< Psalmów 68 >
1 Przedniejszemu śpiewakowi psalm Dawidowy ku śpiewaniu. Powstanie Bóg, a będą rozproszeni nieprzyjaciele jego, i pouciekają przed twarzą jego ci, którzy go mają w nienawiści.
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதமாகிய பாட்டு. இறைவன் எழுந்திருப்பாராக, அவருடைய பகைவர் சிதறடிக்கப்படுவார்களாக; அவருடைய எதிரிகள் அவருக்கு முன்பாகப் பயந்து ஓடுவார்களாக.
2 Jako bywa dym rozpędzony, tak ich rozpędzasz: jako się wosk rozpływa od ognia, tak niezbożnicy poginą przed obliczem Bożem.
காற்றினால் புகை அடித்துச் செல்லப்படுகிறது போல, நீர் அவர்களை ஊதிவிடும்; நெருப்பின் முன்னே மெழுகு உருகுவது போல, இறைவனுக்கு முன்பாகக் கொடியவர்கள் அழிவார்களாக.
3 Ale sprawiedliwi weselić się i radować będą przed obliczem Bożem, i pląsać będą od radości.
ஆனால் நீதிமான்கள் மகிழ்ந்து இறைவனுக்கு முன்பாகக் களிகூருவார்களாக; அவர்கள் சந்தோஷப்பட்டு மகிழ்வார்களாக.
4 Śpiewajcie Bogu, śpiewajcie psalmy imieniowi jego; gotujcie drogę temu, który jeździ na obłokach. Pan jest imię jego, radujcież się przed obliczem jego.
இறைவனைப் பாடுங்கள், அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள்; மேகங்களில் ஏறிப் போகிறவரை புகழ்ந்து உயர்த்துங்கள்; யெகோவா என்பது அவருடைய பெயர்; அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
5 Ojcem jest sierót, i sędzią wdów, Bogiem w przybytku swym świętym.
இறைவன் தமது பரிசுத்த வாழ்விடத்தில் தகப்பன் இல்லாதவர்களுக்குத் தகப்பனாகவும் விதவைகளுக்கு பாதுகாவலராகவும் இருக்கிறார்.
6 Bóg, który samotne w rodowite domy rozmnaża, wywodzi więźniów z oków; ale odporni mieszkać muszą w ziemi suchej.
இறைவன் தனிமையானவர்களுக்கு குடும்பத்தை ஏற்படுத்துகிறார்; சிறைக் கைதிகளை விடுவித்து, செழிப்பான வாழ்வுக்குள் நடத்திச் செல்கிறார்; கலகக்காரரோ வெயிலால் வறண்ட நாட்டில் வாழ்கிறார்கள்.
7 Boże! gdyś wychodził przed obliczem ludu twego, gdyś chodził po puszczy; (Sela)
இறைவனே, நீர் உமது மக்களுக்கு முன்பாகச் சென்று, அவர்களைப் பாலைவனத்தின் வழியே அணிவகுத்து வருகையில்,
8 Ziemia się trzęsła, także i niebiosa rozpływały się przed obliczem Bożem, i ta góra Synaj drżała przed twarzą Boga, Boga Izraelskiego.
சீனாய் மலையின் இறைவனுக்குமுன், இஸ்ரயேலின் இறைவனுக்குமுன் பூமி அதிர்ந்து, வானங்கள் மழையைப் பொழிந்தன.
9 Deszcz obfity spuszczałeś hojnie, o Boże! na dziedzictwo twoje, a gdy omdlewało, tyś je zaś otrzeźwiał.
இறைவனே, நீர் நிறைவான மழையைக் கொடுத்தீர்; இளைத்துப்போன உமது உரிமைச்சொத்திற்கு நீர் புத்துயிர் அளித்தீர்.
10 Zastępy twoje mieszkają w niem, któreś ty dla ubogiego nagotował dobrocią twoją, o Boże!
உமது மக்கள் அதில் குடியமர்ந்தார்கள்; இறைவனே, உமது நிறைவான நன்மையிலிருந்து ஏழைகளுக்கு வழங்கினீர்.
11 Pan dał słowo swe, i tych, którzy pociechy zwiastowali, zastęp wielki mówiących.
யெகோவா வார்த்தையை அறிவித்தார்; அதைப் பிரசித்தப்படுத்தியதோ பெரிய கூட்டம்:
12 Królowie z wojskami uciekali, uciekali: ale ta, która przyglądała domu, dzieliła łupy.
“இராணுவத்தையுடைய அரசர்கள் ஓடினார்கள்; வீட்டிலிருந்த பெண்கள் கொள்ளைப்பொருட்களைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.
13 Chociażeście leżeć musieli między kotłami, przecież będziecie jako gołębica, mająca pióra posrebrzone, a której skrzydła jako żółte złoto.
நீங்கள் ஆட்டு மந்தைகளின் மத்தியில் படுத்திருந்தபோதிலும், வெள்ளியினால் மூடப்பட்ட புறாச்சிறகுகளையும் பசும்பொன்னினால் அலங்கரிக்கப்பட்ட இறகுகளையும் கண்டுபிடிப்பீர்கள்.”
14 Gdy Wszechmogący rozproszy królów w tej ziemi, wybielejesz jako śnieg na górze Salmon.
எல்லாம் வல்லவர் நாட்டின் அரசர்களைச் சிதறடித்தது சல்மோன் மலையில் பனிமழை பெய்ததுபோல இருந்தது.
15 Na górze Bożej, na górze Basańskiej, na górze pogórczystej, na górze Basańskiej.
பாசான் மலை இறைவனுடைய மலை; பாசான் மலை சிகரங்களையுடைய மலை.
16 Przeczże wyskakujecie góry pogórczyste? na tejci górze ulubił sobie Bóg mieszkanie, tamci Pan będzie mieszkał na wieki.
சிகரங்களையுடைய மலையே, ஏன் சீயோன் மலையின்மேல் பொறாமைப்படுகிறீர்கள்? அங்குதான் இறைவன் தாம் ஆளும்படி விரும்பினார்; அங்குதான் என்றென்றும் யெகோவா குடியிருப்பார்.
17 Wozów Bożych jest dwadzieścia tysięcy, wiele tysięcy Aniołów; ale Pan między nimi jako na Synaj w świątnicy przebywa.
இறைவனின் தேர்கள் பத்தாயிரங்களும், ஆயிரம் ஆயிரங்களுமாய் இருக்கின்றன; யெகோவா சீனாய் மலையிலிருந்து அவருடைய பரிசுத்த இடத்திற்கு வந்தார்.
18 Wstąpiłeś na wysokość, wiodłeś pojmanych więźniów, nabrałeś darów dla ludzi, i najodporniejszych, Panie Boże! przywiodłeś, aby mieszkali z nami.
நீர் மேலே ஏறிச்சென்றபோது, சிறைப்பட்ட அநேகரை உம்மோடு எடுத்துச்சென்றீர்; மனிதரிடமிருந்தும் கலகக்காரரிடமிருந்தும் நீர் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டீர்; இறைவனாகிய யெகோவாவின் வாழ்விடம் அதுவே.
19 Błogosławiony Pan; na każdy dzień hojnie nas opatruje dobrami swemi Bóg zbawienia naszego. (Sela)
தினந்தோறும் நம் பாரங்களைச் சுமக்கிற நமது இரட்சகரும் இறைவனுமான யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்.
20 On jest Bóg nasz, Bóg obfitego zbawienia; panujący Pan z śmierci wywodzi.
நம்முடைய இறைவன் காப்பாற்றுகிற இறைவன்; வல்லமையுள்ள யெகோவா மரணத்திலிருந்து நம்மை தப்புவிக்கிறார்.
21 Zaiste Bóg zrani głowę nieprzyjaciół swoich, i wierzch głowy włosami nakryty chodzącego w grzechach swoich.
இறைவன் நிச்சயமாகவே தமது பகைவர்களின் தலைகளை உடைப்பார்; தங்கள் பாவங்களில் தொடர்கிறவர்களின் முடியுள்ள உச்சந்தலைகளை அவர் நொறுக்கிப்போடுவார்.
22 Rzekł Pan: Wyprowadzę zaś swoich jako z Basan, wywiodę ich zaś z głębokości morskiej.
யெகோவா கூறுவதாவது, “நான் அவர்களைப் பாசானிலிருந்து கொண்டுவருவேன்; நான் அவர்களைக் கடலின் ஆழங்களிலிருந்தும் கொண்டுவருவேன்,
23 Przetoż będzie noga twoja zbroczona we krwi, i język psów twoich we krwi nieprzyjacielskiej.
அப்பொழுது உங்கள் எதிரிகளின் இரத்தம் உங்கள் பாதங்களில் பதியும்; உங்கள் நாய்களும் தங்கள் பங்கிற்கு நாவினால் நக்கும்.”
24 Widzieli ciągnienia twoje, Boże! ciągnienia Boga mego i króla mego w świątnicy.
என் இறைவனும் என் அரசனுமானவர், பரிசுத்த இடத்திற்குள் உமது ஊர்வலம் போவதை, இறைவனே அனைவரும் கண்டனர்.
25 Wprzód szli śpiewacy, a za nimi grający na instrumentach, a w pośrodku panienki bijąc w bębny.
முன்னால் பாடகரும், அவர்களுக்குப் பின்னால் இசைக் கலைஞர்களும் போகிறார்கள்; அவர்களுடன் இளம்பெண்கள் தம்புராவை வாசித்துக்கொண்டு போகிறார்கள்.
26 W zgromadzeniach błogosławcie Bogu, błogosławcie Panu, którzyście z narodu Izraelskiego. Tu niech będzie Benjamin maluczki, który ich opanował;
மகா சபையில் இறைவனைத் துதியுங்கள். இஸ்ரயேலின் சபையிலே யெகோவாவைத் துதியுங்கள்;
27 Tu książęta Judzcy, i hufy ich, książęta Zabulońscy, i książęta Neftalimscy.
சிறிய கோத்திரமாகிய பென்யமீன் அவர்களை வழிநடத்துகிறான்; பின்பு யூதா கோத்திரப் பிரபுக்களின் பெருங்கூட்டமும், செபுலோன், நப்தலி கோத்திரப் பிரபுக்களும் அங்கே இருக்கிறார்கள்.
28 Obdarzył cię Bóg twój siłą; utwierdź, o Boże! to, coś w nas sprawił.
இறைவனே, உமது வல்லமையை கட்டளையிடும்; எங்கள் இறைவனே, முன்பு நீர் செயலாற்றியதுபோல உமது பலத்தை எங்களுக்குக் காண்பியும்.
29 Dla kościoła twego, który jest w Jeruzalemie, będąć królowie dary przynosić.
எருசலேமில் இருக்கும் உமது ஆலயத்திற்காக அரசர்கள் உமக்கு நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.
30 Poraź poczet kopijników, zgromadzenie mocnych wodzów, i ludu bujnego, hardych, chlubiących się kęsem srebra; rozprosz narody pragnące wojny.
நாணல்களின் நடுவிலுள்ள விலங்கினங்களைக் கடிந்துகொள்ளும்; கன்றுகளோடுள்ள காளைகள் கூட்டத்தைப் போன்ற மக்களைக் கடிந்துகொள்ளும்; அவர்கள் வெள்ளி அன்பளிப்புகளுடன் உமக்கு முன்பாகப் பணிந்துகொள்ளட்டும்; யுத்தத்தில் மகிழ்கிற மக்களைச் சிதறடியும்.
31 Przyjdąć zacni książęta z Egiptu: Murzyńska ziemia pospieszy się wyciągnąć ręce swe do Boga.
எகிப்திலிருந்து அரச தூதுவர்கள் வருவார்கள்; எத்தியோப்பியர் இறைவனிடத்தில் தங்களை சமர்ப்பிப்பார்கள்.
32 Królestwa ziemi! śpiewajcież Bogu, śpiewajcie Panu. (Sela)
பூமியின் அரசுகளே, இறைவனைப் பாடுங்கள்; யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்.
33 Temu, który jeździ na najwyższych niebiosach od wieczności; oto wydaje głos swój, głos mocy swojej.
வானங்களில் பூர்வீக வானங்களில் ஏறிச் செல்கிறவரை, வல்லமையுள்ள சத்தத்துடன் முழங்குகிறவரைப் பாடுங்கள்.
34 Przyznajcie moc Bogu, nad Izraelem dostojność jego, a wielmożność jego na obłokach.
இறைவனுடைய வல்லமையை அறிவியுங்கள்; அவருடைய மகத்துவம் இஸ்ரயேலின் மேலாக இருக்கிறது; அவருடைய வல்லமை ஆகாயங்களில் இருக்கிறது.
35 Strasznyś jest, o Boże! z świętych przybytków twoich; Bóg Izraelski sam daje moc i siły ludowi swemu. Niechajże będzie Bóg błogosławiony.
இறைவனே, நீர் உமது பரிசுத்த இடத்தில் பிரமிக்கத்தக்கவராய் இருக்கிறீர்; இஸ்ரயேலின் இறைவன் தமது மக்களுக்கு பெலனையும் வல்லமையையும், கொடுக்கிறார். இறைவனுக்குத் துதி உண்டாவதாக!