< 시편 122 >
1 다윗의 시 곧 성전에 올라가는 노래 사람이 내게 말하기를 여호와의 집에 올라가자 할 때에 내가 기뻐하였도다
௧தாவீதின் ஆரோகண பாடல். யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று என் நண்பர்கள் எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தேன்.
2 예루살렘아 우리 발이 네 성문 안에 섰도다
௨எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது.
3 예루살렘아 너는 조밀한 성읍과 같이 건설되었도다
௩எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது.
4 지파들 곧 여호와의 이름에 감사하려고 이스라엘의 전례대로 그리로 올라가는도다
௪அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் யெகோவாவுடைய மக்களாகிய கோத்திரங்கள் யெகோவாவின் பெயரைப் போற்றுவதற்குப் போகும்.
5 거기 판단의 보좌를 두셨으니 곧 다윗 집의 보좌로다
௫அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
6 예루살렘을 위하여 평안을 구하라 예루살렘을 사랑하는 자는 형통하리로다
௬எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும்.
7 네 성 안에는 평강이 있고 네 궁중에는 형통이 있을지어다
௭உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும், உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும்.
8 내가 내 형제와 붕우를 위하여 이제 말하리니 네 가운데 평강이 있을지어다
௮என்னுடைய சகோதரர்களுக்காகவும் என்னுடைய நண்பர்களுக்காகவும், உன்னில் சமாதானம் இருக்கட்டும் என்பேன்.
9 여호와 우리 하나님의 집을 위하여 내가 네 복을 구하리로다
௯எங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்காக உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.