< Apenbaring 5 >
1 Og jeg så i hans høire hånd som satt på tronen, en bokrull, skrevet innvendig og utvendig, og forseglet med syv segl.
௧பின்னும், உள்ளேயும் வெளியேயும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரை போடப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கையிலே பார்த்தேன்.
2 Og jeg så en veldig engel, som ropte med høi røst: Hvem er verdig til å åpne boken og bryte seglene på den?
௨புத்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதியானவர் யார்? என்று அதிக சத்தமாகக் கேட்கிற பலமுள்ள ஒரு தூதனையும் பார்த்தேன்.
3 Og det var ingen i himmelen eller på jorden eller under jorden som kunde åpne boken eller se i den.
௩வானத்திலோ, பூமியிலோ, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும், அதைப் படிக்கவும் முடியாமல் இருந்தது.
4 Da gråt jeg sårt fordi ingen blev funnet verdig til å åpne boken eller se i den.
௪ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும் படிக்கவும் தகுதியானவனாக இல்லாததினால் நான் மிகவும் அழுதேன்.
5 Og en av de eldste sier til mig: Gråt ikke! se, løven av Juda stamme, Davids rotskudd, har seiret og kan åpne boken og de syv segl på den.
௫அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்தின் சிங்கமும், தாவீதின் வேருமானவர் புத்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
6 Og jeg så midt imellem tronen og de fire livsvesener og de eldste et lam stå der, likesom slaktet, og det hadde syv horn og syv øine, det er de syv Guds ånder som er sendt ut over all jorden.
௬அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட நிலையில் இருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் நடுவிலே நிற்பதைக் கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாக இருந்தது; அந்தக் கண்கள் பூமியெல்லாம் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளே.
7 Og det kom og tok den av hans høire hånd som satt på tronen.
௭அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கினார்.
8 Og da det tok boken, falt de fire livsvesener og de fire og tyve eldste ned for Lammet, hver med sin harpe og med gullskåler, fulle av røkelse, som er de helliges bønner,
௮அந்தப் புத்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்களுடைய சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக முகங்குப்புறவிழுந்து:
9 og de synger en ny sang og sier: Verdig er du til å ta boken og åpne seglene på den, fordi du blev slaktet og med ditt blod kjøpte oss til Gud av hver stamme og tunge og folk og ætt,
௯“தேவரீர் புத்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதி உள்ளவராக இருக்கிறீர்; ஏனென்றால், நீர் அடிக்கப்பட்டு, எல்லாக் கோத்திரங்களிலும், மொழிகளிலும், மக்களிலும், தேசங்களிலும் இருந்து எங்களை தேவனுக்காக உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
10 og gjorde dem til et kongerike og til prester for vår Gud, og de skal være konger på jorden!
௧0எங்களுடைய தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம்” என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
11 Og jeg så, og jeg hørte en røst av mange engler omkring tronen og livsvesenene og de eldste, og tallet på dem var ti tusen ganger ti tusen og tusen ganger tusen,
௧௧பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சுற்றியிருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய எண்ணிக்கை கோடானகோடியாக இருந்தது.
12 og de sa med høi røst: Verdig er Lammet, som er slaktet, til å få makt og rikdom og visdom og styrke og ære og pris og velsignelse!
௧௨அவர்களும் அதிக சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவராக இருக்கிறார் என்று சொன்னார்கள்.
13 Og hver skapning som er i himmelen og på jorden og under jorden og på havet, og alt det som er i dem, hørte jeg si: Ham som sitter på tronen, og Lammet tilhører velsignelsen og æren og prisen og styrken i all evighet. (aiōn )
௧௩அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். (aiōn )
14 Og de fire livsvesener sa: Amen! Og de eldste falt ned og tilbad.
௧௪அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.