< Isaya 16 >

1 Mpeleke mwana kondoo kuongoza nchi kutoka Sela huko jangwani, kwenye mlima wa binti Sayuni.
தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை நீங்கள் சேலாபட்டணம் முதல் வனாந்திரம்வரை சேர்த்து மகளாகிய சீயோனின் மலைக்கு அனுப்புங்கள்.
2 Kama ndege wazururao, viota vimetapakaa, hivyo basi wanawake wa Moabu watavuka kwenye mto Arnoni.
இல்லாவிட்டால் கூட்டைவிட்டுத் துரத்தப்பட்டு அலைகிற குருவியைப்போல மகள்களாகிய மோவாப் அர்னோன் நதியின் துறைகளிடத்திலிருப்பார்கள்.
3 Toa maelekezo, tekeleza haki; toa kivuli kama usiku wakati wa mchana; wahifadhi watuhumiwa; msiwahini watuhumiwa.
நீ ஆலோசனைசெய்து, நியாயம் செய்து, மத்தியானத்திலே உன் நிழலை இரவைப்போலாக்கி, துரத்தப்பட்டவர்களை மறைத்துக்கொள், ஓடிவருகிறவர்களைக் காட்டிக்கொடுக்காதே.
4 Waache waishi miongoni mwenu, wakimbizi kutoka Moabu; muwe mahali pakujifichia wao wasiangamizwe.'' maana mateso yatakwisha, na uharibifu utapungua utakuwa na kikomo, wale wanotetemeka watapotea katika nchi.
மோவாபே, துரத்திவிடப்பட்ட என் மக்கள் உன்னிடத்தில் தங்கட்டும்; அழிக்கிறவனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு; ஒடுக்குகிறவன் இல்லாதேபோவான்; அழிவு ஒழிந்துபோம்; மிதிக்கிறவர்கள் தேசத்தில் இல்லாதபடி அழிந்துபோவார்கள்.
5 Kiti cha enzi kitaanzishwa katika agano la uaminifu; na mmoja katika hema la Daudi atakaa pale kwa uaminifu. Atahukumu kwa kufuata haki na atatenda haki.
கிருபையினாலே சிங்காசனம் நிலைப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாக நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாக உண்மையோடே வீற்றிருப்பார்.
6 Tumesikia kiburi cha Moabu, kiburi chake, majivuno yake, na hasira yake. Lakini majivuno yake ni maneno tu.
மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் கோபத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மிகவும் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது.
7 Hivyo basi Moabu atalia juu ya Moabu-wote watalia! wataomboleza, nyie mlioharibiwa kabisa, mikate ya Kira Haresethi.
ஆகையால், மோவாபியர்கள் ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள், எல்லோரும் ஒருமித்து அலறுவார்கள்; கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள் மக்களுக்காக பெருமூச்சு விடுவார்கள்.
8 Shamba la Heshboni limekauka kabisa pamoja na mizabibu ya Sibma. Kiongozi wa mataifa amekanyaga mizabibu iliyochaguliwa na kuelekea Jazeri na kuelekea jangwani. Mizizi yake nje ya nchi; imenda juu ya bahari.
எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போனது; சீப்மா ஊர் திராட்சைச்செடியின் நல்ல கொடிகளைத் தேசங்களின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள் யாசேர்வரை சென்று வனாந்திரத்தில் படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள் நீண்டு கடலுக்கு அடுத்த கரைவரையில் இருந்தது.
9 Kweli nitalia pamoja Jazeri kwasababu ya shamba la mizabibu la Sibma. Nitakuloanisha kwa machozi yangu, Heshboni, na Eleale. Maana katika mashamba yenu kipindi cha majira ya joto matunda na mazao nitaishia kwa kupiga kelele za furaha.
ஆகையால் யாசேருக்காக அழுததுபோல, சீப்மா ஊர் திராட்சைச்செடிக்காகவும் மிகவும் அழுவேன்; எஸ்போனே, எலெயாலெயே, உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சைப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோனது.
10 Furaha na shangwe zimezimwa na matunda ya miti ya shambani; na hakuna nyimbo wala kelele katika mashamba ya mizabibu, maana nimeweka mwisho wa kupiga kelele kwa yeyote anayetembea.
௧0பயிர்வெளியிலிருந்து சந்தோஷமும் களிப்பும் இல்லாமல் போனது; திராட்சைத்தோட்டங்களில் பாடலுமில்லை ஆர்ப்பரிப்புமில்லை; ஆலையில் இரசத்தை மிதிக்கிறவனுமில்லை; சந்தோஷ ஆரவாரத்தை ஓயச்செய்தேன்.
11 Hivyo, moyo wangu unalia kama kinubi, na ndani yangu maana kwa ajili ya Kiri Hareseth.
௧௧ஆகையால் மோவாபுக்காக என் குடல்களும், கிராரேசினுக்காக என் உள்ளமும் சுரமண்டலத்தைப்போல தொனிக்கிறது.
12 Pindi ambapo Moabu wamejivika mahali pa juu, na kuingia katika hekalu kuomba, maombi yake hayatatimiza chochote.
௧௨மோவாப் மேடைகளின்மேல் சலித்துப்போனான் என்று காணப்படும்போது, பிரார்த்தனைசெய்யத் தன் பரிசுத்த இடத்திலே நுழைவான்; ஆனாலும் பயனடையமாட்டான்.
13 Haya ndio maneno aliyoyazungumza Yahwe kuhusu Moabu iliyopita.
௧௩மோவாபைக்குறித்து அக்காலத்திலே யெகோவா சொன்ன வார்த்தை இதுவே.
14 Tena Yahwe amesema, ''Ndani ya miaka mitatu utukufuwa Moabu utatoweka; japo watu wake wengi, watakao bakia ni wachache, na wasionafaida.
௧௪ஒரு கூலிக்காரனுடைய வருடங்களுக்கு இணையான மூன்று வருடங்களுக்குள்ளே மோவாபின் மகிமையும் அதின் அதிக மக்கள் கூட்டமும் சீரழிந்துபோகும்; அதில் மீதியாயிருப்பது மிகவும் சிறிதும் அற்பமுமாயிருக்கும் என்று யெகோவா இப்பொழுது சொல்கிறார்.

< Isaya 16 >