< ஆதியாகமம் 8 >
1 ௧ தேவன் நோவாவையும், அவனுடன் கப்பலிலிருந்த அனைத்து காட்டுமிருகங்களையும், அனைத்து நாட்டுமிருகங்களையும் நினைவுகூர்ந்து, பூமியின்மேல் காற்றை வீசச்செய்தார். அப்பொழுது தண்ணீர் குறையத் தொடங்கியது.
Nanso Onyankopɔn kaee Noa ne wuram mmoa a na wɔne no wɔ Adaka no mu no, na ɔmaa mframa bɔ faa asase so, na nsu no twee.
2 ௨ ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோனது.
Asuti a ɛwowɔ asase ase no mu nsu a ɛbobɔe no gyaee ba, na ɔsoro mfɛnsere no nso mu toto maa osu no gyaee tɔ.
3 ௩ தண்ணீர் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; 150 நாட்களுக்குப்பின்பு தண்ணீர் குறைந்தது.
Nsu no toaa so twe fii asase so. Nnafua ɔha ne aduonum akyi no, na nsu no atwe koraa.
4 ௪ ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே கப்பல் அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கினது.
Ɔsram a ɛto so ason no da a ɛto so dunson so, Adaka no kɔtaa Ararat mmepɔw so.
5 ௫ பத்தாம் மாதம்வரைக்கும் தண்ணீர் குறைந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
Nsu no toaa so, twee ara kosii ɔsram a ɛto so du no so. Na ɔsram no da a edi kan no, mmepɔw no atifi daa adi.
6 ௬ 40 நாட்களுக்குப் பிறகு, நோவா தான் கப்பலில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
Adaduanan akyi no, Noa buee mfɛnsere a otwa too Adaka no ho no,
7 ௭ ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டு பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாக இருந்தது.
na ɔsomaa kwaakwaadabi ma odii akɔneaba kosii sɛ nsu no nyinaa yow fii asase no so.
8 ௮ பின்பு பூமியின்மேல் தண்ணீர் குறைந்து போயிற்றோ என்று தெரிந்துகொள்ளும்படி, ஒரு புறாவை வெளியே விட்டான்.
Afei, ɔsomaa aborɔnoma sɛ ɔnkɔhwɛ sɛ asase no so awo ana.
9 ௯ பூமியின்மேலெங்கும் தண்ணீர் இருந்ததினால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் கிடைக்காததால், திரும்பிக் கப்பலிலே அவனிடத்திற்கு வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகக் கப்பலுக்குள் சேர்த்துக்கொண்டான்.
Nanso aborɔnoma no annya baabi ansi, efisɛ na nsu no akata asase no so nyinaa. Enti ɔsan baa Noa nkyɛn ma Noa teɛɛ ne nsa soo ne mu de no baa Adaka no mu.
10 ௧0 பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் புறாவைக் கப்பலிலிருந்து வெளியே விட்டான்.
Noa twɛn nnanson, na ɛno akyi no, ɔsan somaa aborɔnoma no bio.
11 ௧௧ அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்திற்கு வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதனால் நோவா பூமியின்மேல் தண்ணீர் குறைந்துபோயிற்று என்று தெரிந்து கொண்டான்.
Bere a aborɔnoma no san baa ne nkyɛn anwummere no, na ngodua ahabammono a watew tua nʼano. Ɛno na ɛmaa Noa huu sɛ nsu no atwe afi asase no so.
12 ௧௨ பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.
Noa twɛn nnanson bio, na ɔsan somaa aborɔnoma no, nanso wansan amma ne nkyɛn bio.
13 ௧௩ அவனுக்கு 601 வயதாகும் வருடத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போயிற்று; நோவா கப்பலின் மேல் அடுக்கை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் தண்ணீர் இல்லாதிருந்தது.
Na ɛbaa sɛ Noa dii mfe ahansia ne baako, ɔsram a edi kan no mu da a edi kan no, na nsu no atwe afi asase no so. Enti Noa yii Adaka no suhyɛ no, na ohuu sɛ asase so awo.
14 ௧௪ இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.
Ɔsram a ɛto so abien no da a ɛto so aduonu ason so no na asase no so woo koraa.
15 ௧௫ அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:
Onyankopɔn ka kyerɛɛ Noa se,
16 ௧௬ “நீயும், உன்னோடுகூட உன்னுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் கப்பலைவிட்டுப் புறப்படுங்கள்.
“Wo ne wo yere ne wo mmabarima ne wɔn yerenom mfi Adaka no mu mpue.
17 ௧௭ உன்னிடத்தில் இருக்கிற அனைத்துவித உயிரினங்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற அனைத்து பிராணிகளையும் உன்னோடு வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாக ஈன்றெடுத்து, பூமியின்மேல் பலுகிப் பெருகட்டும்” என்றார்.
Yi abɔde biara a nkwa wɔ mu a wɔwɔ wo nkyɛn, a ɛyɛ nnomaa, mmoa ne mmoa a wɔnam asase so nyinaa fi Adaka no mu sɛnea ɛbɛyɛ a, wɔn ase bɛdɔ wɔ asase so.”
18 ௧௮ அப்பொழுது நோவாவும், அவனுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் வெளியே வந்தார்கள்.
Enti Noa ne ne mmabarima ne ne yere ne ne mmabarima yerenom fii Adaka no mu.
19 ௧௯ பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து மிருகங்களும், ஊருகிற அனைத்து பிராணிகளும், அனைத்து பறவைகளும் வகைவகையாகக் கப்பலிலிருந்து வெளியே வந்தன.
Mmoa no nyinaa ne abɔde a wɔnam asase so nyinaa ne nnomaa nyinaa ne biribiara a ɛnam asase so nyinaa fii Adaka no mu saa ara mmaako mmaako.
20 ௨0 அப்பொழுது நோவா யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சுத்தமான அனைத்து மிருகங்களிலும், சுத்தமான அனைத்து பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.
Na Noa sii afɔremuka maa Awurade. Ɔfaa mmoa ne nnomaa a wɔn ho tew, de bɔɔ ɔhyew afɔre wɔ afɔremuka no so.
21 ௨௧ சுகந்த வாசனையைக் யெகோவா முகர்ந்தார். அப்பொழுது யெகோவா: “இனி நான் மனிதனுக்காக பூமியை சபிப்பதில்லை; மனிதனுடைய இருதயத்தின் நினைவுகள் அவனுடைய சிறுவயது தொடங்கி பொல்லாததாக இருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி அனைத்து உயிரினங்களையும் அழிப்பதில்லை.
Awurade tee afɔre a Noa bɔe no huam no, ɔkaa wɔ ne koma mu se, “Ɛwɔ mu sɛ bɔne ahyɛ onipa koma ma fi ne mmofraase de, nanso merenni onipa akyi nnome asase bio. Na merensɛe abɔde a nkwa wɔ mu bio sɛnea mayɛ yi.
22 ௨௨ பூமி இருக்கும்வரைக்கும் விதைப்பும் அறுப்பும், குளிர்ச்சியும் வெப்பமும், கோடைக்காலமும் மழைக்காலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை” என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
“Mmere dodow a asase da so wɔ hɔ yi, ogu ne otwa, awɔw ne ahuhuru, asusow ne ɔpɛ, awia ne anadwo to rentwa da.”