< கொலோசெயர் 3 >

1 நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
A tak všichni, kdo jste byli s Kristem probuzeni k novému životu, zaměřte se cele tam, kde Kristus vládne se svým Otcem.
2 பூமியிலுள்ளவைகளை இல்லை, மேலானவைகளையே விரும்புங்கள்.
To ať vás zaměstnává, a ne pozemské starosti.
3 ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
Svoje já jste nechali zemřít, a to, co nyní žije, má v ruce Kristus. Jste tedy v rukou Božích, i když to navenek není vidět.
4 நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடுகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.
Až Ježíš přijde na zem viditelně, tato skrytá skutečnost se zaskví před zraky všech.
5 ஆகவே, விபசாரம், அசுத்தம், மோகம், தீய எண்ணம், விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகிய இந்த உலகத்திற்குரிய பாவ சுபாவத்தை அழித்துப்போடுங்கள்.
Odsekněte proto všechny kořeny, které vás dosud spojují s hříchem. Sexuální nevázanost, mravní zkaženost, oplzlost a náruživost vyvolávají Boží hněv, stejně jako chamtivost, která v podstatě zbožňuje majetek.
6 இவைகளினாலேயே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வரும்.
7 நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே வாழ்ந்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள்.
Takový byl kdysi i váš způsob života,
8 இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்களுடைய வாயிலிருந்து வரக்கூடாத நிந்தனையும், வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
ale nyní odložte zlobu, nenávist, urážky a pomluvy.
9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
Neoklamávejte jeden druhého; lež a neupřímnost provázely váš starý život.
10 ௧0 தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கு ஒப்பாக பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொண்டிருக்கிறீர்களே.
Zřekněte se svých dřívějších zvyků a dejte se přetvořit Bohem, abyste byli jemu podobní a plnili jeho vůli. Na všechno se budete dívat jinak: nebude pro vás podstatné, jakého je kdo původu, národnosti, jak je bohatý, v jakých tradicích vyrostl, jaké má vzdělání, postavení a nevím co ještě. Bude-li vám Kristus vším, zastíní všechno ostatní.
11 ௧௧ அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனம் உள்ளவனென்றும், விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை, யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார்.
12 ௧௨ ஆகவே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், அமைதியையும், நீடிய பொறுமையையும் அணிந்துகொண்டு;
Bůh vás miluje a vybral si vás pro sebe. Dokazujte to soucitností, přívětivostí, skromností. Buďte pokorní, trpěliví a snášenliví.
13 ௧௩ ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
Odpouštějte si navzájem, co máte proti sobě; vždyť i vám Bůh odpustil.
14 ௧௪ இவை எல்லாவற்றின்மேலும், பூரண நற்குணத்தின் கட்டாகிய அன்பை அணிந்துகொள்ளுங்கள்.
Především prokazujte lásku, ona je poutem nejdokonalejším.
15 ௧௫ தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள்.
Ať ve vašem srdci nakonec vždy zvítězí Kristův pokoj, jak to má být u těch, které on spojil. A nezapomeňte na vděčnost.
16 ௧௬ கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே எல்லா ஞானத்தோடும் பரிபூரணமாக குடியிருப்பதாக; பாடல்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்திலே கர்த்த்தரைப் பக்தியுடன் பாடி;
Mějte stále na paměti Kristovo učení; jeden druhému pomáhejte k jeho lepšímu pochopení a vzájemně se moudře napomínejte. Z vděčného srdce zpívejte Bohu písně k jeho oslavě.
17 ௧௭ வார்த்தையினாலாவது செயல்களினாலாவது, நீங்கள் எதைச்செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் மூலமாகப் பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
Všechno, co činíte a mluvíte, dělejte tak, jak by to na vašem místě dělal Kristus.
18 ௧௮ மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.
Ženy podřizujte se svým mužům, jak se na křesťanky sluší.
19 ௧௯ கணவன்மார்களே, உங்களுடைய மனைவிகளில் அன்பு செலுத்துங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.
A vy, muži, své ženy milujte a nejednejte s nimi jako se služkami.
20 ௨0 பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்கு விருப்பமானது.
Děti, poslouchejte ve všem své rodiče, tak se to líbí Pánu.
21 ௨௧ பிதாக்களே, உங்களுடைய பிள்ளைகள் மனம் தளர்ந்துபோகாதபடி, அவர்களை கோபமூட்டாமலிருங்கள்.
A vy, otcové, nebuďte ke svým dětem nespravedliví, aby se vám neodcizily.
22 ௨௨ வேலைக்காரர்களே, சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனிதர்களைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு பணிவிடைசெய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடு பணிவிடைசெய்யுங்கள்.
Vy, podřízení, mějte v úctě své představené. Svoje povinnosti plňte ochotně, ne jenom když jste sledováni.
23 ௨௩ நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைத் தொழுதுகொள்ளுகிறதினாலே, உரிமைப்பங்கின் பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,
Pracujte opravdově, ne na oko pro lidi, ale jako pro Pána.
24 ௨௪ எதைச்செய்தாலும், அதை மனிதர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாகச் செய்யுங்கள்.
Vždyť také od něho dostanete konečnou odměnu, podíl na jeho království. Vaším skutečným Pánem je přece Kristus.
25 ௨௫ அநியாயம் செய்கிறவன் தான் செய்த அநியாயத்திற்குரிய பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.
A konečně – každý kdo se dopouští křivdy, dočká se odplaty, ať je to kdo chce. U Boha nemá nikdo protekci.

< கொலோசெயர் 3 >