< 1 பேதுரு 4 >

1 இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக சரீரத்திலே பாடுகள்பட்டதினால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக அணிந்துகொள்ளுங்கள்.
それで,キリストは肉においてわたしたちのために苦しみを受けられたのですから,あなた方も同じ思いで武装しなさい。肉において苦しみを受けた人は,罪をやめているからです。
2 ஏனென்றால், சரீரத்தில் பாடுபடுகிறவன் இனி சரீரத்தில் இருக்கும் காலம்வரைக்கும் மனிதர்களுடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய விருப்பத்தின்படியே பிழைப்பதற்காகப் பாவங்களைவிட்டு விலகியிருப்பான்.
それは,あなた方が,肉における自分の残りの時を,もはや人間の欲望のためではなく,神のご意志のために生きるためです。
3 கடந்த வாழ்நாட்களிலே நாம் யூதரல்லாத மக்கள் செய்ய விரும்புவதைபோல செய்துவந்தது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் தீயஆசைகளையும் நடத்தி, மதுஅருந்தியும், களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரக ஆராதனையைச் செய்துவந்தோம்.
わたしたちはかつて,過ぎ去った時の間,異邦人たちの望むことを行ない,みだらさ,欲望,どんちゃん騒ぎ,浮かれ騒ぎ,飲み騒ぎ,嫌悪すべき偶像崇拝のうちを歩んできましたが,そうした時を過ごすのはもうたくさんだからです。
4 அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடு சேர்ந்து நீங்கள் விழுந்துவிடாமல் இருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களை அவமதிக்கிறார்கள்.
彼らは,あなた方が自分たちと共にそうした度を越した乱行に走り込まないので,ののしりつつ,不審に思っています。
5 உயிரோடு இருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறவருக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள்.
彼らは,生きている者たちと死んだ者たちとを裁く用意のある方に言い開きをすることになります。
6 இதற்காக மரித்தோர்கள், மனிதர்களுக்கு முன்பாக சரீரத்திலே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைப்பதற்காக, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
というのは,この目的のために,福音は死んだ者たちにさえ宣教されたからです。すなわち,彼らが,肉においては確かに人間がするようにして裁かれていても,霊においては神に関して生きるようになるためでした。
7 எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது; ஆகவே, தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருந்து, ஜெபம்பண்ணுவதற்கு கவனம் உள்ளவர்களாக இருங்கள்.
しかし,すべての物の終わりが近づいています。ですから,健全な思いを持ち,自制し,冷静に祈っていなさい。
8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
何よりもまず,互いの間で真剣な愛を抱きなさい。愛は多くの罪を覆うからです。
9 முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
不平を言わずに互いをよくもてなし合いなさい。
10 ௧0 அவனவன் பெற்றுக்கொண்ட வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல பொறுப்பாளர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
各自,その贈り物を受けたところに従い,神のさまざまな恵みの良い管理人として,それを互いのために役立てなさい。
11 ௧௧ ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
だれかが語るのであれば,神の託宣を語るようにして語りなさい。だれかが仕えるのであれば,神が供給してくださる力によるようにして仕えなさい。それは,神がすべてのことにおいて,イエス・キリストを通して栄光をお受けになるためです。この方に,栄光と支配権がいつまでもありますように。アーメン。 (aiōn g165)
12 ௧௨ பிரியமானவர்களே, உங்களைப் பரீட்சைப்பார்க்க உங்கள் நடுவில் அக்கினியைப்போன்ற சோதனைகள் வரும்போது ஏதோ புதுமை நடக்கிறது என்று ஆச்சரியப்படாமல்,
愛する者たちよ,あなた方を試みるために臨んできた火のような試練のことで,異常なことが自分たちに生じたかのように驚いてはいけません。
13 ௧௩ கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழ்வதற்காக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
むしろ,キリストの苦しみに共にあずかる者となっていることを喜びなさい。彼の栄光の現われの時にも非常な歓喜をもって喜ぶためです。
14 ௧௪ நீங்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக அவமதிக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே அவமதிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
キリストの名のために侮辱されているなら,あなた方は幸いです。栄光の霊また神の霊があなた方の上に休まっているからです。その方は,彼らからは冒とくされていますが,あなた方からは栄光をささげられています。
15 ௧௫ ஆகவே, உங்களில் யாரும் கொலைபாதகனாகவோ, திருடனாகவோ, தீங்கு செய்தவனாகவோ, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாகவோ இருந்து பாடுபடுகிறவனாக இருக்கக்கூடாது.
あなた方のうちのだれも,人殺し,盗人,悪を行なう者,または他人のことに干渉する者として苦しみを受けないようにしなさい。
16 ௧௬ ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமல் இருந்து, அதினால் தேவனை மகிமைப்படுத்தவேண்டும்.
しかし,あなた方のうちの一人が,クリスチャンであるために苦しみを受けるのであれば,恥じてはなりません。むしろ,そのことにおいて神に栄光をささげなさい。
17 ௧௭ நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே ஆரம்பமாகும் காலமாக இருக்கிறது; அது முதலில் நம்மிடத்திலே ஆரம்பிக்கப்பட்டால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு எப்படியாக இருக்கும்?
というのは,裁きが神の家から始まる時が来ているからです。それが最初にわたしたちから始まるのであれば,神の福音に従わない者たちにはいったい何が起こるでしょうか。
18 ௧௮ “நீதிமானே இரட்சிக்கப்படுவது கடினமென்றால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பார்கள்?
「義人が苦労して救われるのであれば,不信心な者と罪人には何が起こるだろうか」。
19 ௧௯ ஆகவே, தேவனுடைய விருப்பத்தினால் பாடுகளை அனுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாகத் தங்களுடைய ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.
ですから,神のご意志によって苦しみを受けている人々は,善を行ないつつ,自分の魂をその方,すなわち誠実な創造者に託しなさい。

< 1 பேதுரு 4 >