< 2 சாமுவேல் 23 >
1 ௧ தாவீதின் கடைசி வார்த்தைகள்: “மேன்மையாக உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இனிமையாகப் பாடின ஈசாயின் மகனான தாவீது என்னும் மனிதன் சொல்லுகிறது என்னவென்றால்;
И сия словеса Давидова последняя. Верен Давид сын Иессеов, и верен муж, егоже возстави Господь в христа Бога Иаковля, и благолепны псалмы Израилевы.
2 ௨ யெகோவாவுடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.
И Дух Господень глагола во мне, и слово Его на языце моем.
3 ௩ இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபதியாக மனிதர்களை ஆட்சி செய்து, தெய்வபயத்தோடு ஆளுகிறவர் இருப்பார்.
Глаголет Бог Израилев: мне глагола хранитель Израилев притчу: рех в человецех: како удержите страх Божий?
4 ௪ அவர் காலையில் மேகம் இல்லாமல் உதித்து, மழைக்குப்பின்பு தன்னுடைய வெளிச்சத்தினால் புல்லை பூமியிலிருந்து முளைக்கச்செய்கிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.
И во свете Божии утреннем, и возсия солнце заутра, не прейде от сияния, и яко от дождя злачна от земли.
5 ௫ என்னுடைய வீடு தேவனிடம் இப்படி இருக்காதோ? அனைத்தும் தீர்மானித்திருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா இரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் பெருகச்செய்யாமல் இருப்பாரோ?
Не тако бо дом мой с Крепким: завет бо вечен положи ми, готов во всяком времени сохранен: яко все спасение мое и все хотение во Господе, яко не имать прозябнути беззаконный.
6 ௬ தீயவர்கள் அனைவரும், கையினால் பிடிக்கப்படமுடியாததாக எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள்.
Якоже терние извержено вси сии, яко не возмутся рукою,
7 ௭ அவைகளை ஒருவன் தொடப்போனால், இரும்பாலான ஆயுதத்தையும் ஈட்டிப்பிடியையும் இறுகப் பிடித்துக்கொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்திலேயே அக்கினியால் முழுவதும் சுட்டெரிக்கப்படும்” என்றான்.
и муж не потрудится в них: и множество железа, и древо копийное, и огнем сожжет, и попалятся в срамоту свою.
8 ௮ தாவீதுக்கு இருந்த பலசாலிகளின் பெயர்கள்: தக்கெமோனியின் மகனான யோசேப்பாசெபெத் என்பவன் இராணுவ அதிகாரிகளின் தலைவன்; இவன் 800 பேரை ஒன்றாக வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரைச்சேர்த்தவன்.
Сия имена сильных Давидовых: Иевосфей Хананеанин князь третияго есть: адинон асоней, сей обнажи мечь свой на осмь сот воинов (и победи) единою.
9 ௯ இவனுக்கு இரண்டாவது, அகோயின் மகனான தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர்கள் யுத்தத்திற்குக் கூடின இடத்திலே இஸ்ரவேல் மனிதர்கள் போகும்போது, தாவீதோடு இருந்து பெலிஸ்தர்களை சபித்த மூன்று பலசாலிகளில் ஒருவனாக இருந்தான்.
И по нем Елеазар, сын отца брата его, в триех сильных братиях, сей бе со Давидом (во сирране) внегда поносити ему во иноплеменницех: и иноплеменницы собрашася тамо на брань,
10 ௧0 இவன் எழுந்து தன்னுடைய கை சோர்ந்து, தன்னுடைய கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளும்வரை பெலிஸ்தர்களை வெட்டினான்; அன்றையதினம் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார்; மக்கள் கொள்ளையிடுவதற்குமட்டும் அவனுக்குப் பின்சென்றார்கள்.
и изыдоша мужие Израилевы противу лица их, и той воста и убиваше иноплеменники, дондеже утрудися рука его и прильпе рука его к мечу: и сотвори Господь спасение велико в той день: и людие обратишася вслед его токмо совлачати.
11 ௧௧ இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் மகனான சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயிறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர்கள் ஏராளமாகக் கூடி, மக்கள் பெலிஸ்தர்களைக் கண்டு ஓடுகிறபோது,
И по нем Самаиа сын Асы, Арухейский: и собрашася иноплеменницы во Фирию: и бе тамо часть села исполнь лящи: и людие бежаша от лица иноплеменнича:
12 ௧௨ இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தர்களைக் கொன்றுபோட்டான்; அதனால் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார்.
и ста аки столп посреде части, и исхити ю, и порази иноплеменники: и сотвори Господь спасение велико.
13 ௧௩ முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்று பேர்களும் அறுவடையின் நாளில் அதுல்லாம் கெபியிலே தாவீதிடம் போயிருந்தார்கள்; பெலிஸ்தர்களின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே முகாமிட்டபோது,
И снидоша три князи от тридесятих, и приидоша в касон к Давиду в вертеп Одоллам: и чинове иноплеменник ополчишася во юдоли Рафаинстей.
14 ௧௪ தாவீது பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தர்களின் முகாம் பெத்லெகேமிலே இருந்தது.
И Давид тогда бе во обдержании, и стан иноплеменническ бе тогда в Вифлееме.
15 ௧௫ தாவீது பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆசைகொண்டு: என்னுடைய தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
И возжада Давид и рече: кто напоит мя водою из рова, иже в Вифлееме при вратех? Стан же бе тогда иноплеменничь в Вифлееме.
16 ௧௬ அப்பொழுது இந்த மூன்று பெலசாலிகளும் பெலிஸ்தர்களின் முகாமில் துணிந்து புகுந்துபோய், பெத்லெகேமின் நுழைவுவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதிடம் கொண்டு வந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனம் இல்லாமல் அதைக் யெகோவாவெக்கென்று ஊற்றிப்போட்டு:
И расторгоша трие сильнии ополчение иноплеменничо, и почерпоша воды из рова Вифлеемскаго, иже при вратех: и взяша, и приидоша ко Давиду, и не восхоте пити ея: и возлия ю Господу
17 ௧௭ யெகோவாவே, தங்கள் உயிரை பொருட்டாக எண்ணாமல் போய்வந்த அந்த மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாக இருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனம் இல்லாமலிருந்தான்; இப்படி இந்த மூன்று பெலசாலிகளும் செய்தார்கள்.
и рече: милостив мне, Господи, еже сотворити сие, кровь ли мужей пошедших в душах своих пити имам? И не восхоте пити ея. Сия сотвориша трие сильнии.
18 ௧௮ யோவாபின் சகோதரனும் செருயாவின் மகனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் முதன்மையானவன்; அவன் தன்னுடைய ஈட்டியை ஓங்கி 300 பேரைக் கொன்றதால், இந்த மூன்றுபேர்களில் பெயர்பெற்றவனானான்.
И Авесса брат Иоавль сын Саруин, сей бе князь в триех, и сей воздвиже копие свое на триста язвеных, и тому имя есть в триех.
19 ௧௯ இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாக இருந்ததால் அல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கு அவன் சமமானவன் அல்ல.
От триех оных славный, и бысть им князь, и даже до триех не прииде.
20 ௨0 பலசாலியான யோய்தாவின் மகனும் கப்செயேல் ஊரைச்சேர்ந்தவனுமான பெனாயாவும் செயல்களில் வல்லவனாக இருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலிமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைக்காலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.
И Ванеа сын Иодаев, муж сей премног в делех, от Кавасаила, и сей уби два сына Ариила Моавскаго: и той сниде, и уби льва посреде рова в день снежен:
21 ௨௧ அவன் பயங்கர உயரமுள்ள ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டி இருக்கும்போது, இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடம் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பிடுங்கி, அவன் ஈட்டியாலே அவனைக் கொன்றுபோட்டான்.
и той порази мужа Египтянина, мужа красна, в руце же Египтянина копие яко древо лествицы корабленыя: и сниде к нему со палицею, и исторже копие из руку Египтянина, и уби его копием его:
22 ௨௨ இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்தபடியால், மூன்று பலசாலிகளுக்குள்ளே புகழ்பெற்றவனாக இருந்தான்.
сия сотвори Ванеа сын Иодаев, и тому имя в триех сильных,
23 ௨௩ 30 பேர்களிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனை தாவீது தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவனாக வைத்தான்.
от триех славный, и ко трием не прииде: и постави его Давид над таинники своими.
24 ௨௪ யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற 30 பேர்களில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,
И сия имена сильных Давида царя: Асаил брат Иоавль, сей в тридесятих: Елеанан сын отца брата его от Вифлеема:
25 ௨௫ ஆரோதியனான சம்மா, ஆரோதியனான எலிக்கா,
Семоф Ародиин:
26 ௨௬ பல்தியனான ஏலெஸ், இக்கேசின் மகனான ஈரா என்னும் தெக்கோவியன்.
Хеллис Келофийский: Ира сын Еккиса Фекоитскаго:
27 ௨௭ ஆனதோத்தியனான அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,
Авиезер Анафофитский: Савухей иже от Асофиты:
28 ௨௮ அகோகியனான சல்மோன், நெத்தோபாத்தியனான மகராயி,
Еллон Алонитский: моей Нетофафитянин:
29 ௨௯ பானாவின் மகனான ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் வம்சத்தார்களின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி,
Ели сын Ваань, иже от Нетофафит: Еффи сын Ривань от Гаваона сынов Вениаминих:
30 ௩0 பிரத்தோனியனான பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானான ஈத்தாயி,
Ванеас Фарафонитский: Урий от Наалгеа:
31 ௩௧ அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனான அஸ்மாவேத்,
Ариил сын Аравофитянина: Заор Варсамитский:
32 ௩௨ சால்போனியனான ஏலியாபா, யாசேனின் மகன்களில் யோனத்தான் என்பவன்.
Елеаса сын Салавонитский: Васей гонитский:
33 ௩௩ ஆராரியனான சம்மா, சாராரின் மகனான அகியாம் என்னும் ஆராரியன்,
Ионафан сын Самана Ароритскаго: Ахиан сын Арати Арафурскаго:
34 ௩௪ மாகாத்தியனின் மகனான அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனான அகித்தோப்பேலின் மகன் எலியாம் என்பவன்.
Елифалаф сын Маахиавль: Елиав сын Ахитофела Гелонитскаго:
35 ௩௫ கர்மேலியனான எஸ்ராயி, அர்பியனான பாராயி,
Асараи Кармилский: Урем сын Асви:
36 ௩௬ சோபா ஊரைச்சேர்ந்த நாத்தானின் மகன் ஈகால், காத்தியனான பானி,
и Гала сын Нафанов: и Ваан сын Агарин:
37 ௩௭ அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனான யோவாபின் ஆயுதம் ஏந்திய பெரோத்தியனான நகராய்,
Елли Амманитский: Гелорей Вирофийский, носяй оружие Иоава сына Саруина:
38 ௩௮ இத்ரியனான ஈரா, இத்ரியனான காரேப்,
Ирас Еффирский: Гарев Иерфейский: и Уриа Гефейский.
39 ௩௯ ஏத்தியனான உரியா என்பவர்களே; ஆக 37 பேர்.
Всех тридесять и седмь.