< 1 நாளாகமம் 2 >
1 ௧ இஸ்ரவேலின் மகன்கள் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
Ezek az Izráel fiai: Rúben, Simeon, Lévi, Júda, Issakhár és Zebulon;
2 ௨ தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.
Dán, József, Benjámin, Nafthali, Gád és Áser.
3 ௩ யூதாவின் மகன்கள் ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று மகன்களும் சூவாவின் மகளான கானானிய பெண்ணிடம் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த மகன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாதவனானதால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.
Júdának fiai: Hér, Ónán és Séla; e három születék néki a Kanaánita Súahnak leányától. De Hér, Júdának elsőszülött fia gonosz vala az Úr szemei előtt, és megölé őt az Úr.
4 ௪ யூதாவின் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் மகன்கள் எல்லோரும் ஐந்துபேர்.
Thámár pedig, az ő menye szülé néki Péreczet és Zerákhot. Júdának fiai mindnyájan öten valának.
5 ௫ பாரேசின் மகன்கள் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
Pérecz fiai: Kheczrón és Khámul.
6 ௬ சேராவின் மகன்கள் எல்லோரும் சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
Zerákh fiai pedig: Zimri és Ethán, Hémán, Kálkól és Dára; mindenestől öten.
7 ௭ சாபத்தீடான காரியத்திலே துரோகம்செய்து இஸ்ரவேலைக் கலங்கச்செய்த ஆகார் என்பவன் கர்மீ மகன்களில் ஒருவன்.
Kármi fiai: Ákán, Izráelnek megrontója, mivel lopott a zsákmányból.
8 ௮ ஏத்தானின் மகன்கள் அசரியா முதலானவர்கள்.
Ethán fia: Azária.
9 ௯ எஸ்ரோனுக்குப் பிறந்த மகன்கள் யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
Kheczrón fiai, kik születtenek néki: Jérakhméel, Rám és Kélubai.
10 ௧0 ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா சந்ததியின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
Rám nemzé Amminádábot, Amminádáb pedig nemzé Nakhsont, a Júda fiainak fejedelmét.
11 ௧௧ நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
Nakhson nemzé Szálmát, Szálma pedig nemzé Boázt;
12 ௧௨ போவாஸ் ஓபேத்தைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.
Boáz nemzé Obedet; Obed nemzé Isait;
13 ௧௩ ஈசாய் தன்னுடைய மூத்த மகன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் மகனையும், சம்மா என்னும் மூன்றாம் மகனையும்,
Isai pedig nemzé Eliábot, az ő elsőszülöttét, és Abinádábot, másodikat, Simeát, harmadikat.
14 ௧௪ நெதனெயேல் என்னும் நான்காம் மகனையும், ரதாயி என்னும் ஐந்தாம் மகனையும்,
Netanéelt, negyediket, és Raddait, ötödiket.
15 ௧௫ ஓத்சேம் என்னும் ஆறாம் மகனையும், தாவீது என்னும் ஏழாம் மகனையும் பெற்றான்.
Osemet, hatodikat és Dávidot, a hetedik fiát;
16 ௧௬ அவர்களுடைய சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் மகன்கள், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.
És nővéreiket, Séruját és Abigáilt. Sérujának pedig fiai voltak: Absai, Joáb és Asáel, e három.
17 ௧௭ அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலனாகிய ஏத்தேர் என்பவன்.
Abigáil szülé Amasát; Amasának atyja pedig az Ismáel nemzetségéből való Jéter vala.
18 ௧௮ எஸ்ரோனின் மகன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன்னுடைய மனைவியாகிய அசுபாளாலே பெற்ற மகன்கள் ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.
Káleb pedig, a Kheczrón fia nemzett vala az ő Azuba nevű feleségétől és Jérióttól; és ezek az ő fiai: Jéser, Sobáb és Ardon.
19 ௧௯ அசுபாள் இறந்த பின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.
Azuba meghala, és Káleb vevé magának feleségül Efratát, és ez szülé néki Húrt.
20 ௨0 ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.
Húr nemzé Urit, Uri pedig nemzé Bésaléelt.
21 ௨௧ பின்பு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தினுடைய தகப்பனாகிய மாகீரினுடைய மகளைத் திருமணம்செய்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.
Azután beméne Kheczrón Mákirnak, Gileád atyjának leányához; mert ő ezt elvette vala hatvan esztendős korában, és szülé néki Ségubot.
22 ௨௨ செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலேயாத் தேசத்தில் இருபத்து மூன்று ஊர்கள் இருந்தது.
Ségub pedig nemzé Jáirt, kinek huszonhárom városa vala a Gileád földén.
23 ௨௩ கெசூரும், ஆராமும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் எடுத்துக்கொண்டார்கள்; இவர்கள் எல்லோரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் மகன்கள்.
De Gesur és Árám elvették tőlük Jáir falvait, Kenáthot és mezővárosait, hatvan várost. Mindezek Mákirnak, a Gileád atyjának fiaié.
24 ௨௪ காலேபினுடைய ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்தபின்பு, எஸ்ரோனின் மனைவியாகிய அபியாள் அவனுக்கு தெக்கோவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.
Minekutána pedig meghala Kheczrón Káleb-Efratában, akkor szülé néki Abija, a Kheczrón felesége, Ashúrt, Tékoa atyját.
25 ௨௫ எஸ்ரோனுக்கு முதலில் பிறந்த யெர்மெயேலின் மகன்கள் ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.
Jérakhméelnek, a Kheczrón elsőszülöttének fiai voltak: Rám, az elsőszülött, Búna, Orem, Osem és Akhija.
26 ௨௬ அத்தாராள் என்னும் பெயருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.
Volt más felesége is Jérakhméelnek, Atára nevű; ez az Onám anyja.
27 ௨௭ யெர்மெயேலுக்கு முதலில் பிறந்த ராமின் மகன்கள் மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.
Rámnak, Jérakhméel elsőszülöttének pedig fiai voltak: Maás, Jámin és Héker.
28 ௨௮ ஓனாமின் மகன்கள் சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் மகன்கள் நாதாப், அபிசூர் என்பவர்கள்.
Onám fiai voltak: Sammai és Jáda; és Sammai fiai: Nádáb és Abisúr.
29 ௨௯ அபிசூருடைய மனைவியின் பெயர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.
Abisúr feleségének neve Abihail, a ki szülé néki Akhbánt és Mólidot.
30 ௩0 நாதாபினுடைய மகன்கள் சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான்.
Nádáb fiai: Széled és Appaim: Széled magtalanul halt meg.
31 ௩௧ அப்பாயிமின் மகன் இஷி; இஷியின் மகன் சேசான்; சேசானின் மகள் அக்லாய்.
Appaim fia: Isi; Isi fia: Sésán; Sésán fia: Ahálai.
32 ௩௨ சம்மாயினுடைய சகோதரனாகிய யாதாவினுடைய மகன்கள், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான்.
Jáda fiai, a ki Sammai testvére volt: Jéter és Jonathán; Jéter magtalanul halt meg.
33 ௩௩ யோனத்தானின் மகன்கள், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் சந்ததி.
Jonathán fiai: Pélet és Záza. Ezek voltak a Jérakhméel fiai.
34 ௩௪ சேசானுக்கு மகள்களைத் தவிர மகன்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பெயருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
Sésánnak nem voltak fiai, hanem csak leányai; de volt Sésánnak egy Égyiptombeli szolgája, Járha nevű.
35 ௩௫ சேசான் தன்னுடைய மகளைத் தன் வேலைக்காரனாகிய யர்காவுக்கு திருமணம் செய்துகொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
És adá Sésán e Járha nevű szolgájának az ő leányát feleségül, a ki szülé néki Athait.
36 ௩௬ அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான்.
Athai pedig nemzé Nátánt; Nátán nemzé Zabádot;
37 ௩௭ சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஓபேதைப் பெற்றான்.
Zabád nemzé Eflált; Eflál nemzé Obedet;
38 ௩௮ ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான்.
Obed nemzé Jéhut; Jéhu nemzé Azáriát.
39 ௩௯ அசரியா எலேசைப் பெற்றான்; ஏலேஸ் எலெயாசாவைப் பெற்றான்.
Azária nemzé Hélest; Héles nemzé Elását;
40 ௪0 எலெயாசா சிஸ்மாயைப் பெற்றான்; சிஸ்மாய் சல்லூமைப் பெற்றான்.
Elása nemzé Sisémait; Sisémai nemzé Sallumot;
41 ௪௧ சல்லூம் எக்கமியாவைப் பெற்றான்; எக்கமியா எலிஷாமாவைப் பெற்றான்.
Sallum nemzé Jékámiát; Jékámia pedig nemzé Elisámát.
42 ௪௨ யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் மகன்கள் முதலில் பிறந்த சீப்பின் தகப்பனாகிய மேசாவும், எப்ரோனின் தகப்பனாகிய மெரேசாவின் மகன்களுமே.
A Káleb fiai pedig, a ki Jérakhméel testvére vala: elsőszülötte Mésa; ez volt Zifnek és Marésa fiainak atyjok, Hebronnak atyja.
43 ௪௩ எப்ரோனின் மகன்கள் கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா என்பவர்கள்.
Hebron fiai: Kórah, Tappuah, Rékem és Séma.
44 ௪௪ செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.
Séma pedig nemzé Rahámot, a Jorkeám atyját; és Rékem nemzé Sammait,
45 ௪௫ சம்மாயின் மகன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
A Sammai fia pedig: Máon; ez a Máon volt a Bethsúr atyja.
46 ௪௬ காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.
Efa pedig, a Káleb ágyastársa, szülé Háránt és Mósát és Gázezt; és Hárán nemzé Gázezt.
47 ௪௭ யாதாயின் மகன்கள் ரேகேம், யோதாம், கேசான், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.
Jaddai fiai pedig: Régem, Jotám, Gésán, Pelet, Héfa és Saáf.
48 ௪௮ காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.
A Káleb ágyasa Maaka szülé Sébert és Tirhánát.
49 ௪௯ அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் மகள் அக்சாள் என்பவள்.
És szülé Saáfot, Madmanna atyját, Sevát, a Makbéna atyját és Gibea atyját; és Aksza a Káleb leánya vala.
50 ௫0 எப்ராத்தாளிடம் முதலில் பிறந்த ஊருடைய மகனாகிய காலேபினுடைய மகன்கள் கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,
Ezek voltak Káleb fiai, a ki Húrnak, az Efrata elsőszülöttének fia volt: Sobál, Kirját-Jeárim atyja.
51 ௫௧ பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.
Szálma, Bethlehem atyja; Háref, Bethgáder atyja.
52 ௫௨ கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் மகன்கள், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
Voltak pedig Sobálnak is, a Kirját-Jeárim atyjának fiai: Haroé, a fél Menuhót ura.
53 ௫௩ கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், இத்ரியர்களும் பூகியர்களும் சுமாத்தியர்களும் மிஸ்ராவியர்களுமே; இவர்களிடம் சோராத்தியர்களும், எஸ்தாவோலியர்களும் பிறந்தார்கள்.
A Kirját-Jeárim háznépei: Jitreusok, Puteusok, Sumateusok, Misraiteusok; ezektől származának a Sorateusok és az Estaoliteusok.
54 ௫௪ சல்மாவின் சந்ததிகள் பெத்லெகேமியர்களும், நெத்தோப்பாத்தியர்களும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊர்க்காரர்களும், மானாத்தியர்களிலும் சோரியர்களிலும் பாதி மக்களுமே.
Szálma fiai, Bethlehem és a Netofátbeliek, Atróth, Beth-Joáb, a Czórabeli Manahateusok fele.
55 ௫௫ யாபேசில் குடியிருந்த வேத வல்லுனர்களுடைய வம்சங்கள் திராத்தியர்களும் சிமாத்தியர்களும் சுக்காத்தியர்களுமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியார்களான கேனியர்கள் இவர்களே.
És a Jábesben lakozó tudós emberek háznépei: a Tirateusok, Simateusok, Sukateusok. Ezek a Kineusok, a kik Hámáttól, a Rékáb házának atyjától származtak.