< எபிரேயர் 6 >
1 ௧ ஆகவே, கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேசவசனங்களை நாம்விட்டுவிட்டு, செத்த செய்கைகளைவிட்டு மனம்திரும்புதல், தேவன்மேல் வைக்கும் விசுவாசம்,
১ৱযং মৃতিজনককর্ম্মভ্যো মনঃপরাৱর্ত্তনম্ ঈশ্ৱরে ৱিশ্ৱাসো মজ্জনশিক্ষণং হস্তার্পণং মৃতলোকানাম্ উত্থানম্
2 ௨ ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். (aiōnios )
২অনন্তকালস্থাযিৱিচারাজ্ঞা চৈতৈঃ পুনর্ভিত্তিমূলং ন স্থাপযন্তঃ খ্রীষ্টৱিষযকং প্রথমোপদেশং পশ্চাৎকৃত্য সিদ্ধিং যাৱদ্ অগ্রসরা ভৱাম| (aiōnios )
3 ௩ தேவனுக்கு விருப்பமானால் இப்படியே செய்வோம்.
৩ঈশ্ৱরস্যানুমত্যা চ তদ্ অস্মাভিঃ কারিষ্যতে|
4 ௪ ஏனென்றால், ஒருமுறை பிரகாசிக்கப்பட்டும், பரலோக பரிசை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியானவரைப் பெற்றும்,
৪য এককৃৎৱো দীপ্তিমযা ভূৎৱা স্ৱর্গীযৱররসম্ আস্ৱদিতৱন্তঃ পৱিত্রস্যাত্মনোঽংশিনো জাতা
5 ௫ தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (aiōn )
৫ঈশ্ৱরস্য সুৱাক্যং ভাৱিকালস্য শক্তিঞ্চাস্ৱদিতৱন্তশ্চ তে ভ্রষ্ট্ৱা যদি (aiōn )
6 ௬ மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மீண்டும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறதினால், மனந்திரும்புவதற்காக அவர்களை மீண்டும் புதுப்பிக்கிறது முடியாதகாரியம்.
৬স্ৱমনোভিরীশ্ৱরস্য পুত্রং পুনঃ ক্রুশে ঘ্নন্তি লজ্জাস্পদং কুর্ৱ্ৱতে চ তর্হি মনঃপরাৱর্ত্তনায পুনস্তান্ নৱীনীকর্ত্তুং কোঽপি ন শক্নোতি|
7 ௭ எப்படியென்றால், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழைநீரைக் குடித்து, தன்னிடம் பயிரிடுகிறவர்களுக்குத் தேவையான பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
৭যতো যা ভূমিঃ স্ৱোপরি ভূযঃ পতিতং ৱৃষ্টিং পিৱতী তৎফলাধিকারিণাং নিমিত্তম্ ইষ্টানি শাকাদীন্যুৎপাদযতি সা ঈশ্ৱরাদ্ আশিষং প্রাপ্তা|
8 ௮ முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ மதிப்பில்லாததும், சபிக்கப்படுகிறதாகவும் இருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.
৮কিন্তু যা ভূমি র্গোক্ষুরকণ্টকৱৃক্ষান্ উৎপাদযতি সা ন গ্রাহ্যা শাপার্হা চ শেষে তস্যা দাহো ভৱিষ্যতি|
9 ௯ பிரியமானவர்களே, நாங்கள் இப்படிச் சொன்னாலும், நன்மையானவைகளும் இரட்சிப்பிற்குரிய காரியங்களும் உங்களிடம் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம்.
৯হে প্রিযতমাঃ, যদ্যপি ৱযম্ এতাদৃশং ৱাক্যং ভাষামহে তথাপি যূযং তত উৎকৃষ্টাঃ পরিত্রাণপথস্য পথিকাশ্চাধ্ৱ ইতি ৱিশ্ৱসামঃ|
10 ௧0 ஏனென்றால், உங்களுடைய செயல்களையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் அவருடைய நாமத்திற்காகக் காண்பித்த உங்களுடைய அன்பையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவர் இல்லையே.
১০যতো যুষ্মাভিঃ পৱিত্রলোকানাং য উপকারো ঽকারি ক্রিযতে চ তেনেশ্ৱরস্য নাম্নে প্রকাশিতং প্রেম শ্রমঞ্চ ৱিস্মর্ত্তুম্ ঈশ্ৱরোঽন্যাযকারী ন ভৱতি|
11 ௧௧ நீங்கள் அசதியாக இல்லாமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் அதிக பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து,
১১অপরং যুষ্মাকম্ একৈকো জনো যৎ প্রত্যাশাপূরণার্থং শেষং যাৱৎ তমেৱ যত্নং প্রকাশযেদিত্যহম্ ইচ্ছামি|
12 ௧௨ உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயம் உண்டாக நீங்கள் எல்லோரும் முடிவுவரைக்கும் அதிக கவனத்தைக் காண்பிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறோம்.
১২অতঃ শিথিলা ন ভৱত কিন্তু যে ৱিশ্ৱাসেন সহিষ্ণুতযা চ প্রতিজ্ঞানাং ফলাধিকারিণো জাতাস্তেষাম্ অনুগামিনো ভৱত|
13 ௧௩ ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடுவதற்கு தம்மைவிட பெரியவர் ஒருவரும் இல்லாததினாலே தமது நாமத்தினாலே ஆணையிட்டு:
১৩ঈশ্ৱরো যদা ইব্রাহীমে প্রত্যজানাৎ তদা শ্রেষ্ঠস্য কস্যাপ্যপরস্য নাম্না শপথং কর্ত্তুং নাশক্নোৎ, অতো হেতোঃ স্ৱনাম্না শপথং কৃৎৱা তেনোক্তং যথা,
14 ௧௪ நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.
১৪"সত্যম্ অহং ৎৱাম্ আশিষং গদিষ্যামি তৱান্ৱযং ৱর্দ্ধযিষ্যামি চ| "
15 ௧௫ அப்படியே, அவன் பொறுமையாகக் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்டான்.
১৫অনেন প্রকারেণ স সহিষ্ণুতাং ৱিধায তস্যাঃ প্রত্যাশাযাঃ ফলং লব্ধৱান্|
16 ௧௬ மனிதர்கள் தங்களைவிட பெரியவர்கள் பெயரில் ஆணையிடுவார்கள்; எல்லா விவாதங்களிலும் உறுதிப்படுத்துவதற்கு ஆணையிடுதலே முடிவு.
১৬অথ মানৱাঃ শ্রেষ্ঠস্য কস্যচিৎ নাম্না শপন্তে, শপথশ্চ প্রমাণার্থং তেষাং সর্ৱ্ৱৱিৱাদান্তকো ভৱতি|
17 ௧௭ அப்படியே, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாகக் காண்பிக்க விருப்பம் உள்ளவராக, ஒரு ஆணையினாலே அதை உறுதிப்படுத்தினார்.
১৭ইত্যস্মিন্ ঈশ্ৱরঃ প্রতিজ্ঞাযাঃ ফলাধিকারিণঃ স্ৱীযমন্ত্রণাযা অমোঘতাং বাহুল্যতো দর্শযিতুমিচ্ছন্ শপথেন স্ৱপ্রতিজ্ঞাং স্থিরীকৃতৱান্|
18 ௧௮ நமக்கு முன்பாக வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்வதற்கு அடைக்கலமாக ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதல் உண்டாவதற்கு, கொஞ்சம்கூட பொய் சொல்லாத தேவன் அப்படிச் செய்தார்.
১৮অতএৱ যস্মিন্ অনৃতকথনম্ ঈশ্ৱরস্য ন সাধ্যং তাদৃশেনাচলেন ৱিষযদ্ৱযেন সম্মুখস্থরক্ষাস্থলস্য প্রাপ্তযে পলাযিতানাম্ অস্মাকং সুদৃঢা সান্ত্ৱনা জাযতে|
19 ௧௯ அந்த நம்பிக்கை நமக்கு நிலையானதும், ஆத்துமாக்களுக்கு உறுதியான நங்கூரமாகவும், திரைக்குப் பின்னே மகா பரிசுத்த இடத்திற்குள் பிரவேசிக்கிறதாகவும் இருக்கிறது.
১৯সা প্রত্যাশাস্মাকং মনোনৌকাযা অচলো লঙ্গরো ভূৎৱা ৱিচ্ছেদকৱস্ত্রস্যাভ্যন্তরং প্রৱিষ্টা|
20 ௨0 நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். (aiōn )
২০তত্রৈৱাস্মাকম্ অগ্রসরো যীশুঃ প্রৱিশ্য মল্কীষেদকঃ শ্রেণ্যাং নিত্যস্থাযী যাজকোঽভৱৎ| (aiōn )