< யாத்திராகமம் 11 >
1 ௧ அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரச்செய்வேன்; அதற்குப்பின்பு அவன் உங்களை இந்த இடத்திலிருந்து போகவிடுவான்; முழுவதுமாக உங்களைப் போகவிடுவதும் மட்டுமின்றி, உங்களை இந்த இடத்திலிருந்து துரத்தியும் விடுவான்.
(А Господ беше казал на Моисея: Още една язва ще нанеса на Фараона и на Египет, подир което ще ви пусне от тука; когато ви пусне, съвсем ще ви изпъди от тука.
2 ௨ இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி மக்களுக்குச் சொல்” என்றார்.
Кажи, прочее, в ушите на людете, и нека поиска всеки мъж от съседа си, и всяка жена от съседката си, сребърни и златни вещи.
3 ௩ அப்படியே யெகோவா மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவுகிடைக்கும்படிச் செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரர்களின் பார்வைக்கும் மக்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாக இருந்தான்.
И Господ беше дал на людете да продибият благоволението на египтяните. При това, Моисей беше станал твърде велик човек в Египетската земя пред Фараоновите слуги и пред людете).
4 ௪ அப்பொழுது மோசே: “யெகோவா உரைக்கிறதாவது, நடு இரவிலே நான் எகிப்திற்குள்ளே புறப்பட்டுப்போவேன்.
Моисей каза на Фараона: Така казва Господ: Около средата на една нощ Аз ще мина през Египет;
5 ௫ அப்பொழுது சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் எந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று சொன்னதுமன்றி,
и всички първороден в Египетската земя ще умре, от първородните на Фараона, който седи на престола си, до първородния на слугинята, която е зад воденицата, и до всяко първородно от добитъка.
6 ௬ அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருபோதும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும்.
И по цялата Египетска земя ще се нададе голям писък, какъвто никога не е имало, нито ще има вече такъв.
7 ௭ ஆனாலும் யெகோவா எகிப்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் செய்கிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படி, இஸ்ரவேல் மக்கள் அனைவருக்குள்ளும் மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாய் கூட தன்னுடைய நாவை அசைப்பதில்லை.
А против израилтяните, против човек или животно, нито куче няма да поклати езика си, за да познаете, че Господ прави разлика между египтяните и израилтяните.
8 ௮ அப்பொழுது உம்முடைய வேலைக்காரர்களாகிய இவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து, பணிந்து. நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின்பின்பு புறப்படுவேன்” என்று சொல்லி, கடுங்கோபத்தோடு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.
И всички тия твои слуги ще дойдат при мене и ще ми припаднат и рекат: Излез ти с всичките люде, които те следват. И подир това ще изляза. И Моисей излезе от Фараоновото присъствие с голям гняв.
9 ௯ யெகோவா மோசேயை நோக்கி: “எகிப்து தேசத்தில் என்னுடைய அற்புதங்கள் அநேகமாகும்படி, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான்” என்று சொல்லியிருந்தார்.
(А Господ беше казал на Моисея: Фараон няма да ви послуша, за да се умножат Моите чудеса в Египетската земя.
10 ௧0 மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். யெகோவா பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியதால், அவன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து போகவிடவில்லை.
И Моисей и Аарон бяха извършили всички тия чудеса пред Фараона, и той не беше пуснал израилтяните из земята си).