< 1 சாமுவேல் 15 >
1 ௧ பின்பு சாமுவேல் சவுலைப் பார்த்து: இஸ்ரவேலர்களாகிய தம்முடைய மக்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்செய்வதற்குக் யெகோவா என்னை அனுப்பினாரே; இப்போதும் யெகோவாவுடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்:
Sa: miuele da Soloma amane sia: i, “Hina Gode da na amo dia Isala: ili dunu ilia hina bagade mogiligale ilegei da susuligi sogadigima: ne asunasi. Waha, dia Hina Gode Bagadedafa Ea adobe nabima!
2 ௨ சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
Hina Gode da A: malege dunuma se dabe imunu. Bai Isala: ili dunu da Idibidi soge fisili, gadili ahoanoba, A:malege ilia aowalali da ilima gegei.
3 ௩ இப்போதும் நீ போய், அமலேக்கைக் கொன்று, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடு என்கிறார் என்று சொன்னான்.
Dilia! Asili, A:malege dunuma doagala: le, liligi ilia galebe amo huluane wadela: lesima. Liligi afae mae yolesili, dunu amola uda, mano, mano dudubu, bulamagau, sibi, ga: mele amola dougi, huluanedafa fane lelegele ebelema!”
4 ௪ அப்பொழுது சவுல்: இதை மக்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களை கணக்கெடுத்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா மக்கள் பத்தாயிரம்பேருமாக இருந்தார்கள்.
Solo da ea dadi gagui dunu huluane Dileme moilaiga wele sia: ne guda: le, abedei. Isala: ili dadi gagui dunu da 200,000 agoane ba: i, amola Yuda dadi gagui dunu da 10,000 agoane ba: i.
5 ௫ சவுல் அமலேக்குடைய பட்டணம் வரை வந்து, பள்ளத்தாக்கிலே காத்திருந்தான்.
Amalalu, Solo amola ea dunu da A: malege moilai afae amoga hano hai logoga asili, logoa legei dialu.
6 ௬ சவுல் கேனியரை பார்த்து: நான் அமலேக்கியர்களோடு உங்களையும் அழிக்காதபடி, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லோருக்கும் தயைசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர்கள் அமலேக்கியர்களின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள்.
Ginaide dunu da A: malege dunu gilisibi ba: i. Be Isala: ili dunu da Idibidi fisili ga ahoanoba, Ginaide ilia aowalali da ilima asigiba: le, fidi. Amaiba: le, Solo da ilima sisane sia: i, “Na da dili amola A: malege dunu gilisili fane legesa: besa: le, ili yolesima!” Amaiba: le, Ginaide dunu da A: malege dunu yolesili, asi.
7 ௭ அப்பொழுது சவுல்: ஆவிலா துவங்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லை வரை இருந்த அமலேக்கியர்களை முறியடித்து,
Solo da A: malege dunu hasali. Ilia gegesu da Ha: fila sogega muni gegegena ahoana, Sioua hafoga: i sogega doaga: i. (Sioua da Idibidi sogega gusudili ba: i).
8 ௮ அமலேக்கியர்களின் ராஜாவான ஆகாகை உயிரோடு பிடித்தான்; மக்கள் அனைவரையும் கூர்மையான பட்டயத்தாலே படுகொலை செய்தான்.
E da A: malege hina bagade A: iga: ge mae medole legele gagui, be ea fi dunu eno huluane medole lelegei.
9 ௯ சவுலும் மக்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் சிறந்தவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனமில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான அனைத்தையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள்.
Be Solo amola ea dunu da A: iga: ge hame medole legei amola ilia da noga: idafa sibi, bulamagau, bulamagau mano amola sibi mano hame medole legei. Amola liligi noga: idafa ilia hame wadela: lesi. Ilia wadela: i amola hamedei liligi fawane wadela: lesisi.
10 ௧0 அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது:
Hina Gode da Sa: miuelema amane sia: i,
11 ௧௧ நான் சவுலை ராஜாவாக்கியது எனக்கு வருத்தமாக இருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமல் போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் வருந்தி, இரவு முழுவதும் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்.
“Na da Soloma hina hawa: hamosu iabeba: le higasa. E da Nama baligi fa: i amola Na hamoma: ne sia: i huluane giadofai.” Sa: miuele da ougi bagade ba: i. E da gasia Godema dini iana hadigi.
12 ௧௨ மறுநாள் அதிகாலையில் சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு வெற்றிதூண் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது.
Golale, hahabedafa, e da Solo hogola asi. Be Solo da Gamele Goumi amoga asi sia: be, e da nabi. Amogawi, Solo da ea hamoi dawa: loma: ne igi wanonesilalu, Giliga: le moilaiga asi.
13 ௧௩ சாமுவேல் சவுலினிடத்திற்கு போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; யெகோவாவுடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.
Amoga asili, Sa: miuele da Soloma heda: le, Solo da ema amane sia: i, “Sa: miuele! Hina Gode da dima hahawane dogolegele hamomu da defea! Na da Hina Gode Ea sia: defele hamoi!”
14 ௧௪ அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.
Sa: miuele da adole ba: i, “Amaiba: le, abuliba: le na da bulamagau gona: be amola sibi ga: ga: be nabasala: ?
15 ௧௫ அதற்குச் சவுல்: அமலேக்கியர்களிடத்திலிருந்து அவைகளைக் கொண்டு வந்தார்கள்; மக்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்.
Solo da dabe adole i, “Na dunu ilia da amo liligi A: malege dunu ilima samogele lai. Ilia da sibi amola bulamagau noga: idafa amo dia Hina Godema gobele salimusa: modalesili, oda amo huluane gugunufinisi dagoi.”
16 ௧௬ அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், யெகோவா இந்த இரவில் எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான்.
Sa: miuele da amane sia: i, “Yolema! Amalu, na da dima Hina Gode Ea nama gasia adoi amo na dima adomu.” Solo e amane sia: i, “Nama adole ima!”
17 ௧௭ அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராக இருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; யெகோவா உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் செய்தாரே.
Sa: miuele da bu adole i, “Di da musa: hamedei dunu disu dawa: lalu. Be di da wali Isala: ili fi dunu huluane ilima ouligisu dunu esala. Hina Gode da dima Isala: ili dunu ilia hina bagade hamoma: ne, susuligi sogagala: le, mogili gagai.
18 ௧௮ இப்போதும் யெகோவா: நீ போய் அமலேக்கியர்களாகிய அந்தப் பாவிகளைக் கொன்று, அவர்களை முழுவதுமாக அழிக்கும்வரை, அவர்களோடு யுத்தம்செய் என்று சொல்லி, உம்மை அந்த வழியாக அனுப்பினார்.
Amola E da dia wadela: idafa A: malege dunu huluane amo gugunufinisima: ne sia: si.
19 ௧௯ இப்படியிருக்க, நீர் யெகோவாவுடைய சொல்லைக்கேட்காமல், கொள்ளைப்பொருட்களின் மேல் ஆசைவைத்து, யெகோவாவுடைய பார்வைக்குப் தீங்கானதை செய்தது என்ன என்றான்.
Amaiba: le, dia da abuliba: le Ea sia: hame nababela: ? Dia da abuliba: le momabo nagoma: ia asili liligi uasuli lidibala: ? Dia da abuliba: le Hina Gode Ea hahawane hame ba: ma: ne hamobela: ?”
20 ௨0 சவுல் சாமுவேலை நோக்கி: நான் யெகோவாவுடைய சொல்லைக் கேட்டு, யெகோவா என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவான ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியர்களைக் கொலை செய்தேன்.
Solo da bu adole i, “Na da Hina Gode Ea sia: i defele hamoi. Na da Ea sia: i defele asili, hina bagade A: iga: ge goeguda: oule misini amola A: malege dunu huluane fane lelegei.
21 ௨௧ மக்களோ உம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குக் கில்காலிலே பலியிடுவதற்காக, கொள்ளைப்பொருட்களிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே முதன்மையானவகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்.
Be na dunu ilia da sibi amola bulamagau noga: idafa, ilia samogele hame medole legei. Be ilia da amo dia Hina Godema gobele salimusa: , Giliga: lega goeguda: oule misi.”
22 ௨௨ அதற்குச் சாமுவேல்: “யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைவிட, சர்வாங்க தகனங்களும் பலிகளும் யெகோவாவுக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைவிட கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் கொழுப்பைவிட செவிகொடுத்தலும் உத்தமம்.
Sa: miuele da amane sia: i. “Hina Gode Ea baligisu hamoma: ne hanai amo da habola: ? Nabasu hou o Godema iasu amola gobele salasu hou amola: ? Hina Godema nabasu hou da ema noga: idafa sibi gobele salasu hou baligisa.
23 ௨௩ கலகம்செய்தல் பில்லிசூனிய பாவத்திற்கும், பிடிவாதம்செய்தல் அவபக்திக்கும் விக்கிரக ஆராதனைக்கும் சமமாக இருக்கிறது; நீர் யெகோவாவுடைய வார்த்தையைப் புறக்கணித்ததாலே, அவர் உம்மை ராஜாவாக இல்லாதபடி புறக்கணித்துத் தள்ளினார்” என்றான்.
Ema odaga: su hou da wadela: i gabi dawa: su hou defele gala. Amola dodona: gi hou da wadela: idafa loboga hamoi ogogosu ‘gode’ ilima nodone sia: ne gadosu hou defele gala. Di da Hina Gode Ea sia: i higale, amo hame nababeba: le, E da di hina bagade hamomu logo hedofai dagoi.”
24 ௨௪ அப் பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் யெகோவாவுடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதால் பாவம் செய்தேன்; நான் மக்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.
Solo da bu adole i, “Dafawane! Na da wadela: le hamoi dagoi. Na da Hina Gode Ea hamoma: ne sia: i amola dia nama adoi amo giadofai dagoi. Na da nama fa: no bobogei dunu ilima beda: iba: le, ilia hanaiga fawane hamoi.
25 ௨௫ இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் யெகோவாவை தொழுதுகொள்ளும்படி, என்னோடு திரும்பிவாரும் என்றான்.
Be waha! Na dima edegesa! Na wadela: i hou gogolema: ne olofoma. Amola na da Hina Godema nodone sia: ne gadomusa: , dia na Giliga: lega sigi masa.”
26 ௨௬ சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடு திரும்பிவருவதில்லை; யெகோவாவுடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இல்லாதபடி, யெகோவா உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
Be Sa: miuele da bu adole i, “Na da ani hame buhagimu. Bai di da Hina Gode Ea sia: i higale, hame nababeba: le, E da di hina bagade hamomu logo hedofai dagoi.”
27 ௨௭ போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவனுடைய சால்வையின் தொங்கலைப் பிடித்துக் கொண்டான், அது கிழிந்துபோயிற்று.
Amalalu, Sa: miuele da masusa: delegiagaloba, Solo da ea abulaga gagulaligili, ea abula gadelai.
28 ௨௮ அப்பொழுது சாமுவேல் அவனை பார்த்து: யெகோவா இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்ஜியத்தைக் கிழித்துப்போட்டு, உம்மைவிட உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார்.
Sa: miuele da ema amane sia: i, “Wali Hina Gode da Isala: ili fi hina bagade hou amo dima dialu amo dusa: le, eno dunu dia hou baligi ema i dagoi.
29 ௨௯ இஸ்ரவேலின் பெலனாக இருப்பவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதிலிருந்து மனம் மாறுவதும் இல்லை; மனம் மாற அவர் மனிதன் அல்ல என்றான்.
Isala: ili ilia Hina Gode Hadigidafa da ogogosu hame dawa: , amola Ea asigi dawa: su hame afadenesa. E da dunu hame. E da Ea asigi dawa: su hamedafa afadenesa.”
30 ௩0 அதற்கு அவன்: நான் பாவம் செய்தேன்; இப்போது என் மக்களின் மூப்பர்களுக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனப்படுத்தி, நான் உம்முடைய தேவனாகிய யெகோவாவைத் தொழுதுகொள்ளும்படி, என்னோடு திரும்பிவாரும் என்றான்.
Solo da adole i, “Na da wadela: le hamoi dagoi. Be Isala: ili fi asigilai dunu amola dunu huluane da nama nodoma: ne, nama asigima. Na da dia Hina Godema nodone sia: ne gadomusa: , dia na buhagima: ne sigi masa.”
31 ௩௧ அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான்; சவுல் யெகோவாவைத் தொழுதுகொண்டான்.
Amaiba: le, Sa: miuele ele galu Giliga: le moilaiga buhagi. Amola Solo da Hina Godema nodone sia: ne gadoi.
32 ௩௨ பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவான ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு போனது நிச்சயம் என்றான்.
Sa: miuele da amane sia: i, “A: malege ilia hina bagade A: iga: ge nama goeguda: oule misa.” A: iga: ge da beda: ga iagugusa ema misi. E agoane dawa: i, “Na bogoma: beya: le dawa: i amo da baligi dagoi.”
33 ௩௩ சாமுவேல்: உன் பட்டயம் பெண்களைப் பிள்ளை இல்லாதவர்களாக ஆக்கினதுபோல, பெண்களுக்குள்ளே உன் தாயும் பிள்ளை இல்லாதவள் ஆவாள் என்று சொல்லி, சாமுவேல் கில்காலிலே யெகோவாவுக்கு முன்பாக ஆகாகைத் துண்டு துண்டாக வெட்டிப்போட்டான்.
Be Sa: miuele da amane sia: i, “Dia gegesu gobihei da uda bagohame ilia mano medole legei dagoi. Waha dia: me ea mano da medole legei dagoi ba: mu.” Amalalu, e da Giliga: le gobele salasu fafai (oloda) midadi, A:iga: ge fane, heda: sini fofonobone fasi.
34 ௩௪ பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான்.
Amalalu, Sa: miuele da La: ima moilaiga asi. Amola hina bagade Solo da hi moilai Gibiaga asi.
35 ௩௫ சவுல் மரணமடையும் நாள்வரை சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை; இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் யெகோவா மன வருத்தப்பட்டதினால், சாமுவேல் சவுலுக்காகத் துக்கப்பட்டுக்கொண்டிருந்தான்.
Sa: miuele ea esalusu amogalu, Solo bu hame ba: i. Be e da eha fofagisu. Amola Hina Gode da musa: Solo Isala: ili ouligima: ne ilegeiba: le, da: i dioi galu.