< ஓசியா 6 >
1 ௧ யெகோவாவிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைக் கீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
VENID y volvámonos á Jehová: que él arrebató, y nos curará; hirió, y nos vendará.
2 ௨ இரண்டுநாட்களுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.
Darános vida después de dos días: al tercer día nos resucitará, y viviremos delante de él.
3 ௩ அப்பொழுது நாம் அறிவடைந்து, யெகோவாவை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் சூரிய உதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மழை பின்மழையைப்போலவும் நம்மிடத்தில் வருவார்.
Y conoceremos, y proseguiremos en conocer á Jehová: como el alba está aparejada su salida, y vendrá á nosotros como la lluvia, como la lluvia tardía [y] temprana á la tierra.
4 ௪ எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது.
¿Qué haré á ti, Ephraim? ¿Qué haré á ti, oh Judá? La piedad vuestra es como la nube de la mañana, y como el rocío que de madrugada viene.
5 ௫ ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாயின் வார்த்தைகளைக்கொண்டு அவர்களைக் கொன்றேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும்.
Por esta causa corté con los profetas, con las palabras de mi boca los maté; y tus juicios serán [como] luz que sale.
6 ௬ பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும் விரும்புகிறேன்.
Porque misericordia quise, y no sacrificio; y conocimiento de Dios más que holocaustos.
7 ௭ அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாகத் துரோகம் செய்தார்கள்.
Mas ellos, cual Adam, traspasaron el pacto: allí prevaricaron contra mí.
8 ௮ கீலேயாத், அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம்; அது இரத்தக்காலடிகளால் மிதிக்கப்பட்டிருக்கிறது.
Galaad, ciudad de obradores de iniquidad, ensuciada de sangre.
9 ௯ கொள்ளைக்காரர்களின் கூட்டங்கள் ஒருவனுக்குக் காத்திருக்கிறதுபோல, சீகேமுக்குப் போகிற வழியிலே கொலைசெய்கிற ஆசாரியர்களின் கூட்டம் காத்திருக்கிறது; கேடான காரியங்களையே செய்கிறார்கள்.
Y como ladrones que esperan á [algún] hombre, así junta de sacerdotes mancomunadamente mata en el camino: porque ponen en efecto la abominación.
10 ௧0 பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன்; அங்கே எப்பிராயீமின் விபசாரம் உண்டு; இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப்போயிற்று.
En la casa de Israel he visto suciedad: allí fornicó Ephraim, se contaminó Israel:
11 ௧௧ யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.
También Judá puso en ti [una] planta, habiendo yo vuelto la cautividad de mi pueblo.