< எண்ணாகமம் 19 >
1 பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது:
Gospod je spregovoril Mojzesu in Aronu, rekoč:
2 “யெகோவா கட்டளையிட்டிருக்கிற சட்டத்தின் நியமம் இதுவே: குறைபாடற்றதும், ஊனமற்றதும், ஒருபோதும் நுகம் சுமக்காததுமான சிவப்புநிற கன்னிப்பசுவைக் கொண்டுவரும்படி இஸ்ரயேலரிடம் சொல்லுங்கள்.
»To je odredba postave, ki jo je zapovedal Gospod, rekoč: ›Govorita Izraelovim otrokom, da vama privedejo rdečo telico brez madeža, na kateri ni nobene pomanjkljivosti in na katero nikoli ni prišel jarem.
3 அதை ஆசாரியன் எலெயாசாரிடம் கொடுங்கள். அது முகாமுக்கு வெளியே கொண்டுபோகப்பட்டு, அவன் முன்னிலையில் கொல்லப்படவேண்டும்.
Izročili jo boste duhovniku Eleazarju, da jo odvede zunaj tabora in nekdo jo bo zaklal pred njegovim obrazom.
4 பின்பு ஆசாரியன் எலெயாசார் அதன் இரத்தத்தைத் தன் விரலினால் தொட்டு, அதை சபைக் கூடாரத்திற்கு முன்பக்கத்தை நோக்கி ஏழுமுறை தெளிக்கவேண்டும்.
Duhovnik Eleazar bo s svojim prstom vzel od njene krvi in sedemkrat poškropil neposredno pred šotorskim svetiščem skupnosti
5 பின்பு, ஆசாரியன் பார்த்துக்கொண்டிருக்கையில் அதன் தோல், இறைச்சி, இரத்தம், குடல் உட்பட அந்தக் கன்னிப்பசு எரிக்கப்படவேண்டும்.
in nekdo bo telico sežgal v njegovem pogledu; njeno kožo, njeno meso in njeno kri bo sežgal z njenim iztrebkom.
6 ஆசாரியன் கேதுருமரக்கட்டை, ஈசோப்புக்குழை, கருஞ்சிவப்புக் கம்பளிநூல் ஆகியவற்றில் கொஞ்சத்தை எடுத்து, எரிந்துகொண்டிருக்கும் கன்னிப்பசுவின்மேல் போடவேண்டும்.
Duhovnik bo vzel cedrov les, izop in škrlat in to vrgel v sredo goreče telice.
7 அதன்பின், ஆசாரியன் தன் உடைகளைக் கழுவி முழுகவேண்டும். பின்பு அவன் முகாமுக்குள் போகலாம். ஆனாலும் அவன் மாலைவரை சம்பிரதாய முறைப்படி அசுத்தமாயிருப்பான்.
Potem bo duhovnik opral svoja oblačila, svoje meso umil v vodi in potem bo prišel v tabor in duhovnik bo nečist do večera.
8 அந்தப் பசுவை எரித்த மனிதனும் தன் உடைகளைக் கழுவி முழுகவேண்டும். அவனும் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
Kdor jo zažiga, bo svoja oblačila opral v vodi in svoje meso okopal v vodi in bo nečist do večera.
9 “சுத்தமாயிருக்கும் ஒரு மனிதன் அந்தப் பசுவின் சாம்பலைச் சேர்த்து அள்ளி, முகாமுக்கு வெளியே சம்பிரதாய முறைப்படி சுத்தமான ஒரு இடத்தில் கொட்டவேண்டும். இஸ்ரயேல் சமுதாயத்தினர் சுத்திகரிக்கும் தண்ணீரில் உபயோகிப்பதற்காக அந்தச் சாம்பலை வைத்துக்கொள்ள வேண்டும். பாவத்திலிருந்து சுத்திகரிப்பதற்கு அது பயன்படுத்தப்படும்.
Človek, ki je čist, bo zbral pepel telice in ga položil zunaj tabora, na čisto mesto in tam bo hranjen za skupnost Izraelovih otrok, za vodo oddvojitve. To je očiščevanje za greh.
10 அந்தப் பசுவின் சாம்பலை அள்ளும் மனிதனும் தன் உடைகளைக் கழுவவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாயிருப்பான். இது இஸ்ரயேலருக்கும், அவர்களுடன் வாழும் அந்நியருக்கும் நிரந்தர நியமமாய் இருக்கும்.
Kdor zbira pepel telice, bo opral svoja oblačila in bo nečist do večera. To bo za Izraelove otroke in tujca, ki začasno prebiva med njimi, zakon na veke.
11 “ஒரு மனிதனின் சடலத்தைத் தொடுகிற எவனும் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவனாய் இருப்பான்.
Kdor se dotika trupla kateregakoli človeka, bo sedem dni nečist.
12 அம்மனிதன் மூன்றாம் நாளும், ஏழாம் நாளும் அந்த தண்ணீரினால் தன்னைச் சுத்திகரிக்கவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான். ஆனால் அவன் மூன்றாம் நாளும், ஏழாம் நாளும் தன்னைச் சுத்திகரியாவிட்டால் அவன் சுத்தமாகமாட்டான்.
S to [vodo] se bo očistil na tretji dan in na sedmi dan bo čist. Toda če se ne očisti tretji dan, potem sedmi dan ne bo čist.
13 ஒரு மனிதனின் சடலத்தைத் தொடுகிற எவனும் தன்னைச் சுத்திகரிக்கத் தவறினால், அவன் யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்தை அசுத்தப்படுத்துகிறான். அவன் இஸ்ரயேலில் இருந்து அகற்றப்படவேண்டும். அந்தச் சுத்திகரிப்பின் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாதபடியால், அவன் அசுத்தமாய் இருக்கிறான். அவனுடைய அசுத்தம் அவன் மேலேயே இருக்கிறது.
Kdorkoli se dotika trupla kateregakoli človeka, ki je mrtev in se ne očisti, omadežuje Gospodovo šotorsko svetišče, in ta duša bo iztrebljena iz Izraela. Ker voda oddvojitve ni bila poškropljena nad njim, bo nečist; njegova nečistost je še nad njim.
14 “கூடாரம் ஒன்றில் ஒரு மனிதன் இறந்தால், அதற்குரிய சட்டம் இதுவே: கூடாரத்திற்குள் வரும் எவனும், கூடாரத்திற்குள் இருப்பவன் எவனும் ஏழுநாட்களுக்கு அசுத்தமாயிருப்பான்.
To je postava, če človek umre v šotoru. Vse, kar pride v šotor in vse, kar je v šotoru, bo nečisto sedem dni.
15 மூடியினால் பூட்டப்படாமல் திறந்தபடியே இருக்கும் கொள்கலன்கள் யாவும் அசுத்தமாயிருக்கும்.
Vsaka odprta posoda, ki na sebi nima privezanega pokrivala, je nečista.
16 “வெளியில் இருப்பவன் யாராவது, வாளினால் வெட்டுண்டு இறந்தவனையோ அல்லது இயற்கையாக இறந்தவனையோ தொட்டாலும் அல்லது மனித எலும்பையோ, கல்லறையையோ தொட்டாலும் அவன் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவனாயிருப்பான்.
Kdorkoli se dotakne tistega, ki je na odprtih poljih umorjen z mečem ali trupla ali človeške kosti, ali groba, bo sedem dni nečist.
17 “அசுத்தமான மனிதனுக்காக, எரிக்கப்பட்ட சுத்திகரிப்பின் காணிக்கையிலிருந்து கிடைத்த சாம்பலில் கொஞ்சத்தை எடுத்து, ஜாடியில் போட்டு, அதற்குள்ளே சுத்தமான தண்ணீரை ஊற்றவேண்டும்.
Za nečisto osebo bodo vzeli pepel sežgane telice očiščevanja za greh in tekoča voda bo vlita k temu v posodo.
18 பின்பு சம்பிரதாயப்படி சுத்தமாயிருக்கும் ஒருவன் கொஞ்சம் ஈசோப்புக் குழையை எடுத்து, அந்த தண்ணீரில் தோய்த்து, அதை கூடாரத்திலும், அங்குள்ள பணிப்பொருட்களின்மேலும், அங்குள்ள மக்கள்மேலும் தெளிக்கவேண்டும். அப்படியே மனித எலும்பையோ, கல்லறையையோ, கொல்லப்பட்டவனையோ அல்லது இயற்கையாக இறந்தவனையோ யாராவது தொட்டிருந்தால் அவன் மேலும் அத்தண்ணீரை தெளிக்கவேண்டும்.
Čista oseba bo vzela izop in ga pomočila v vodi in ga poškropila po šotoru in po vseh posodah in po osebah, ki so bile tam in na tistega, ki se je dotaknil kosti umorjenega, ali nekoga umorjenega, ali nekoga mrtvega ali groba.
19 இவ்வாறு சுத்தமாயிருக்கிறவன், சுத்தமில்லாதிருக்கிறவன்மேல் மூன்றாம் நாளும், ஏழாம் நாளும் அந்த தண்ணீரைத் தெளிக்கவேண்டும். ஏழாம்நாளில் அவன் இவனைச் சுத்திகரிக்கவேண்டும். சுத்திகரிக்கப்படுபவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அன்று மாலை அவன் சுத்தமாவான்.
Čista oseba bo poškropila na nečisto na tretji dan in na sedmi dan. Na sedmi dan se bo mož očistil in opral svoja oblačila in se okopal v vodi in bo zvečer čist.
20 ஆனால் அசுத்தமான ஒருவன் தன்னைச் சுத்திகரியாமல்விட்டால், அவன் இஸ்ரயேலர் மத்தியிலிருந்து அகற்றப்படவேண்டும். ஏனெனில் அவன் யெகோவாவின் பரிசுத்த இடத்தை அசுத்தப்படுத்தினான். அந்த சுத்திகரிப்பின் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாதபடியால், அவன் அசுத்தமுள்ளவனாயிருக்கிறான்.
Toda mož, ki bo nečist in se ne bo očistil, ta duša bo iztrebljena izmed skupnosti, ker je omadeževal Gospodovo svetišče. Voda oddvojitve ni bila poškropljena nanj; ta je nečist.
21 இது அவர்களுக்கு ஒரு நித்திய நியமமாயிருக்கிறது. “சுத்திகரிப்புத் தண்ணீரைத் தெளிக்கிற மனிதனும், தன் உடைகளைக் கழுவவேண்டும். அந்த தண்ணீரைத் தொடுகிற எவனும் அன்று மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
To jim bo večen zakon, da kdor škropi vodo oddvojitve, bo opral svoja oblačila; in kdor se dotika vode oddvojitve, bo nečist do večera.
22 அசுத்தமுள்ளவன் எவற்றைத் தொடுவானோ அவையும் அசுத்தமாயிருக்கும், அவற்றைத் தொடும் மனிதனும் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்” என்றார்.
Česarkoli se nečista oseba dotika, bo nečisto; in duša, ki se tega dotika, bo nečista do večera.