< 1 இராஜாக்கள் 21 >
1 ௧ இவைகளுக்குப் பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்திற்கு யெஸ்ரயேலிலே சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரண்மனையின் அருகில் ஒரு திராட்சைத்தோட்டம் இருந்தது.
Yizreel'de Samiriye Kralı Ahav'ın sarayının yanında Yizreelli Navot'un bir bağı vardı. Bir gün Ahav, Navot'a şunu önerdi: “Bağını bana ver. Sarayıma yakın olduğu için orayı sebze bahçesi olarak kullanmak istiyorum. Karşılığında ben de sana daha iyi bir bağ vereyim, ya da istersen değerini gümüş olarak ödeyeyim.”
2 ௨ ஆகாப் நாபோத்தோடு பேசி: உன்னுடைய திராட்சைத்தோட்டம் என்னுடைய வீட்டிற்கு அருகில் இருப்பதால், அதைக் கீரைத்தோட்டமாக்கும்படி எனக்குக் கொடு, அதைவிட நல்ல திராட்சைத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான்.
3 ௩ நாபோத் ஆகாபை நோக்கி: நான் என்னுடைய முன்னோர்களின் சுதந்தரத்தை உமக்குத் தராதபடி யெகோவா என்னைக் காப்பாராக என்றான்.
Ama Navot, “Atalarımın bana bıraktığı mirası sana vermekten RAB beni esirgesin” diye karşılık verdi.
4 ௪ இப்படி என்னுடைய முன்னோர்களின் சுதந்திரத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடு சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் கோபமுமாகத் தன்னுடைய வீட்டிற்கு வந்து, சாப்பிட்டாமல், தன்னுடைய கட்டிலின்மேல் படுத்து, தன்னுடைய முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்.
“Atalarımın bana bıraktığı mirası sana vermem” diyen Yizreelli Navot'un bu sözlerine sıkılıp öfkelenen Ahav sarayına döndü. Asık bir yüzle yatağına uzanıp hiçbir şey yemedi.
5 ௫ அப்பொழுது அவனுடைய மனைவியாகிய யேசபேல் அவனிடம் வந்து: நீர் சாப்பிடாதபடி, உம்முடைய மனம் சோர்வாக இருப்பது என்ன என்று அவனைக் கேட்டதற்கு,
Karısı İzebel yanına gelip, “Neden bu kadar sıkılıyorsun? Neden yemek yemiyorsun?” diye sordu.
6 ௬ அவன் அவளைப் பார்த்து: நான் யெஸ்ரயேலனாகிய நாபோத்தோடு பேசி: உன்னுடைய திராட்சைத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாகக் கொடு; அல்லது உனக்கு பிடித்திருந்தால் அதற்குப் பதிலாக வேறு திராட்சைத்தோட்டத்தை உனக்குத் தருவேன் என்றேன். அதற்கு அவன்: என்னுடைய திராட்சைத்தோட்டத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னான் என்றான்.
Ahav karısına şöyle karşılık verdi: “Yizreelli Navot'a, ‘Sen bağını gümüş karşılığında bana sat, istersen ben de onun yerine sana başka bir bağ vereyim’ dedim. Ama o, ‘Hayır, bağımı sana vermem’ dedi.”
7 ௭ அப்பொழுது அவனுடைய மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் அரசாட்சிசெய்கிறவர் அல்லவா? நீர் எழுந்து சாப்பிட்டு மனமகிழ்ச்சியாக இரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள்.
İzebel, “Sen İsrail'e böyle mi krallık yapıyorsun?” dedi, “Kalk, yemeğini ye, keyfini bozma. Yizreelli Navot'un bağını sana ben vereceğim.”
8 ௮ அவள் ஆகாபின் பெயரால் கடிதங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த கடிதங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடு குடியிருக்கிற மூப்பர்களிடத்திற்கும் பெரியோர்களிடத்திற்கும் அனுப்பினாள்.
İzebel Ahav'ın mührünü kullanarak onun adına mektuplar yazdı, Navot'un yaşadığı kentin ileri gelenleriyle soylularına gönderdi.
9 ௯ அந்த கடிதங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று தெரியப்படுத்தி, நாபோத்தை மக்களின் முன்பாக நிறுத்தி,
Mektuplarda şunları yazdı: “Oruç ilan edip Navot'u halkın önüne oturtun.
10 ௧0 தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற வஞ்சகமான இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படி அவன் மீது கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.
Karşısına da, ‘Navot Tanrı'ya ve krala sövdü’ diyen iki yalancı tanık koyun. Sonra onu dışarı çıkarıp taşlayarak öldürün.”
11 ௧௧ அவன் பட்டணத்தில் குடியிருக்கிற மூப்பர்களும் பெரியோர்களுமாகிய அவன் பட்டணத்து மனிதர்கள், யேசபேல் தங்களுக்கு அனுப்பின கடிதங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள்.
Navot'un yaşadığı kentin ileri gelenleriyle soyluları İzebel'in gönderdiği mektuplarda yazdıklarını uyguladılar.
12 ௧௨ அவர்கள் உபவாசம் என்று தெரியப்படுத்தி நாபோத்தை மக்களின் முன்னே நிறுத்தினார்கள்.
Oruç ilan edip Navot'u halkın önüne oturttular.
13 ௧௩ அப்பொழுது வஞ்சகமான இரண்டுபேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று மக்களுக்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படி அவனைக் கல்லெறிந்து,
Sonra iki kötü adam gelip Navot'un karşısına oturdu ve halkın önünde: “Navot, Tanrı'ya ve krala sövdü” diyerek yalan yere tanıklık etti. Bunun üzerine onu kentin dışına çıkardılar ve taşlayarak öldürdüler.
14 ௧௪ பிறகு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியப்பட்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள்.
Sonra İzebel'e, “Navot taşlanarak öldürüldü” diye haber gönderdiler.
15 ௧௫ நாபோத் கல்லெறியப்பட்டு செத்ததை யேசபேல் கேட்டபோது, ஆகாபை நோக்கி: நீர் எழுந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாகக் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ளும்; நாபோத் உயிரோடு இல்லை, அவன் செத்துப்போனான் என்றாள்.
İzebel, Navot'un taşlanıp öldürüldüğünü duyar duymaz, Ahav'a, “Kalk, Yizreelli Navot'un sana gümüş karşılığında satmak istemediği bağını sahiplen” dedi, “Çünkü o artık yaşamıyor, öldü.”
16 ௧௬ நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ளும்படி எழுந்து போனான்.
Ahav, Yizreelli Navot'un öldüğünü duyunca, onun bağını almaya gitti.
17 ௧௭ யெகோவாவுடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டானது, அவர்:
O zaman RAB, Tişbeli İlyas'a şöyle dedi:
18 ௧௮ நீ எழுந்து, சமாரியாவில் இருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான்.
“Kalk, Samiriyeli İsrail Kralı Ahav'ı karşılamaya git. Şu anda Navot'un bağındadır. Orayı almaya gitti.
19 ௧௯ நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று யெகோவா சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின இடத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
Ona de ki, RAB şöyle diyor: ‘Hem adamı öldürdün, hem de bağını aldın, değil mi? Navot'un kanını köpekler nerede yaladıysa, senin kanını da orada yalayacak.’”
20 ௨0 அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என்னுடைய பகைவனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.
Ahav, İlyas'a, “Ey düşmanım, beni buldun, değil mi?” dedi. İlyas şöyle karşılık verdi: “Evet, buldum. Çünkü sen RAB'bin gözünde kötü olanı yaparak kendini sattın.
21 ௨௧ நான் உன்மேல் தீங்கு வரச்செய்து, உன்னுடைய சந்ததியை அழித்துப் போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாவது இல்லாதபடி இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் அழித்து,
RAB diyor ki, ‘Seni sıkıntılara sokacak ve yok edeceğim. İsrail'de senin soyundan gelen genç yaşlı bütün erkeklerin kökünü kurutacağım.
22 ௨௨ நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவம் செய்யச்செய்ததால், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் குடும்பத்திற்கும், அகியாவின் மகனாகிய பாஷாவின் குடும்பத்திற்கும் சமமாக்குவேன் என்றார் என்று சொன்னான்.
Beni öfkelendirip İsrail'i günaha sürüklediğin için senin ailen de Nevat oğlu Yarovam'ın ve Ahiya oğlu Baaşa'nın ailelerinin akıbetine uğrayacak.’
23 ௨௩ யேசேபேலையும் குறித்துக் யெகோவா: நாய்கள் யேசபேலை யெஸ்ரெயேலின் மதில் அருகே தின்னும்.
“RAB İzebel için de, ‘İzebel'i Yizreel Kenti'nin surları dibinde köpekler yiyecek’ diyor.
24 ௨௪ ஆகாபின் சந்ததியில் பட்டணத்திலே சாகிறவனை நாய்களும், வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகளும் சாப்பிடும் என்றார்.
‘Ahav'ın ailesinden kentte ölenleri köpekler, kırda ölenleri yırtıcı kuşlar yiyecek.’”
25 ௨௫ தன்னுடைய மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.
–Ahav kadar, RAB'bin gözünde kötü olanı yaparak kendini satan hiç kimse olmadı. Karısı İzebel onu her konuda kışkırtıyordu.
26 ௨௬ யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக துரத்திவிட்ட எமோரியர்கள் செய்தபடியெல்லாம், அவன் அருவருப்பான விக்கிரகங்களைப் பின்பற்றி, மிகவும் அருவருப்பாய் நடந்துகொண்டான்.
Ahav RAB'bin İsrail halkının önünden kovduğu Amorlular'ın her yaptığına uyarak putların ardınca yürüdü ve iğrenç işler yaptı.–
27 ௨௭ ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, தன்னுடைய சரீரத்தின்மேல் சணலாடையைப் போர்த்துக்கொண்டு, உபவாசம்செய்து, சணலாடையில் படுத்துத் தாழ்மையாக நடந்துகொண்டான்.
Ahav bu sözleri dinledikten sonra, giysilerini yırttı, çula sarınıp oruç tutmaya başladı. Çul içinde yatıp kalkarak, alçakgönüllü bir yol tuttu.
28 ௨௮ அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்:
RAB, Tişbeli İlyas'a şöyle dedi:
29 ௨௯ ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தியதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறதால், நான் அவனுடைய நாட்களில் அந்த அழிவை வரச்செய்யாமல், அவனுடைய மகனுடைய நாட்களில் அதை அவனுடைய வீட்டின்மேல் வரச்செய்வேன் என்றார்.
“Ahav'ın önümde ne denli alçakgönüllü davrandığını gördün mü? Bu alçakgönüllülüğünden ötürü yaşamı boyunca ben de onu sıkıntıya sokmayacağım. Ama oğlunun zamanında ailesine sıkıntı vereceğim.”