< I Tesaloniczan 1 >

1 Paweł, Sylwan i Tymoteusz do kościoła Tesaloniczan, [który jest] w Bogu Ojcu i Panu Jezusie Chrystusie. Łaska wam i pokój od Boga, naszego Ojca, i Pana Jezusa Chrystusa.
பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
2 Zawsze dziękujemy Bogu za was wszystkich, czyniąc wzmiankę o was w naszych modlitwach;
தேவனுக்குப் பிரியமான சகோதரர்களே, உங்களுடைய விசுவாசத்தின் செயல்களையும், உங்களுடைய அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்களுடைய நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,
3 Nieustannie wspominając wasze dzieło wiary i trud miłości, i wytrwałość w nadziei w naszym Panu Jezusie Chrystusie, przed Bogiem i naszym Ojcem;
நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,
4 Wiedząc, umiłowani bracia, że zostaliście wybrani przez Boga;
எங்களுடைய ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து வேண்டுதல்செய்து, உங்களெல்லோருக்காகவும் எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
5 Gdyż nasza ewangelia nie doszła was tylko w słowie, ale także w mocy i w Duchu Świętym, i w pełnym przekonaniu. Wiecie bowiem, jacy byliśmy dla was, [przebywając] wśród was.
எங்களுடைய நற்செய்தி உங்களிடம் வசனத்தோடுமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியானவரோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்களுக்காக எப்படிப்பட்டவர்களாக இருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.
6 A wy staliście się naśladowcami naszymi i Pana, przyjmując słowo pośród wielkiego ucisku, z radością Ducha Świętego;
நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியானவரின் மகிழ்ச்சியோடு, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,
7 Tak że staliście się wzorem dla wszystkich wierzących w Macedonii i Achai.
இவ்விதமாக மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் அனைவருக்கும் மாதிரிகளானீர்கள்.
8 Od was bowiem słowo Pańskie rozbrzmiewało nie tylko w Macedonii i Achai, ale też wasza wiara w Boga rozkrzewiła się w każdym miejscu, tak że nie trzeba nam mówić czegokolwiek;
எப்படியென்றால், உங்களிடமிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் பரவியதுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாக இல்லாதபடிக்கு, தேவனைப்பற்றின உங்களுடைய விசுவாசம் எல்லா இடங்களிலும் பிரசித்தமானது.
9 Ponieważ oni sami opowiadają o nas, jakie było nasze przybycie do was i jak nawróciliście się od bożków do Boga, aby służyć żywemu i prawdziwemu Bogu;
ஏனென்றால், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடம் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு, நீங்கள் சிலை வழிபாடுகளைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,
10 I oczekiwać z niebios jego Syna, którego wskrzesił z martwych, Jezusa, który nas wyrwał od nadchodzącego gniewu.
௧0அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவரும், இனிவரும் கோபத்திலிருந்து நம்மை விடுவித்து இரட்சிக்கிறவருமாக இருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும் அறிவிக்கிறார்களே.

< I Tesaloniczan 1 >