< Ezekiel 8 >
1 Ke len aklimekosr in malem akonkosr ke yac akonkosr ma kut muta in sruoh, mwet kol lun mwet sruoh Judah elos wiyu muta in lohm sik. In kitin pacl ah, ku lun LEUM GOD Fulatlana tuku nu fuk.
௧பாபிலோனின் சிறையிருப்பின் ஆறாம் வருடத்தின் ஆறாம் மாதம் ஐந்தாம்தேதியிலே, நான் என்னுடைய வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், யூதாவின் மூப்பர்கள் எனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறபோதும், யெகோவாகிய ஆண்டவருடைய கரம் அங்கே என்மேல் அமர்ந்தது.
2 Nga ngetak ac liye sie aruruma oana luman mwet se. Infulwali nu ten oana luman e uh, ac infulwalyak nu lucng saromrom oana in bronze akmusrala.
௨அப்பொழுது இதோ, அக்கினிச்சாயலாகத் தோன்றுகிற ஒருவரைக் கண்டேன்; அவருடைய இடுப்புக்குக் கீழெல்லாம் அக்கினியும் அவருடைய இடுப்புக்கு மேலெல்லாம் உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் சாயலுமாக இருந்தது.
3 El asroema luman pao se ac sruokya aunsifuk. Ke aruruma se inge, ngun lun God srukyuyak nu yen engyeng uh ac usyula nu Jerusalem. El usyula nu ke nien utyak layen nu epang ke kalkal se oan loac in Tempul, yen ma sruloala se oan we su akkasrkusrakye God.
௩கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என்னுடைய தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார்; தேவ ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்திற்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடக்குதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சல் உண்டாக்குகிற விக்கிரகத்தின் இடம் இருந்தது.
4 Ac nga liye kalem saromrom se ma akkalemye lah God lun Israel oasr we, oana nga tuh liyauk ke nga tu pe Infacl Chebar.
௪இதோ, நான் பள்ளத்தாக்கிலே கண்டிருந்த தரிசனத்திற்குச் சரியாக இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அங்கே விளங்கினது.
5 God El fahk nu sik, “Mwet sukawil moul la, ngetla nu epang.” Ke nga ngetla nga liyauk ma sruloala se su akkasrkusrakye God, oan apkuran nu ke loang se ke mutunoa in utyak ke mutunpot uh.
௫அவர் என்னைப் பார்த்து: மனிதகுமாரனே, உன்னுடைய கண்களை ஏறெடுத்து, வடக்கே பார் என்றார்; அப்பொழுது நான் என்னுடைய கண்களை ஏறெடுத்து, வடக்கே பார்த்தேன்; இதோ, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே பார்த்தேன்; முன்வாசலிலே எரிச்சல் உண்டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது.
6 God El fahk nu sik, “Mwet sukawil, ku kom liye ma sikyak inge? Liye ma srungayuk mwet Israel elos oru in acn inge, pwanang nga som loes liki acn mutal sik. Kom ac fah liye kutu mwe mwekin yohk liki na ma inge.”
௬அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாகப் போகச்செய்யும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,
7 El usyula nu ke mutunoa se lik ah, ac srisrngiya pat se ke pot uh.
௭என்னை முற்றத்தின் வாசலுக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன்.
8 El fahk, “Mwet sukawil, foklalik pat sacn, ac tilyak kac.” Na nga fukulya ac konauk srungul se.
௮அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார்; நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது.
9 El fahk nu sik, “Utyak ac liye ouiya koluk elos oru we.”
௯அவர் என்னைப் பார்த்து: நீ உள்ளேபோய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.
10 Na nga utyak ac liye pesinka ah sroalla ke wet ac kutu pac kain in kosro ma tia nasnas, oayapa kutu ma saya ma mwet Israel uh alu nu kac.
௧0நான் உள்ளே போய்ப் பார்த்தபோது, இதோ, எல்லாவித ஊரும் உயிரினங்களும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் உருவங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய அசுத்தமான எல்லா சிலைகளும் சுவரில் சுற்றிலும் செதுக்கப்பட்டிருந்தன.
11 Mwet kol itngoul lun mwet Israel uh muta we, ac Jaazaniah wen natul Shaphan el tu inmasrlolos. Kais sie selos sruok mwe akok mwe keng, ac kulasr uh fosryak liki mwe keng ah.
௧௧இஸ்ரவேலின் மூப்பர்களில் எழுபதுபேரும், அவர்களின் நடுவிலே சாப்பானுடைய மகனாகிய யசனியாவும், அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு, அவைகளுக்கு முன்பாக நின்றார்கள்; தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று.
12 God El siyuk sik, “Mwet sukawil, kom liye ma mwet kol lun mwet Israel elos oru in lukma inge? Elos nukewa tukeni alu in sie fukil sessesla ke ma sruloala. In nunak tafongla lalos elos mu, ‘LEUM GOD El tia liye kut! El som liki facl se inge.’”
௧௨அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இஸ்ரவேலர்களின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்களுடைய சிலைகளின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? யெகோவா எங்களைப் பார்க்கிறதில்லை; யெகோவா தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.
13 Na LEUM GOD El fahk nu sik, “Kom ac liye ke elos ac oru ma koluk yohk liki na ma ingan.”
௧௩பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி,
14 Ouinge El usyula nu nien utyak layen epang in Tempul, ac fahkak nu sik kutu mutan su tungi misa lun god se pangpang Tammuz.
௧௪என்னைக் யெகோவாவுடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டுபோனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
15 God El siyuk sik, “Mwet sukawil, ku kom liye ma inge? Kom ac liye pac kutu ma arulana koluk liki ma inge.”
௧௫அப்பொழுது அவர்: மனிதகுமாரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி,
16 Ac el usyula nu in kalkal se oan loac ke Tempul, nu ke acn se ma apkuran nu ke nien utyak lun acn mutal, inmasrlon loang sac ac sawalsrisr uh. Oasr mukul longoul limekosr we su totulikla liki acn mutal. Elos faksufi nu kutulap ac alu nu ke faht ke takak ah.
௧௬என்னைக் யெகோவாவுடைய ஆலயத்தின் உள்முற்றத்திற்கு கொண்டுபோனார்; இதோ, யெகோவாவுடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்கள், தங்களுடைய முதுகைக் யெகோவாவுடைய ஆலயத்திற்கும் தங்களுடைய முகத்தைக் கிழக்குத்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாகக் கிழக்கே இருக்கும் சூரியனை வணங்கினார்கள்.
17 LEUM GOD El fahk nu sik, “Mwet sukawil, ku kom liye ma ingan? Mwet Judah inge tiana falkin orekma koluk ac mwe mwekin ma kom liye inge, oayapa inkanek sulallal elos oru apunla facl se inge nufon, a elos tuku na nwe inkul lun Tempul ac oru, pwanang upala kasrkusrak luk uh. Liye ke elos orek pirakak nu sik ke lumah na koluk elos oru!
௧௭அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்களுடைய தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சைக்கிளையைத் தங்களுடைய மூக்கிற்கு நேராகப் பிடிக்கிறார்கள்.
18 Elos ac pula fulen kasrkusrak luk uh. Nga ac tiana molelosla ku pakomutalos. Elos ac pre nu sik ac wowoyak ke kuiyalos, a nga ac tiana lohng.”
௧௮ஆகையால் நானும் கடுங்கோபத்துடன் காரியத்தை நடத்துவேன்; என்னுடைய கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை; அவர்கள் மகா சத்தமாக என்னுடைய காதுகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் கேட்பதில்லை என்றார்.