< 2 இராஜாக்கள் 3 >

1 யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினெட்டாம் வருட ஆட்சியில் ஆகாபின் மகனாகிய யோராம் சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிப் பன்னிரெண்டு வருடங்கள் ஆட்சிசெய்து,
И Иорам сын Ахаавов воцарися над Израилем в Самарии, в лето осмоенадесять Иосафата царя Иудина, и царствова лет дванадесять,
2 யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனைப் போலவும் தன் தாயைப் போலவும் அல்ல; தன் தகப்பன் உண்டாக்கிய பாகாலின் சிலையை அகற்றிவிட்டான்.
и сотвори лукавое пред очима Господнима: обаче не якоже отец его и не якоже мати его: и разруши капища Ваалова, яже сотвори отец его:
3 என்றாலும் இஸ்ரவேலைப் பாவம் செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் நீங்காமல் அவைகளிலே சிக்கிக்கொண்டிருந்தான்.
обаче ко греху Иеровоама сына Наватова, иже введе во грех Израиля, прилепися и не отступи от него.
4 மோவாபின் ராஜாவாகிய மேசா, திரளான ஆடுமாடுகளை உடையவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவிற்கு ஒரு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், ஒரு இலட்சம் குறும்பாட்டுக் கடாக்களையும் செலுத்திவந்தான்.
И Моса царь Моавль бе нокид и даяше дань царю Израилеву, сто тысящ агнцев и сто тысящ овнов с рунами.
5 ஆகாப் இறந்தபின்பு மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவிற்கு விரோதமாகக் கலகம் செய்தான்.
И бысть по умертвии Ахаавли и отвержеся царь Моавль царя Израилева.
6 அந்தக் காலத்திலே யோராம் என்னும் ராஜா சமாரியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலையெல்லாம் எண்ணிக்கை செய்து போய்:
И изыде царь Иорам во дни оны от Самарии и согляда Израиля,
7 மோவாபின் ராஜா எனக்கு விரோதமாகக் கலகம்செய்தான்; மோவாபியர்கள்மேல் போர்செய்ய, என்னோடேகூட வருகிறீரா என்று யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைக் கேட்டனுப்பினதற்கு; அவன் நான் வருகிறேன்; நான்தான் நீர், என்னுடைய மக்கள் உம்முடைய மக்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.
и иде, и посла ко Иосафату царю Иудину, глаголя: царь Моавль отвержеся мене: идеши ли со мною на брань на Моава? И рече: взыду: сице мне, якоже и тебе: якоже людие мои, людие твои: якоже кони мои, кони твои.
8 எந்த வழியாகப் போவோம் என்று கேட்டான்; அதற்கு அவன்: ஏதோம் வனாந்திரவழியாகப் போவோம் என்றான்.
И рече: киим путем взыдем? И рече: путем пустыни Едомския.
9 அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாட்கள் சுற்றித்திரிந்தபோது, அவர்களுக்குப் பின்செல்லுகிற இராணுவத்திற்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாமல்போனது.
И иде царь Израилев и царь Иудин и царь Едомль, и идоша путем седмь дний: и не бе полку воды и скотом сущым с ними.
10 ௧0 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் யெகோவா மோவாபியர்களின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்.
И рече отроком своим царь Израилев: о, яко созва Господь три сия цари идущыя предати их в руце Моавли.
11 ௧௧ அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிப்பதற்கு யெகோவாவுடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டதற்கு, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் ஊற்றிய சாப்பாத்தின் மகனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் வேலைக்காரர்களில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான்.
И рече Иосафат к нему царь Иудин: есть ли зде пророк Господень, и вопросим Господа им? И отвеща един отрок царя Израилева и рече: зде есть Елиссей сын Сафатов, иже возливаше воду на руце Илиине.
12 ௧௨ அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: யெகோவாவுடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்திற்குப் போனார்கள்.
И рече Иосафат: есть с ним глагол Господень. И сниде к нему царь Израилев и Иосафат царь Иудин и царь Едомль.
13 ௧௩ எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பன் மற்றும் தாயாருடைய தீர்க்கதரிசிகளிடம் போ என்றான்; அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, யெகோவா இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியர்களின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான்.
И рече Елиссей ко царю Израилеву: что мне и тебе? Иди ко пророком отца твоего и ко пророком матере твоея. И рече ему царь Израилев: еда созва Господь три цари, еже предати я в руце Моавли?
14 ௧௪ அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பார்க்காமலிருந்தால் நான் உம்மைக் கவனிக்கவும் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய யெகோவாவுக்கு முன் நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
И рече Елиссей: жив Господь Сил емуже предстою пред Ним, яко аще бых не лице Иосафата царя Иудина аз приял, то воззрел ли бых на тя, и видел ли бых тя?
15 ௧௫ இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது யெகோவாவுடைய கரம் அவன்மேல் இறங்கி,
И ныне приведи ми певца. И бысть егда воспеваше певец, и бысть на нем рука Господня,
16 ௧௬ அவன்: யெகோவா உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள்.
и рече: тако глаголет Господь: сотворите поток сей рвами рвами,
17 ௧௭ நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும், உங்களுடைய ஆடுமாடுகளும் கால்நடைகளும் குடிப்பதற்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று யெகோவா சொல்லுகிறார்.
яко тако глаголет Господь: не узрите духа, и ниже увидите дождя: и поток сей наполнится воды, и пиете вы и стяжания ваша и скоти ваши:
18 ௧௮ இது யெகோவாவின் பார்வைக்கு சாதாரணகாரியம்; மோவாபியர்களையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்.
и легко сие пред очима Господнима, и предам Моава в руки вашя,
19 ௧௯ நீங்கள் சகல கோட்டைகளையும், சிறந்த பட்டணங்களையும் தகர்த்து நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் அடைத்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான்.
и поразите всяк град тверд, и всяко древо благо низложите, и всяк источник воды заградите, и всяку часть благу разбиете камением.
20 ௨0 அடுத்தநாள் காலையில் பலிசெலுத்துகிற நேரத்தில், இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாக வந்ததால் தேசம் தண்ணீரால் நிரம்பினது.
И бысть заутра восходящей жертве, и се, воды идяху путем Едомским, и исполнися воды земля.
21 ௨௧ தங்களோடு போர்செய்ய ராஜாக்கள் வருகிறதை மோவாபியர்கள் அனைவரும் கேட்டபோது, அவர்கள் ஆயுதம் பயன்படுத்தக்கூடிய வயதுள்ளவர்களையும், அதற்குமேல் தகுதியானவர்கள் எல்லோரையும் சேர்த்து அழைத்துக்கொண்டுவந்து எல்லையிலே நின்றார்கள்.
И вси Моавитяне услышаша, яко взыдоша тридесяти царя братися с ними. И возопиша отвсюду препоясаннии оружием и реша: ох: и сташа у предела.
22 ௨௨ மோவாபியர்கள் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின்மேல் பிரகாசித்ததால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தத்தைப் போல சிவப்பாகக் காணப்பட்டது.
И ураниша заутра, и солнце возсия на воды: и виде Моав сопротив воды чермны яко кровь,
23 ௨௩ அதனால் அவர்கள்: இது இரத்தம், அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு இறந்துபோனார்கள்; ஆதலால் மோவாபியர்களே, கொள்ளையிட வாருங்கள் என்று சொன்னார்கள்.
и рече: кровь сия есть от оружия: и бишася царие, и уби муж искренняго своего: и ныне (гряди) на корысти, Моаве.
24 ௨௪ அவர்கள் இஸ்ரவேலின் முகாமிற்கு வந்தபோது, இஸ்ரவேலர்கள் எழும்பி, மோவாபியர்களைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாகத் தாக்கி, அவர்களுடைய தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியர்களைத் தாக்கி,
И внидоша в полк Израилев, Израилтяне же восташа. И избиша Моавлян: и побегоша от лица их: и внидоша входяще и биюще Моава,
25 ௨௫ பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலங்களிலும் கற்களால் நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் அடைத்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலே மாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிக்கப்படாமல் இருக்கிறபோது; கவண்காரர்கள் அதைச் சுற்றிவளைத்து அதையும் சேதமாக்கினார்கள்.
и грады разбиша, и всяку часть благу навергоша мужие камением, и наполниша ю, и всяк источник заградиша, и всяко древо благо изсекоша, донележе оставиша камение стен разбиено: и обступиша пращницы и разбиша его.
26 ௨௬ போர் மும்முரமாகிறதென்று மோவாபியர்களின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் கடுமையாகத் தாக்குகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டுபோனான்; ஆனாலும் அவர்களாலே முடியாமல்போனது.
И виде царь Моавль, яко укрепися над ним брань, и взя с собою седмь сот мужей со обнаженным оружием, еже просещися ко царю Едомску: и не возмогоша.
27 ௨௭ அப்பொழுது அவன் தன்னுடைய இடத்தில் ராஜாவாகப்போகிற தன் மூத்த மகனைப் பிடித்து, மதிலின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாகப் பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்கள்மேல் கடுங்கோபம் ஏற்பட்டதால், அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள்.
И поят сына своего первенца, егоже воцари вместо себе, и вознесе его во всесожжение на стене: и бысть раскаяние великое во Израили: и отступиша от него и возвратишася в землю свою.

< 2 இராஜாக்கள் 3 >