< Efeserne 5 >

1 Bli derfor Guds efterfølgere som hans elskede barn,
எனவே, நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து,
2 og vandre i kjærlighet, likesom Kristus elsket eder og gav sig selv for oss som en gave og et offer, Gud til en velbehagelig duft.
கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு இனிய வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புவைத்ததுபோல, நீங்களும் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.
3 Men utukt og all urenhet og havesyke må ikke engang nevnes iblandt eder, således som det sømmer sig for hellige,
மேலும், பரிசுத்தவான்களுக்குத் தகுந்தபடி, வேசித்தனமும், மற்ற எந்த ஒரு அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர்கள்கூட உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது.
4 heller ikke skamløs ferd og dårlig snakk eller lettferdig tale, som alt sammen er utilbørlig, men heller takksigelse.
அப்படியே நிந்தனையும், புத்தியில்லாத பேச்சும், பரிகாசம் செய்வதும் தவறானவைகள்; ஸ்தோத்திரம் செய்வதே நல்லது.
5 For dette vet og skjønner I at ingen horkarl eller uren eller havesyk, som er en avgudsdyrker, har arv i Kristi og Guds rike.
விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரக ஆராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே இடம் பெறுவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.
6 La ingen dåre eder med tomme ord! for på grunn av disse ting kommer Guds vrede over vantroens barn;
இப்படிப்பட்டவைகளினால் கீழ்ப்படியாத பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வருவதால், யாரும் வீண்வார்த்தைகளினாலே உங்களை ஏமாற்றாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்;
7 ha derfor ikke noget med dem å gjøre!
அப்படிப்பட்டவர்களோடு சேராமல் இருங்கள்.
8 For I var fordum mørke, men nu er I lys i Herren; vandre som lysets barn -
முற்காலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாக இருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள்.
9 for lysets frukt viser sig i all godhet og rettferdighet og sannhet -
வெளிச்சத்தின் கனி, எல்லா நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் தெரியும்.
10 idet I prøver hvad som er velbehagelig for Herren,
௧0கர்த்தருக்குப் பிரியமானது என்னவென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
11 og ha intet å gjøre med mørkets ufruktbare gjerninger, men refs dem heller!
௧௧கனி இல்லாத இருளின் செயல்களுக்கு உடன்படாமல், அவைகள் தவறானவைகள் என்று சுட்டிக்காட்டுங்கள்.
12 For det som lønnlig drives av dem, er skammelig endog å si;
௧௨அவர்கள் மறைவான இடத்தில் செய்யும் செயல்களைச் சொல்லுகிறதும் வெட்கமாக இருக்கிறதே.
13 men når det refses, blir det alt åpenbaret av lyset; for alt som blir åpenbaret, er lys.
௧௩அவைகள் எல்லாம் வெளிச்சத்தினால் வெளியாக்கப்படும்; வெளியாக்கப்படுவது எல்லாம் வெளிச்சமாக இருக்கிறது.
14 Derfor sier Skriften: Våkn op, du som sover, og stå op fra de døde, og Kristus skal lyse for dig.
௧௪எனவே, தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார் என்று சொல்லியிருக்கிறார்.
15 Se derfor til hvorledes I kan vandre varlig, ikke som uvise, men som vise,
௧௫எனவே, நீங்கள் ஞானம் இல்லாதவர்களைப்போல நடக்காமல், ஞானம் உள்ளவர்களைப்போலக் கவனமாக நடந்துகொண்டு,
16 så I kjøper den beleilige tid; for dagene er onde.
௧௬நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால் காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
17 Derfor, vær ikke dårer, men forstå hvad Herrens vilje er!
௧௭எனவே, நீங்கள் அறிவில்லாதவர்களாக இல்லாமல், கர்த்தருடைய விருப்பம் என்னவென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
18 Og drikk eder ikke drukne av vin, for i det er der ryggesløshet, men bli fylt av Ånden,
௧௮பொல்லாதவழிக்கு உன்னைக் கொண்டுச்செல்லும் மதுபானத்தை நீ குடித்து வெறிகொள்ளாமல், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து;
19 så I taler til hverandre med salmer og lovsanger og åndelige viser, og synger og leker for Herren i eders hjerter,
௧௯சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்தில் கர்த்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
20 og alltid sier Gud og Faderen takk for alle ting i vår Herre Jesu Kristi navn,
௨0நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
21 og underordner eder under hverandre i Kristi frykt.
௨௧தெய்வபயத்தோடு ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
22 I hustruer! underordne eder under eders egne menn som under Herren!
௨௨மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்களுடைய சொந்தக் கணவருக்குக் கீழ்ப்படியுங்கள்.
23 for mannen er hustruens hoved, likesom Kristus er menighetens hoved, han som er sitt legemes frelser.
௨௩கிறிஸ்து சபைக்குத் தலையாக இருக்கிறதுபோல, கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்; கிறிஸ்துவே சரீரத்திற்கும் இரட்சகராக இருக்கிறார்.
24 Men likesom menigheten underordner sig under Kristus, således skal også hustruene underordne sig under sine menn i alle ting.
௨௪எனவே, சபையானது கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்களுடைய சொந்தக் கணவர்களுக்கு எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.
25 I menn! elsk eders hustruer, likesom Kristus elsket menigheten og gav sig selv for den,
௨௫கணவர்களே, உங்களுடைய மனைவிகளிடம் அன்பாக இருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையின்மேல் அன்பாக இருந்து,
26 for å hellige den, idet han renset den ved vannbadet i ordet,
௨௬தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்தப்படுத்தி, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
27 forat han selv kunde fremstille menigheten for sig i herlighet, uten plett eller rynke eller noget sådant, men at den kunde være hellig og ulastelig.
௨௭கறையேதும்இல்லாமல் பரிசுத்தமும் பிழை இல்லாததுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
28 Så er mennene skyldige å elske sine hustruer som sine egne legemer. Den som elsker sin hustru, elsker sig selv;
௨௮அப்படியே, கணவர்களும் தங்களுடைய மனைவிகளைத் தங்களுடைய சொந்த சரீரங்களாக நினைத்து, அவர்கள்மேல் அன்பாக இருக்கவேண்டும்; தன் மனைவியிடம் அன்பாக இருக்கிறவன் தன்னைத்தானே நேசிக்கிறான்.
29 ingen har jo nogensinne hatet sitt eget kjød, men han før og varmer det, likesom Kristus gjør med menigheten;
௨௯தன் சொந்த சரீரத்தைப் பகைத்தவன் ஒருவனும் இல்லையே; கர்த்தர் சபையைப் பேணிக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் சரீரத்தைப் பேணிக்காப்பாற்றுகிறான்.
30 for vi er hans legemes lemmer.
௩0நாம் அவருடைய சரீரத்தின் பாகங்களாகவும், அவருடைய சரீரத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாகவும் இருக்கிறோம்.
31 Derfor skal mannen forlate far og mor og holde sig til sin hustru, og de to skal være ett kjød.
௩௧இதனால் மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும்விட்டு, தன் மனைவியுடன் இணைந்து, இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள்.
32 Denne hemmelighet er stor; men jeg tenker hermed på Kristus og på menigheten.
௩௨இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.
33 Dog, også I skal elske, enhver sin hustru som sig selv, og hustruen skal ha ærefrykt for sin mann.
௩௩எப்படியும், உங்கள்மேல் நீங்கள் அன்பாக இருப்பதுபோல, உங்களுடைய மனைவிகளிடமும் அன்பாக இருக்கவேண்டும்; மனைவியும் கணவனிடத்தில் பயபக்தியாக இருக்கவேண்டும்.

< Efeserne 5 >