< 2 நாளாகமம் 24 >
1 ௧ யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்து, நாற்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; பெயெர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பெயர் சிபியாள்.
Fito taoñe t’Ioase te niorotse nifehe; le nifehe efa-polo taoñe e Ierosalaime ao. I Tsibia nte-Bersebà ty tahinan-drene’e.
2 ௨ ஆசாரியனாகிய யோய்தாவின் நாட்களெல்லாம் யோவாஸ் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்.
Le nanao ze soa am-pivazohoa’ Iehovà t’Ioase amy ze hene’ andro’ Iehoiada mpisoroñe.
3 ௩ அவனுக்கு யோய்தா இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொடுத்தான்; அவர்களால் மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
Nangala-baly roe ho aze t’Iehoiada, le nisamak’ ana-dahy naho anak’ ampela.
4 ௪ அதற்குப்பின்பு யெகோவாவுடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பம்கொண்டான்.
Ie añe, le tañ’ arofo’ Ioase ty nanomonty i anjomba’ Iehovày.
5 ௫ அவன் ஆசாரியர்களையும் லேவியர்களையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருடந்தோரும் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான்; ஆனாலும் லேவியர்கள் தாமதம்செய்தார்கள்.
Natonto’e o mpisoroñeo naho o nte-Levio le nanoa’e ty hoe, Akia, mb’amo rova’ Iehodao vaho atontono am’ Israele iaby ty drala hampisomontiañe ty anjomban’ Añahare boa-taoñe, le ilozoho! Fe tsy nahimbañe amy rahay o nte-Levio.
6 ௬ அப்பொழுது ராஜா, யோய்தா என்னும் தலைவனை வரவழைத்து: சாட்சியின் கூடாரத்திற்குக் கொடுக்க, யெகோவாவின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியர்களை நீர் விசாரிக்காமல் போனதென்ன?
Aa le kinanji’ i mpanjakay t’Iehoiada, talè, le hoe re ama’e, Aa vaho akore te tsy nipaia’o amo nte-Levio ty hañakatse am’ Iehoda naho am’ Ierosalaime ao i haba’ i Mosè mpitoro’ Iehovày naho amy valobohò’ Israeley ho amy kibohom-pañinay.
7 ௭ அந்தப் பொல்லாத பெண்ணாகிய அத்தாலியாளுடைய மக்கள், தேவனுடைய ஆலயத்தை வலுக்கட்டாயமாகத் திறந்து, யெகோவாவுடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை செய்யப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காக செலவு செய்துவிட்டார்களே என்றான்.
Amy te dinemodemo’ o ana-dahi’ i Atalià rakemba lo-tserekeo i anjomban’ Añaharey naho nengae’ iereo amo Baaleo o raha navaheñe añ’anjomba’ Iehovào.
8 ௮ அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் யெகோவாவுடைய ஆலய வாசலுக்கு வெளியே வைத்து,
Aa le nandranjy vata iereo ty amy lili’ i mpanjakaiy naho napo’ iareo alafe’e ao an-dalam-bein’ anjomba’ Iehovà eo;
9 ௯ யெகோவாவின் தாசனாகிய மோசே வனாந்திரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் யெகோவாவுக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் அறிவிப்புக் கொடுத்தார்கள்.
naho nitsey e Iehoda vaho e Ierosalaime ao ty hindeseñe amy Iehovà i vili-loha nampanoe’ i Mosè mpitoron’ Añahare am’ Israele am-patrambeiy.
10 ௧0 அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா மக்களும் சந்தோஷமாகக் கொண்டுவந்து பெட்டி நிறைய அதிலே போட்டார்கள்.
Le nirebeke iaby o roandriañeo naho ondatio, songa ninday vaho nampipok’ amy vatay ampara’ t’ie niheneke.
11 ௧௧ அதிக பணம் உண்டென்று கண்டு, லேவியர்கள் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர்கள் அருகில் கொண்டுவரப்படும்போது, ராஜாவின் அதிகாரியும் பிரதான ஆசாரியனுடைய உதவியாளனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் இடத்திலே வைப்பார்கள்; இப்படி ஒவ்வொரு நாளும் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.
Ie amy zao naho nazilim-pità’ o nte-Levio i vatay vaho nioniñe te maro o dralao, le nimb’eo i mpitan-tsokim-panjakay naho ty sorotà’ i mpisorom-beiy le nikoahe’ iereo i vatay vaho nampolieñe an-toe’e eo; izay ty nanoe’ iareo handro an-kandro vaho nanonton-drala tsifotofoto.
12 ௧௨ அதை ராஜாவும் யோய்தாவும் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையைச் செய்யும் ஊழியக்காரர்கள் கையிலே கொடுத்தார்கள்; அதனால் அவர்கள் யெகோவாவுடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி சிற்பிகளையும், தச்சரையும், யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொல்லர்களையும் கம்மாளர்களையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.
Natolo’ i mpanjakay naho Iehoiada amo mpitoloñe am-pitoroñañe i anjomba’ Iehovàio izay vaho nañarama mpandrafi-bato naho mpandranjy, hampisomontiañe i anjomba’ Iehovày naho mpanefe viñe vaho torisike hikotokotok’ añ’ anjomba’ Iehovày.
13 ௧௩ அப்படி வேலையை செய்கிறவர்கள் தங்கள் கைகளினாலே வேலையைச் செய்து, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின நிலைமைக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள்.
Aa le nifanehake o mpitoloñeo naho nifonitse am-pità’ iareo i asay naho nifonire’ iareo manahake te taolo i anjomban’ Añaharey vaho nañafatratse aze.
14 ௧௪ அதை முடித்தபின்பு, மீதமிருந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அந்தப் பணத்தைக் கொண்டு யெகோவாவுடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் செய்தான்; யோய்தாவின் நாட்களெல்லாம் அனுதினமும் யெகோவாவுடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தார்கள்.
Ie nifonitse le nendese’ iareo añatrefa’ i mpanjakay naho Iehoiada eo o drala tsy nirì’eo vaho ie ty nitsenea’ iareo fanake ho a i anjomba’ Iehovày, fana-pitoroñañe naho fañengañe naho fìoke naho fanake volamena naho volafoty vaho nañenga soroñe añ’ anjomba’ Iehovà ao nainai’e tañ’ andro’ Iehoiadà.
15 ௧௫ யோய்தா நீண்டஆயுள் உள்ளவனாக முதிர்வயதில் இறந்தான்; அவன் இறக்கும்போது நூற்றுமுப்பது வயதாயிருந்தான்.
Fe nigain-kantetse t’Iehoiada ie ni-lifots’ andro le nivilasy; zato-tsi-telopolo taoñe t’ie nihomake.
16 ௧௬ அவன் தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மை செய்ததால், அவனை தாவீதின் நகரத்தில் ராஜாக்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்.
Le nalente’ iereo an-drova’ i Davide amo mpanjakao, ie nanao soa am’ Israele naho aman’ Añahare vaho amy anjomba’ey.
17 ௧௭ யோய்தா இறந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்கள் சொல்வதைக் கவனித்தான்
Ie añe ty nihomaha’ Iehoiada le nomb’ amy mpanjakay o roandria’ Iehodao niambane ama’e; vaho hinao’ i mpanjakay.
18 ௧௮ அப்படியே அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் வணங்கினார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினால் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.
Le nadò’ iareo i anjomba’ Iehovà Andrianañaharen-droae’ iareoy naho nitoroñe o Aserào naho o raham-pahasiveo vaho nifetsak’ am’ Iehoda naho am’ Ierosalaime ty haviñerañe ty amy hakeo zay.
19 ௧௯ அவர்களைத் தம்மிடத்திற்குத் திரும்பச்செய்ய யெகோவா அவர்களிடத்திலே தீர்க்கதரிசிகளை அனுப்பினார்; அவர்கள் மக்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டார்கள்; ஆனாலும் மக்கள் அவர்களை அசட்டைசெய்தார்கள்.
Nampihitrifañe mpitoky hampipoly iareo mb’am’ Iehovà, aa ndra t’ie nitolom-pitaroñe tsy nimete nanolo-ravembia iereo.
20 ௨0 அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் மகனான சகரியாவின்மேல் இறங்கினதால், அவன் மக்களுக்கு எதிரே நின்று: நீங்கள் யெகோவாவுடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதனால் நீங்கள் செழிப்படையமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் யெகோவாவை விட்டுவிட்டதால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.
Aa le niheo amy Zekarià, ana’ Iehoiada mpisoroñe t’i Arofon’ Añahare naho nijohañe am’ondatio nanao ty hoe: Hoe ty tsaràn’ Añahare: Akore ty fandilara’ areo o lili’ Iehovào? Tsy hiraorao; aa kanao naforintse’ areo t’Iehovà le nifarie’e ka nahareo.
21 ௨௧ அதனால் அவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுசெய்து, யெகோவாவுடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கட்டளையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
Fe nikinia aze iereo vaho nametsaham-bato an-kiririsan’ anjomba’ Iehovà eo ami’ty nandilia’ i mpanjakay.
22 ௨௨ அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா, தனக்கு செய்த தயவை ராஜாவாகிய யோவாஸ் நினைக்காமல் அவனுடைய மகனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: யெகோவா அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.
Aa le tsy nitiahi’ Ioase mpanjaka ty fitretreza’ Iehoiada rae’e aze, te mone vinono’e i ana-dahi’ey, ze nanao ty hoe amy fitsingoro’ey: Ho vazoho’ Iehovà vaho ho valè’e.
23 ௨௩ அடுத்த வருடத்திலே சீரியாவின் படைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, மக்களின் பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள்.
Aa ie amy fivariña’ i taoñey, naname aze ty valobohò’ i Arame; nimb’ e Iehoda naho mb’e Ierosalaime mb’eo le zinevo’ iereo am’ondatio o mpiaolo’ ondaty iabio vaho fonga nahitri’ iareo amy mpanjaka’ i Damesèkey añe ty nikopahe’ iereo.
24 ௨௪ சீரியாவின் படை சிறுகூட்டமாக வந்திருந்தாலும், அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டதால், யெகோவா மகா பெரிய படையை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள்.
Toe am-pirimboña’ ondaty tsy ampeampe i valobohòn’ Aramey te naname, fa natolo’ Iehovà am-pità’e ty valobohòke jabajaba amy t’ie namorintseñe Iehovà Andrianañaharen-droae’ iareo. Aa le nametsa-jaka amy Ioase iereo,
25 ௨௫ அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர்கள் ஆசாரியனாகிய யோய்தாவுடைய மகன்களின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுசெய்து, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனை தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.
naho nieng’ aze naho fa navoretra’ iareo am-pere, le nikilily aze o mpitoro’eo ty amy lio’ i ana’ Iehoiada mpisoroñeiy naho vinono’ iareo am-pandrea’e eo, nikoromake; vaho naleveñe an-drova’ i Davide ao, fe tsy nalentek’ amo kiborim-panjakao.
26 ௨௬ அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்தவர்கள், அம்மோனிய பெண்ணான சிமியாத்தின் மகனாகிய சாபாத்தும், மோவாபியப் பெண்ணான சிமிரீத்தின் மகனாகிய யோசபாத்துமே.
I Zabade, ana’ i Simeate, nte-Amone naho Iehozabade ana’ i Simerite, nte-Moabe ty nikilily aze.
27 ௨௭ அவன் மகன்களைக்குறித்தும், அவன்மேல் சுமந்த பெரிய பாரத்தைக்குறித்தும், தேவனுடைய ஆலயத்தை அவன் பலப்படுத்தினதைக்குறித்தும், ராஜாக்களின் புத்தகமான சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது; அவன் மகனாகிய அமத்சியா அவனுடைய இடத்திலே ராஜாவானான்.
Aa naho o ana’eo naho ty fitoabora’ o fetse ama’eo vaho ty nampisomontie’e i anjomban’ Añaharey, oniño te sinokitse an-talily fonitse amy boke’ o mpanjakaoy. I Amatsià ana’e ty nandimbe aze nifehe.