< 3 யோவான் 1 >
1 ௧ மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவிற்கு எழுதுகிறதாவது:
这封信来自长老,写给我以真理热爱的朋友该犹。
2 ௨ பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாக இருக்கும்படி ஜெபித்துக்கொள்கிறேன்.
我的朋友,祝你们所做的一切都顺利,身体健壮,就像我所知你们健全的灵性。
3 ௩ சகோதரர்கள் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது அதிக சந்தோஷப்பட்டேன்.
有些信徒来到这里,向我讲述你对真理的忠诚,以及你如何在生活中遵循真理,对此我非常高兴。
4 ௪ என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.
听说我亲爱的朋友们遵循真理,没有什么比这更让我快乐了。
5 ௫ பிரியமானவனே, நீ சகோதரர்களுக்கும், அந்நியர்களுக்கும் செய்கிற எல்லாவற்றையும் உண்மையாகச் செய்கிறாய்.
我的朋友,你照顾各位兄弟,包括那些你不认识的人,这显示出你值得信赖。
6 ௬ அவர்கள் உன்னுடைய அன்பைக்குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்; தேவனுக்குத் தகுதியானபடி நீ அவர்களை வழியனுப்பிவைத்தால் நலமாக இருக்கும்.
他们曾在教会面前充分说明了你的爱。请你照上帝所喜欢的方式,帮助他们继续其旅程,
7 ௭ ஏனென்றால், அவர்கள் யூதரல்லாத மக்களிடம் ஒன்றும் வாங்காமல் தேவனுடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள்.
因为他们为主之名旅行,没有从非信徒那里接受甚么。
8 ௮ ஆகவே, நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாக இருப்பதற்காக அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
所以我们应当支持他们,好让我们可以在真理中分享。
9 ௯ நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாக இருக்கவிரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
关于这件事,我曾写信给教会,但想作领袖的狄特腓并不接受我的权威。
10 ௧0 ஆகவே, நான் வந்தால், அவன் எங்களுக்கு எதிராகப் பொல்லாத வார்த்தைகளைப் பேசி, செய்துவருகிற செயல்களை ஞாபகப்படுத்துவேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தன்னுடைய சகோதரர்களை ஏற்றுக்கொள்ளாமலிருப்பது மட்டுமல்லாமல், ஏற்றுக்கொள்ள விருப்பமாக இருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்கு வெளியே தள்ளுகிறான்.
因此,如果我真的造访,要说清楚他都做了什么。他曾恶言中伤我们;不仅如此,他还拒绝欢迎其他兄弟。他也不让其他人欢迎他们,并把那些欢迎他们的人赶出了教会。
11 ௧௧ பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைப் பார்த்தது இல்லை.
我的朋友,不要模仿恶,要效法善。那些做善事的人属于上帝,作恶之人不知道上帝。
12 ௧௨ தேமேத்திரியு எல்லோராலும் நற்சாட்சி பெற்றதும் இல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சி பெற்றவன்; நாங்களும் சாட்சி கொடுக்கிறோம், எங்களுடைய சாட்சி உண்மை என்று அறிவீர்கள்.
众人都说低米丢好,真相说明了一切。我们也赞扬他,你知道我们讲的都是真理。
13 ௧௩ எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் மையினாலும், இறகினாலும் எழுத எனக்கு விருப்பம் இல்லை.
我还有许多话想要说给你听,但我不想用笔墨写给你。
14 ௧௪ சீக்கிரமாக உன்னைப் பார்க்கலாம் என்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாகப் பேசிக்கொள்ளுவோம். உனக்கு சமாதானம் உண்டாவதாக. நண்பர்கள் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். நண்பர்களைப் பெயர் பெயராக வாழ்த்துவாயாக.
盼望很快就见到你,这样我们就可以见面谈。 愿你平安!这里的朋友们向你问候。请替我向各位朋友一一问候。