< Kolossenserne 3 >
1 Er I da opreist med Kristus, da søk det som er der oppe, der Kristus sitter ved Guds høire hånd!
௧நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
2 La eders hu stå til det som er der oppe, ikke til det som er på jorden!
௨பூமியிலுள்ளவைகளை இல்லை, மேலானவைகளையே விரும்புங்கள்.
3 I er jo død, og eders liv er skjult med Kristus i Gud;
௩ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
4 når Kristus, vårt liv, åpenbares, da skal og I åpenbares med ham i herlighet.
௪நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடுகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.
5 Så død da eders jordiske lemmer: utukt, urenhet, brynde, ond lyst og havesyke, som jo er avgudsdyrkelse;
௫ஆகவே, விபசாரம், அசுத்தம், மோகம், தீய எண்ணம், விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகிய இந்த உலகத்திற்குரிய பாவ சுபாவத்தை அழித்துப்போடுங்கள்.
6 for disse ting kommer Guds vrede over vantroens barn;
௬இவைகளினாலேயே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வரும்.
7 iblandt dem vandret også I fordum, da I levde i disse ting;
௭நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே வாழ்ந்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள்.
8 men nu skal også I avlegge dem alle: vrede, hissighet, ondskap, spott, skammelig snakk av eders munn;
௮இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்களுடைய வாயிலிருந்து வரக்கூடாத நிந்தனையும், வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
9 lyv ikke mot hverandre, I som har avklædd eder det gamle menneske med dets gjerninger
௯ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
10 og iklædd eder det nye, som fornyes til kunnskap efter sin skapers billede;
௧0தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கு ஒப்பாக பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொண்டிருக்கிறீர்களே.
11 her er ikke greker og jøde, omskjærelse og forhud, barbar, skyter, træl, fri, men Kristus er alt og i alle.
௧௧அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனம் உள்ளவனென்றும், விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை, யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார்.
12 Iklæ eder da, som Guds utvalgte, hellige og elskede, inderlig barmhjertighet, godhet, ydmykhet, saktmodighet, langmodighet,
௧௨ஆகவே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், அமைதியையும், நீடிய பொறுமையையும் அணிந்துகொண்டு;
13 så I tåler hverandre og tilgir hverandre om nogen har klagemål imot nogen; som Kristus har tilgitt eder, således og I!
௧௩ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
14 Men over alt dette iklæ eder kjærligheten, som er fullkommenhetens sambånd.
௧௪இவை எல்லாவற்றின்மேலும், பூரண நற்குணத்தின் கட்டாகிய அன்பை அணிந்துகொள்ளுங்கள்.
15 Og Kristi fred råde i eders hjerter, den som I og blev kalt til i ett legeme, og vær takknemlige!
௧௫தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள்.
16 La Kristi ord bo rikelig hos eder, så I lærer og formaner hverandre i all visdom med salmer og lovsanger og åndelige viser og synger yndig i eders hjerter for Gud,
௧௬கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே எல்லா ஞானத்தோடும் பரிபூரணமாக குடியிருப்பதாக; பாடல்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்திலே கர்த்த்தரைப் பக்தியுடன் பாடி;
17 og alt som I gjør i ord eller i gjerning, gjør det alt i den Herre Jesu navn, idet I takker Gud Fader ved ham!
௧௭வார்த்தையினாலாவது செயல்களினாலாவது, நீங்கள் எதைச்செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் மூலமாகப் பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
18 I hustruer! underordne eder under eders menn, som det sømmer sig i Herren!
௧௮மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.
19 I menn! elsk eders hustruer og vær ikke bitre mot dem!
௧௯கணவன்மார்களே, உங்களுடைய மனைவிகளில் அன்பு செலுத்துங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.
20 I barn! vær lydige mot eders foreldre i alle ting! for dette er velbehagelig i Herren.
௨0பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்கு விருப்பமானது.
21 I fedre! opegg ikke eders barn, forat de ikke skal tape motet!
௨௧பிதாக்களே, உங்களுடைய பிள்ளைகள் மனம் தளர்ந்துபோகாதபடி, அவர்களை கோபமூட்டாமலிருங்கள்.
22 I tjenere! vær lydige i alle ting imot eders herrer efter kjødet, ikke med øientjeneste, som de som vil tekkes mennesker, men i hjertets enfold, idet I frykter Herren!
௨௨வேலைக்காரர்களே, சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனிதர்களைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு பணிவிடைசெய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடு பணிவிடைசெய்யுங்கள்.
23 Det I gjør, gjør det av hjertet, som for Herren og ikke for mennesker,
௨௩நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைத் தொழுதுகொள்ளுகிறதினாலே, உரிமைப்பங்கின் பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,
24 for I vet at I skal få arven til lønn av Herren. Tjen den Herre Kristus!
௨௪எதைச்செய்தாலும், அதை மனிதர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாகச் செய்யுங்கள்.
25 for den som gjør urett, skal få igjen den urett han gjorde, og det blir ikke gjort forskjell på folk.
௨௫அநியாயம் செய்கிறவன் தான் செய்த அநியாயத்திற்குரிய பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.