< ஏசாயா 6 >
1 ௧ உசியா ராஜா மரணமடைந்த வருடத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய ஆடையின் தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.
Léta, kteréhož umřel král Uziáš, viděl jsem Pána sedícího na trůnu vysokém a vyzdviženém, a podolek jeho naplňoval chrám.
2 ௨ சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் ஆறு இறக்கைகளிருந்தன; அவனவன் இரண்டு இறக்கைகளால் தன் முகத்தை மூடி, இரண்டு இறக்கைகளால் தன் கால்களை மூடி, இரண்டு இறக்கைகளால் பறந்து;
Serafínové stáli nad ním. Šest křídel měl každý z nich: dvěma zakrýval tvář svou, a dvěma přikrýval nohy své, a dvěma létal.
3 ௩ ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று சத்தமிட்டுச் சொன்னார்கள்.
A volal jeden k druhému, říkaje: Svatý, svatý, svatý Hospodin zástupů, plná jest všecka země slávy jeho.
4 ௪ சொன்னவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைக்கால்கள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.
A pohnuly se podvoje veřejí od hlasu volajícího, a dům plný byl dymu.
5 ௫ அப்பொழுது நான்: ஐயோ, அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனிதன், அசுத்த உதடுகளுள்ள மக்களின் நடுவில் குடியிருக்கிறவன்; சேனைகளின் யெகோவாவாகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.
I řekl jsem: Běda mně, jižť zahynu, proto že jsem člověk poškvrněné rty maje, k tomu u prostřed lidu rty poškvrněné majícího bydlím, a že krále Hospodina zástupů viděly oči mé.
6 ௬ அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்துவந்து,
I přiletěl ke mně jeden z serafínů, maje v ruce své uhel řeřavý, kleštěmi vzatý z oltáře,
7 ௭ அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.
A dotekl se úst mých, a řekl: Aj hle, dotekl se uhel tento úst tvých; nebo odešla nepravost tvá, a hřích tvůj shlazen jest.
8 ௮ பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாகப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
Potom slyšel jsem hlas Pána řkoucího: Koho pošli? A kdo nám půjde? I řekl jsem: Aj já, pošli mne.
9 ௯ அப்பொழுது அவர்: நீ போய், இந்த மக்களை நோக்கி, நீங்கள் காதால் கேட்டும் உணராமலும், கண்களால் கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.
On pak řekl: Jdi, a rci lidu tomu: Slyšte slyšíce, a nerozumějte, a hleďte hledíce, a nepoznávejte.
10 ௧0 இந்த மக்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்களுடைய காதுகளை மந்தப்படுத்தி, அவர்களுடைய கண்களை மூடிப்போடு என்றார்.
Zatvrď srdce lidu toho, a uši jeho zacpej, a oči jeho zavři, aby neviděl očima svýma, a ušima svýma neslyšel, a srdcem svým nerozuměl, a neobrátil se, a nebyl uzdraven.
11 ௧௧ அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனித நடமாட்டமில்லாமலும் பாழாகி, பூமி வெட்டவெளியாகி,
A když jsem řekl: Až dokud, Pane? i odpověděl: Dokudž nezpustnou města, tak aby nebylo žádného obyvatele, a domové, aby nebylo v nich žádného člověka, a země docela nezpustne,
12 ௧௨ யெகோவா மனிதர்களைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் மையப்பகுதி முற்றிலும் வெறுமையாக்கப்படும்வரைக்குமே என்று சொன்னார்.
A nevzdálí Hospodin všelikého člověka, a nebude dokonalého zpuštění u prostřed země;
13 ௧௩ ஆகிலும் அதில் இன்னும் பத்தில் ஒரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளில் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரம் பரிசுத்த வித்தாயிருக்கும் என்றார்.
Dokudž ještě v ní nebude desateré zhouby, a teprv zkažena bude. Ale jakož ono jilmoví, a jako doubí onoho náspu podporou jest, tak símě svaté jest podpora její.