< எசேக்கியேல் 19 >

1 நீ இஸ்ரவேல் பிரபுக்களின்பேரில் ஒரு புலம்பல் பாடி,
וְאַתָּה שָׂא קִינָה אֶל־נְשִׂיאֵי יִשְׂרָאֵֽל׃
2 சொல்லவேண்டியது என்னவென்றால்: உன்னுடைய தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு பெண்சிங்கம், அவள் சிங்கங்களுக்குள்ளே படுத்திருந்து, பாலசிங்கங்களின் நடுவிலே தன்னுடைய குட்டிகளை வளர்த்தாள்.
וְאָמַרְתָּ מָה אִמְּךָ לְבִיָּא בֵּין אֲרָיוֹת רָבָצָה בְּתוֹךְ כְּפִרִים רִבְּתָה גוּרֶֽיהָ׃
3 தன்னுடைய குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனிதர்களை அழித்தது.
וַתַּעַל אֶחָד מִגֻּרֶיהָ כְּפִיר הָיָה וַיִּלְמַד לִטְרָף־טֶרֶף אָדָם אָכָֽל׃
4 அந்நியதேசங்களும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்.
וַיִּשְׁמְעוּ אֵלָיו גּוֹיִם בְּשַׁחְתָּם נִתְפָּשׂ וַיְבִאֻהוּ בַֽחַחִים אֶל־אֶרֶץ מִצְרָֽיִם׃
5 தாய்ச்சிங்கம் காத்திருந்து, தன்னுடைய நம்பிக்கை பொய்யாகப் போனது என்று கண்டு, அது தன்னுடைய குட்டிகளில் வேறொன்றை எடுத்து, அதை பாலசிங்கமாக வைத்தது.
וַתֵּרֶא כִּי נֽוֹחֲלָה אָבְדָה תִּקְוָתָהּ וַתִּקַּח אֶחָד מִגֻּרֶיהָ כְּפִיר שָׂמָֽתְהוּ׃
6 அது சிங்கங்களுக்குள்ளே வசித்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனிதர்களைச் சாப்பிட்டது.
וַיִּתְהַלֵּךְ בְּתוֹךְ־אֲרָיוֹת כְּפִיר הָיָה וַיִּלְמַד לִטְרָף־טֶרֶף אָדָם אָכָֽל׃
7 அவர்களுடைய பாழான அரண்மனைகளில் திரிந்து, அவர்களுடைய பட்டணங்களைப் பாழாக்கியது; அதினுடைய கெர்ச்சிப்பின் சத்தத்திற்கு தேசமும் அதிலுள்ள அனைத்தும் பயந்தது.
וַיֵּדַע אַלְמְנוֹתָיו וְעָרֵיהֶם הֶחֱרִיב וַתֵּשַׁם אֶרֶץ וּמְלֹאָהּ מִקּוֹל שַׁאֲגָתֽוֹ׃
8 அப்பொழுது சுற்றிலுள்ள தேசங்கள் அதற்கு எதிராக எழும்பிவந்து, தங்களுடைய வலையை அதின்மேல் வீசினார்கள்; அது அவர்களுடைய படுகுழியிலே அகப்பட்டது.
וַיִּתְּנוּ עָלָיו גּוֹיִם סָבִיב מִמְּדִינוֹת וַֽיִּפְרְשׂוּ עָלָיו רִשְׁתָּם בְּשַׁחְתָּם נִתְפָּֽשׂ׃
9 அவர்கள் அதைச் சங்கிலிகளினால் கட்டி, ஒரு கூட்டுக்கு உட்படுத்தி, அதைப் பாபிலோன் ராஜாவினிடம் கொண்டுபோனார்கள்; இனி அதின் சத்தம் இஸ்ரவேலின் மலைகளின்மேல் கேட்கப்படாதபடி அதை கோட்டைகளில் கொண்டுபோய் அடைத்தார்கள்.
וַֽיִּתְּנֻהוּ בַסּוּגַר בַּֽחַחִים וַיְבִאֻהוּ אֶל־מֶלֶךְ בָּבֶל יְבִאֻהוּ בַּמְּצֹדוֹת לְמַעַן לֹא־יִשָּׁמַע קוֹלוֹ עוֹד אֶל־הָרֵי יִשְׂרָאֵֽל׃
10 ௧0 நீ அமைதியாக இருக்கும்போது உன்னுடைய தாய் தண்ணீர் ஓரமாக நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் பழம்தருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சைச்செடியாக இருந்தாள்.
אִמְּךָ כַגֶּפֶן בְּדָמְךָ עַל־מַיִם שְׁתוּלָה פֹּֽרִיָּה וַֽעֲנֵפָה הָיְתָה מִמַּיִם רַבִּֽים׃
11 ௧௧ ஆளுகிறவர்களின் செங்கோலுக்கேற்ற பலத்தகிளைகள் அதற்கு இருந்தது; அதின் வளர்த்தி அடர்த்தியான கிளைகளுக்குள்ளே உயர ஓங்கி, தன்னுடைய உயரத்தால் தன்னுடைய திரளான கொடிகளோடுங்கூடத் தோன்றியது.
וַיִּֽהְיוּ־לָהּ מַטּוֹת עֹז אֶל־שִׁבְטֵי מֹֽשְׁלִים וַתִּגְבַּהּ קֽוֹמָתוֹ עַל־בֵּין עֲבֹתִים וַיֵּרָא בְגָבְהוֹ בְּרֹב דָּלִיֹּתָֽיו׃
12 ௧௨ ஆனாலும் அது கோபமாகப் பிடுங்கப்பட்டு, தரையிலே தள்ளுண்டது; கீழ்காற்றினால் அதின் பழம் காய்ந்துபோனது; அதின் பலத்த கிளைகள் முறிந்து, பட்டுப்போயின; நெருப்பு அவைகளைச் சுட்டெரித்தது.
וַתֻּתַּשׁ בְּחֵמָה לָאָרֶץ הֻשְׁלָכָה וְרוּחַ הַקָּדִים הוֹבִישׁ פִּרְיָהּ הִתְפָּרְקוּ וְיָבֵשׁוּ מַטֵּה עֻזָּהּ אֵשׁ אֲכָלָֽתְהוּ׃
13 ௧௩ இப்பொழுது அது வறண்டதும் தண்ணீர் இல்லாததுமான வனாந்திர பூமியிலே நடப்பட்டிருக்கிறது.
וְעַתָּה שְׁתוּלָה בַמִּדְבָּר בְּאֶרֶץ צִיָּה וְצָמָֽא׃
14 ௧௪ அதின் கொடிகளிலுள்ள ஒரு கொப்பிலிருந்து நெருப்பு புறப்பட்டு, அதின் பழத்தைச் சுட்டெரித்தது; ஆளுகிற செங்கோலுக்கு ஏற்ற பலத்த கிளை இனி அதில் இல்லையென்று சொல்; இதுவே புலம்பல், இதுவே புலம்பலாக இருக்கும் என்றார்.
וַתֵּצֵא אֵשׁ מִמַּטֵּה בַדֶּיהָ פִּרְיָהּ אָכָלָה וְלֹא־הָיָה בָהּ מַטֵּה־עֹז שֵׁבֶט לִמְשׁוֹל קִינָה הִיא וַתְּהִי לְקִינָֽה׃

< எசேக்கியேல் 19 >