< உபாகமம் 3 >
1 ௧ “பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப்போகிற வழியாகப் போனோம்; பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல மக்களோடும் நம்மை எதிர்த்துப் போர்செய்யும்படிப் புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான்.
౧మనం తిరిగి బాషాను దారిలో వెళ్తుండగా బాషాను రాజు ఓగు, అతని ప్రజలంతా ఎద్రెయీలో మనతో యుద్ధం చేయడానికి ఎదురుగా వచ్చారు.
2 ௨ அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய மக்கள் எல்லோரையும் அவனுடைய தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்ததுபோல, அவனுக்கும் செய்வாய் என்றார்.
౨యెహోవా నాతో ఇలా అన్నాడు. “అతనికి భయపడ వద్దు. అతన్నీ అతని ప్రజలనూ అతని దేశాన్నీ నీ చేతికి అప్పగించాను. హెష్బోనులో అమోరీయుల రాజు సీహోనుకు చేసినట్టే ఇతనికి కూడా చేయాలి.”
3 ௩ அப்படியே நம்முடைய தேவனாகிய யெகோவா பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல மக்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமல்போகும்வரை அவனை முற்றிலும் அழித்தோம்.
౩ఆ విధంగా మన దేవుడు యెహోవా బాషాను రాజు ఓగును, అతని ప్రజలందరినీ మన చేతికి అప్పగించాడు. అతనికి ఎవ్వరూ మిగలకుండా అందరినీ హతం చేశాం.
4 ௪ அக்காலத்திலே அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்தோம்; அவர்களிடத்தில் நாம் பிடித்துக்கொள்ளாத பட்டணம் இல்லை; பாசானிலிருந்த ஓகின் ராஜ்ஜியமான அறுபது பட்டணங்களுள்ள அர்கோப் தேசம் முழுவதையும் பிடித்தோம்.
౪ఆ కాలంలో అతని పట్టణాలన్నీ స్వాధీనం చేసుకున్నాం. మన స్వాధీనంలోకి రాని పట్టణం ఒక్కటీ లేదు. బాషానులో ఓగు రాజ్యం అర్గోబు ప్రాంతంలో ఉన్న 60 పట్టణాలు ఆక్రమించుకున్నాం.
5 ௫ அந்தப் பட்டணங்களெல்லாம் உயர்ந்த மதில்களாலும், வாசல்களாலும், தாழ்ப்பாள்களாலும் பாதுகாக்கப்பட்டிருந்தது; மட்டுமின்றி அவைகளில் மதில் இல்லாத பட்டணங்களும் அநேகம் இருந்தன.
౫ఆ పట్టణాలన్నీ గొప్ప ప్రాకారాలు, ద్వారాలు, గడియలతో ఉన్న దుర్గాలు. అవిగాక ప్రాకారాలు లేని ఇంకా చాలా పట్టణాలు స్వాధీనం చేసుకున్నాం.
6 ௬ அவைகளையும் முற்றிலும் அழித்தோம்; நாம் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்ததுபோல, அந்த எல்லாப் பட்டணங்களிலுமுள்ள ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் அழித்தோம்.
౬మనం హెష్బోను రాజు సీహోనుకు చేసినట్టు వాటిని నిర్మూలం చేశాం. ప్రతి పట్టణంలోని స్త్రీ పురుషులనూ పిల్లలనూ నాశనం చేశాం.
7 ௭ ஆனாலும் பட்டணங்களிலுள்ள ஆஸ்தியையும் சகல மிருகஜீவன்களையும் நமக்கென்று கொள்ளையிட்டோம்.
౭వారి పశువులనూ ఆ పట్టణాల ఆస్తినీ దోచుకున్నాం.
8 ௮ இப்படியே யோர்தானுக்கு கிழக்கிலுள்ள அர்னோன் நதிதுவங்கி, எர்மோன் மலைவரையுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் எமோரியர்களுடைய இரண்டு ராஜாக்களிடமிருந்து பிடித்தோம்.
౮ఆ కాలంలో అర్నోను లోయ నుండి హెర్మోను కొండ వరకూ, యొర్దాను అవతల ఉన్న దేశాన్ని ఇద్దరు అమోరీయుల రాజుల దగ్గర నుండి స్వాధీనం చేసుకున్నాం.
9 ௯ சீதோனியர்கள் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியர்களோ அதைச் சேனீர் என்கிறார்கள்.
౯సీదోనీయులు హెర్మోనును “షిర్యోను” అనేవారు. అమోరీయులు దాన్ని “శెనీరు” అనేవారు.
10 ௧0 சமமான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்ஜியத்தின் பட்டணங்கள்வரையுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம்.
౧౦మైదానంలోని పట్టాణాలన్నిటిని, బాషానులోని ఓగు రాజ్య పట్టణాలైన సల్కా, ఎద్రెయీ అనేవాటి వరకూ గిలాదు అంతటినీ బాషానునూ ఆక్రమించాం.
11 ௧௧ மீதியாயிருந்த இராட்சதர்களில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன் மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினால் செய்யப்பட்ட அவனுடைய கட்டில், மனிதர்களுடைய கை முழத்தின்படியே, 13 அடி நீளமும் 6 அடி அகலமுமாயிருந்தது; அது அம்மோன் சந்ததியாருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா?
౧౧రెఫాయీయులలో బాషాను రాజు ఓగు మాత్రం మిగిలాడు. అతనిది ఇనుప మంచం. అది అమ్మోనీయుల రబ్బాలో ఉంది గదా? దాని పొడవు తొమ్మిది మూరలు, వెడల్పు నాలుగు మూరలు.
12 ௧௨ “அக்காலத்திலே சொந்தமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் துவங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் கொடுத்தேன்.
౧౨అర్నోను లోయలో ఉన్న అరోయేరు పట్టణం నుండి గిలాదు కొండ ప్రాంతంలో సగమూ మనం అప్పుడు స్వాధీనం చేసుకొన్న దేశమూ దాని పట్టణాలూ రూబేనీయులకు, గాదీయులకు ఇచ్చాను.
13 ௧௩ கீலேயாத்தின் மற்றப் பங்கையும், ஓகின் ராஜ்ஜியமாயிருந்த பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குக் கொடுத்ததுமல்லாமல், இராட்சத தேசம் என்று கருதப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் பகுதி முழுவதையும் கொடுத்தேன்.
౧౩ఓగు రాజుకు చెందిన బాషాను అంతటినీ, గిలాదులో మిగిలిన రెఫాయీయుల దేశమని పిలిచే బాషానునూ, అర్గోబు ప్రాంతమంతా మనష్షే అర్థ గోత్రానికి ఇచ్చాను.
14 ௧௪ மனாசேயின் மகனாகிய யாவீர் அர்கோப் பகுதி முழுவதையும் கெசூரியர்கள் மாகாத்தியர்கள் என்பவர்களுடைய எல்லைவரை கட்டிக்கொண்டு, அதற்குத் தன் பெயரின்படியே பாசான் அவோத்யாயீர் என்று பெயரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது.
౧౪మనష్షే కొడుకు యాయీరు గెషూరీయుల, మాయాకాతీయుల సరిహద్దుల వరకూ అర్గోబు ప్రాంతాన్ని పట్టుకుని, తన పేరును బట్టి వాటికి యాయీరు బాషాను గ్రామాలు అని పేరు పెట్టాడు. ఈ రోజు వరకూ వాటి పేరు అదే.
15 ௧௫ மாகீருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தேன்.
౧౫మాకీరీయులకు గిలాదును ఇచ్చాను.
16 ௧௬ மேலும் கீலேயாத் துவங்கி, அர்னோன் நதி ஓடுகிற பள்ளத்தாக்கும், அம்மோனியர்களுடைய கடைசி எல்லையாகிய யாப்போக்கு ஆறுவரை இருக்கிற தேசத்தையும்,
౧౬గిలాదు నుండి అర్నోను లోయ మధ్య వరకూ, యబ్బోకు నది వరకూ, అమ్మోనీయుల పడమటి సరిహద్దు వరకూ రూబేనీయులకూ గాదీయులకూ ఇచ్చాను.
17 ௧௭ கின்னரேத் துவங்கி அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாகக் கிழக்கே இருக்கிற உப்புக்கடலான சமவெளியின் கடல்வரை, யோர்தானின் எல்லைக்குள் அடங்கிய சமவெளியையும், ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் கொடுத்தேன்.
౧౭ఇవి కాక, కిన్నెరెతు నుండి తూర్పున పిస్గా కొండ వాలుల కింద, ఉప్పు సముద్రం అని పిలిచే అరాబా సముద్రం దాకా వ్యాపించిన అరాబా ప్రాంతాన్ని, యొర్దాను లోయ మధ్యభూమిని, రూబేనీయులకూ గాదీయులకూ ఇచ్చాను.
18 ௧௮ “அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு இந்த தேசத்தைச் சொந்தமாகக் கொடுத்தார்; போர்செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லோரும் இஸ்ரவேல் மக்களான உங்கள் சகோதரர்களுக்கு முன்பாக ஆயுதம் ஏந்தியவர்களாக நடந்துபோங்கள்.
౧౮అప్పుడు నేను మీతో “మీరు స్వాధీనం చేసుకోడానికి మీ దేవుడు యెహోవా ఈ దేశాన్ని మీకిచ్చాడు. మీలో యుద్ధవీరులంతా సిద్ధపడి మీ సోదరులైన ఇశ్రాయేలు ప్రజలతో కలిసి నది దాటి రావాలి.
19 ௧௯ உங்களுடைய மனைவிகளும், பிள்ளைகளும் உங்களுடைய ஆடுமாடுகளும் மாத்திரம் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் பட்டணங்களில் இருக்கட்டும்; உங்களுக்குத் திரளான ஆடுமாடுகள் உண்டென்று அறிவேன்.
౧౯యెహోవా మీకు విశ్రాంతినిచ్చినట్టు మీ సోదరులకు కూడా విశ్రాంతినిచ్చే వరకూ నేను మీకిచ్చిన పట్టణాల్లో నివసించాలి.
20 ௨0 ஆனாலும் யெகோவா உங்களை இளைப்பாறச்செய்ததுபோல, உங்களுடைய சகோதரர்களையும் இளைப்பாறச்செய்து, யோர்தானுக்கு அப்புறத்தில் உங்கள் தேவனாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும்வரை நீங்கள் இருந்து, பின்பு அவரவர் நான் உங்களுக்குக் கொடுத்த உங்களுடைய இடத்திற்குத் திரும்புவீர்களாக என்றேன்.
౨౦అంటే మీ యెహోవా దేవుడు యొర్దాను అవతల వారికి ఇస్తున్న దేశాన్ని వారు స్వాధీనం చేసుకునే వరకూ, మీ భార్యలు, మీ పిల్లలు, మీ మందలు నేను మీకిచ్చిన పట్టణాల్లో నివసించాలి. ఆ తరువాత మీరు మీ స్వాస్థ్యాలకు తిరిగి రావాలి అని మీకు ఆజ్ఞాపించాను. మీ మందలు చాలా ఎక్కువని నాకు తెలుసు” అన్నాను.
21 ௨௧ அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய யெகோவா அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன்னுடைய கண்கள் கண்டது; நீ போய்ச்சேரும் எல்லா ராஜ்ஜியங்களுக்கும் யெகோவா அப்படியே செய்வார்.
౨౧ఆ సమయంలో నేను యెహోషువకు ఇలా ఆజ్ఞాపించాను. “మీ యెహోవా దేవుడు ఈ ఇద్దరు రాజులకు చేసినదంతా నువ్వు కళ్ళారా చూశావు గదా. నువ్వు వెళ్తున్న రాజ్యాలన్నిటికీ యెహోవా అదే విధంగా చేస్తాడు.
22 ௨௨ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய யெகோவாவே உங்களுக்காகப் போர் செய்வார் என்று சொன்னேன்.
౨౨మీ యెహోవా దేవుడు మీ పక్షంగా యుద్ధం చేస్తాడు కాబట్టి వారికి భయపడ వద్దు.”
23 ௨௩ அக்காலத்திலே நான் யெகோவாவை நோக்கி:
౨౩ఆ రోజుల్లో నేను “యెహోవా, ప్రభూ, నీ మహిమనూ, నీ బాహుబలాన్నీ నీ దాసునికి చూపించడం ప్రారంభించావు.
24 ௨௪ “யெகோவாவாகிய ஆண்டவரே, நீர் உமது அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் துவங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய செயல்களுக்கும் உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யத்தக்க தேவன் யார்?
౨౪ఆకాశంలో గాని, భూమిపై గాని నువ్వు చేసే పనులు చేయగల దేవుడెవడు? నీ అంత పరాక్రమం చూపగల దేవుడెవడు?
25 ௨௫ நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும், அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி அனுமதி கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன்.
౨౫నేను అవతలికి వెళ్లి యొర్దాను అవతల ఉన్న ఈ మంచి దేశాన్ని, ఆ మంచి కొండ ప్రాంతాన్ని, ఆ లెబానోనును చూసేలా అనుగ్రహించు” అని యెహోవాను బతిమాలుకున్నాను.
26 ௨௬ யெகோவாவோ உங்கள்நிமித்தம் என்மேல் கோபம்கொண்டு, எனக்குச் செவிகொடாமல், என்னை நோக்கி: போதும், இனி இந்தக் காரியத்தைக்குறித்து என்னுடன் பேசவேண்டாம்.
౨౬యెహోవా మీ కారణంగా నా మీద కోపపడి నా మనవి వినలేదు. ఆయన నాతో ఇలా అన్నాడు. “చాలు. ఇంక ఈ సంగతిని గూర్చి నాతో మాట్లాడవద్దు.
27 ௨௭ நீ பிஸ்கா மலையுச்சியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார்; இந்த யோர்தான் நதியை நீ கடந்துபோவதில்லை.
౨౭నువ్వు ఈ యొర్దాను దాటకూడదు. అయితే, పిస్గా కొండ ఎక్కి పడమటి వైపు, ఉత్తరం వైపు, దక్షిణం వైపు, తూర్పు వైపు తేరి చూడు.
28 ௨௮ நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த மக்களுக்கு முன்பாகக் கடந்துபோய், நீ காணும் தேசத்தை அவனே அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார்.
౨౮నీకు బదులుగా యెహోషువకు ఆజ్ఞాపించి, అతణ్ణి ప్రోత్సహించి, బలపరచు. అతడు ఈ ప్రజలను నడిపించి, నది దాటి, నువ్వు చూడబోయే దేశాన్ని వారు స్వాధీనపరచుకొనేలా చేస్తాడు.”
29 ௨௯ பின்பு பெத்பேயோருக்கு எதிரேயுள்ள பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம்.
౨౯ఆ సమయంలో మనం బేత్పయోరు ఎదుట ఉన్న లోయలో ఉన్నాం.