< 2 தீமோத்தேயு 1 >
1 ௧ கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைக்குறித்த வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய விருப்பத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாக இருக்கிற பவுல்,
Павло, з волі Божої апостол Христа Ісуса, згідно з обітницею життя, що в Христі Ісусі.
2 ௨ பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவிற்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
Тимофієві, [моїй] улюбленій дитині. Благодать, милосердя [і] мир від Бога Отця та Христа Ісуса, нашого Господа!
3 ௩ நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரையும் நினைவுகூர்ந்து, மகிழ்ச்சியால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாக இருந்து,
Я вдячний Богові, Якому служу з діда-прадіда з чистим сумлінням, що постійно, вдень і вночі, пам’ятаю тебе у своїх молитвах.
4 ௪ உன்னிலுள்ள மாயமில்லாத விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்தமனச்சாட்சியோடு ஆராதித்துவரும் தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.
Пригадуючи твої сльози, я прагну побачити тебе, щоб сповнитись радістю.
5 ௫ அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.
Я згадую твою нелицемірну віру, яка була спочатку у твоєї бабусі Лоїди й матері Євникії і яку, впевнений, маєш і ти.
6 ௬ இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கரங்களை வைத்ததினால் உனக்கு உண்டான தேவ வரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.
Із цієї причини я нагадую тобі, щоб ти розпалював полум’я Божого дару, який є в тобі через покладання моїх рук.
7 ௭ தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடுக்காமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
Адже Бог дав нам не духа боягузтва, а [духа] сили, любові та самовладання.
8 ௮ ஆகவே, நம்முடைய கர்த்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்குரியபடி நற்செய்திக்காக என்னோடுகூடத் தீங்கு அனுபவி.
Тому не соромся свідчення нашого Господа й мене, Його в’язня, а страждай разом зі мною за Добру Звістку з допомогою Божої сили.
9 ௯ அவர் நம்முடைய செயல்களின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆரம்பகாலமுதல் கிறிஸ்து இயேசுவிற்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
Він спас нас і покликав нас святим покликанням не завдяки нашим ділам, а завдяки Своєму наміру та благодаті, яку дав нам у Христі Ісусі до початку часів. (aiōnios )
10 ௧0 நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாக அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் நற்செய்தியினாலே வெளியரங்கமாக்கினார். (aiōnios )
Тепер же вона відкрилася через з’явлення нашого Спасителя, Христа Ісуса, Який знищив смерть і освітив життя та безсмертя Доброю Звісткою,
11 ௧௧ அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதவர்களுக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன்.
для якої я був призначений проповідником, апостолом і вчителем язичників.
12 ௧௨ அதினாலே நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆனாலும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்தவர் யார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்தநாள்வரைக் காத்துக்கொள்ள வல்லவராக இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறேன்.
Саме тому я й страждаю [зараз], але не соромлюся, бо знаю, у Кого повірив, і я впевнений, що Він спроможний зберегти те, що я [Йому] довірив, до того Дня.
13 ௧௩ நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வார்த்தைகளை மாதிரியாக வைத்துப் பின்பற்று.
Тримайся того зразка здорового вчення, яке ти від мене почув, у вірі та любові, що в Христі Ісусі.
14 ௧௪ உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்காரியங்களை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியானவராலே காத்துக்கொள்.
Оберігай те добре [вчення, ] що довірене тобі за допомогою Святого Духа, Який перебуває в нас.
15 ௧௫ ஆசியா நாட்டிலிருக்கிற அனைவரும், அவர்களில் பிகெல்லு, எர்மொகெனே என்பவர்கள் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.
Ти знаєш, що всі, хто з Азії, відвернулися від мене, включно з Фіґелом та Гермоґеном.
16 ௧௬ ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்குக் கர்த்தர் இரக்கம் கட்டளையிடுவாராக; அவன் அநேகமுறை என்னை இளைப்பாரச்செய்தான்; என் கட்டுக்களைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;
Нехай Господь змилується над домом Онисифора, адже він часто мене підбадьорював і не соромився моїх кайданів.
17 ௧௭ அவன் ரோமாவில் வந்திருந்தபோது மிகுந்த பிரயாசப்பட்டு என்னைத் தேடிக் கண்டுபிடித்தான்.
Навпаки, коли він прибув у Рим, то наполегливо шукав мене й знайшов.
18 ௧௮ அந்த நாளிலே அவன் கர்த்தரிடத்தில் இரக்கத்தைக் கண்டடையும்படி, கர்த்தர் அவனுக்கு இரக்கம்செய்வாராக; அவன் எபேசுவிலே செய்த பலவிதமான உதவிகளையும் நீ நன்றாக அறிந்திருக்கிறாயே.
Нехай дасть Бог, щоб він знайшов милість перед Господом у той День. А про те, як багато він служив в Ефесі, ти дуже добре знаєш.