мене; Няма да мълча, но ще въздам. Да! ще въздам в пазухите им,
7 ௭ உங்கள் அக்கிரமங்களுக்கும் மலைகளில் தூபங்காட்டி, மேடைகளின்மேல் என்னை நிந்தித்த உங்களுடைய முன்னோர்களுடைய அக்கிரமங்களுக்கும் ஏற்றவிதத்தில் அவர்கள் மடியிலே தண்டிப்பேன்; நான் அவர்கள் முந்தின செய்கையின் பலனை அவர்கள் மடியிலே போடுவேனென்று யெகோவா சொல்கிறார்.
Като за вашите беззакония, казва Господ, така и за беззаконията на бащите ви, Които кадиха по планините, И Ме хулиха по хълмовете; Затова Аз най-напред ще отмеря в пазухата им делото им.
8 ௮ யெகோவா சொல்கிறது என்னவென்றால்: ஒரு திராட்சைக்குலையில் இரசம் காணப்படும்போது: அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்கிறபடி, நான் என் ஊழியக்காரருக்காக அனைத்தையும் அழிக்கவிடாமல் செய்வேன்.
Така казва Господ: Както думат, когато има мъст в грозда: Не го повреждай, защото има благословия в него, Така ще направя и Аз заради слугите Си, За да не ги изтребя всички.
9 ௯ யாக்கோபிலிருந்து ஒரு வித்தையும், யூதாவிலிருந்து என் மலைகளைச் சொந்தமாக்குபவரையும் எழும்பச்செய்வேன்; நான் தெரிந்துகொண்டவர்கள் அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, என் ஊழியக்காரர்கள் அங்கே குடியிருப்பார்கள்.
Ще произведа потомък от Якова, И от Юда наследник на планините Си; Моите избрани ще ги наследят, И слугите Ми ще се заселят там.
10 ௧0 என்னைத் தேடுகிற என் மக்களுக்கு சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோர் பள்ளத்தாக்கு மாட்டுமந்தைகள் தங்குமிடமாகவும் இருக்கும்.
И за людете Ми, които Ме търсят, Сарон ще бъде пасище за стада, И долината Ахор място гдето лежат говеда.
11 ௧௧ ஆனாலும் யெகோவாவை விட்டு, என் பரிசுத்த மலையை மறந்து, காத் என்னும் தெய்வத்திற்குப் பந்தியை ஆயத்தம்செய்து, மேனி என்னும் தெய்வத்திற்குப் பானபலியை நிறைய ஊற்றுகிறவர்களே,
А вас, които оставяте Господа, Които забравяте светия Ми хълм, Които приготвяте трапеза за Щастие, И които правите възлияние на Орисница,
12 ௧௨ உங்களை நான் பட்டயத்திற்கு எண்ணிக்கொடுப்பேன்; நீங்கள் அனைவரும் கொலைசெய்யப்படக் குனிவீர்கள்; நான் கூப்பிட்டும் நீங்கள் மறுமொழி கொடுக்கவில்லை; நான் பேசியும் நீங்கள் கேட்கவில்லை; என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குப் பிரியமல்லாததைத் தெரிந்துகொண்டீர்கள்.
Ще ви определя за нож, вие всички ще се наведете за клане; Защото, когато виках не отговаряхте, И когато говорех не слушахте: Но вършехте онова, което бе зло пред Мене, И избрахте това, което Ми бе неугодно.
13 ௧௩ ஆதலால் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்கிறார்: இதோ, என் ஊழியக்காரர்கள் சாப்பிடுவார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர்கள் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர்கள் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.
Затова, така говори Господ Иеова: Ето, Моите слуги ще ядат, а вие ще гладувате; Ето, Моите слуги ще пият, а вие ще жадувате; Ето, Моите слуги ще се радват, а вие ще се срамувате;
14 ௧௪ இதோ, என் ஊழியக்காரர்கள் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனவியாதியினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.
Ето, Моите слуги ще пеят от сърдечна радост, А вие ще пищите от сърдечна болка, И ще лелекате от съкрушаване на духа.
15 ௧௫ நான் தெரிந்து கொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் பெயரை சாபவார்த்தையாகப் பின்வைத்துப் போவீர்கள்; யெகோவாவாகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறு பெயரைச் சூட்டுவார்.
И ще оставите името Ми на избраните Ми за да проклинат с Него; И Господ Иеова ще умъртви тебе, А слугите Си ще нарече с друго име;
16 ௧௬ அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே வாக்குக்கொடுக்கிறவன் சத்திய தேவன் பெயரில் வக்குக்கொடுப்பான்; முந்தின துன்பங்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறைந்துபோனது.
Така щото, който облажава себе си на земята Ще облажава себе си в Бога на истината, И който се кълне на земята Ще се кълне в Бога на истината; Защото предишните скърби се забравиха, И защото се скриха от очите Ми,
17 ௧௭ இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.
Понеже, ето, създавам ново небе и нова земя; И предишните неща няма да се спомнят, Нито ще дойдат на ум.
18 ௧௮ நான் படைக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் மக்களை மகிழ்ச்சியாகவும் படைக்கிறேன்.
Но вие веселете се и радвайте се винаги В онова, което създавам; Защото, ето, създавам Ерусалим за радост, И людете му за веселие,
19 ௧௯ நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் மக்களின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை.
Аз ще се радвам на Ерусалим, И ще се веселя за людете Си, И няма да се чува вече в него глас на плач Нито глас на ридание.
20 ௨0 அங்கே இனி குறைந்த ஆயுள் உள்ள சிறுவனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் இருக்கமாட்டார்கள்; நூறு வயதுசென்று மரணமடைகிறவனும் வாலிபனென்று கருதப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
Там не ще има вече младенец, който да живее само няколко дни, Нито старец, който да не е изпълнил дните си; Защото дете ще умре стогодишният, А грешникът ако умре стогодишен ще бъде считан за проклет.
21 ௨௧ வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சைத்தோட்டங்களை ஏற்படுத்தி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.
Те ще построят къщи и ще живеят в тях; Ще насадят лозя, и ще ядат плода им.
22 ௨௨ அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் பழங்களைச் சாப்பிடுகிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் மரத்தின் நாட்களைப்போல என் மக்களின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நீண்டநாட்கள் அனுபவிப்பார்கள்.
Няма те да построят а друг да живее там. Няма те да насадят, а друг да яде; Защото дните на Моите люде ще бъдат като дните на дърво, И избраните Ми за дълго ще се наслаждават в делото на ръцете си.
23 ௨௩ அவர்கள் வீணாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதுமில்லை; அவர்களும், அவர்களுடன்கூட அவர்களுடைய வாரிசும் யெகோவாவாலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.
Не ще се трудят напразно, Нито ще раждат чада за бедствие; Защото те са род на благословение от Господа, Тоже и потомството им.
24 ௨௪ அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுமொழி கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
Преди да Ме призоват те, Аз ще отговарям, И докато ще говорят те, Аз ще слушам.
25 ௨௫ ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி பாம்பிற்கு இரையாகும்; என் பரிசுத்த மலையெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடு உண்டாக்குவதுமில்லையென்று யெகோவா சொல்கிறார்.
Вълкът и агнето ще пасат заедно, И лъвът ще яде слама както вола, И храна на змията ще бъде пръстта. Не ще повреждат нито ще погубват В цялата Ми света планина, казва Господ.