< Dagiti Salmo 58 >
1 Dakayo nga agtuturay, nalinteg met la iti panagsasaoyo? Dakayo a tattao, nalinteg met la ti panangukomyo?
௧தான் கெட்டுப்போகாதபடிக்கு அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க தாவீது பாடி இசைத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் பாடல். மவுனமாக இருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாக நீதியைப் பேசுவீர்களோ? மனுமக்களே, நியாயமாகத் தீர்ப்பு செய்வீர்களோ?
2 Saan, agar-aramidkayo iti kinadangkes iti pusoyo; agar-aramidkayo ti kinaranggas iti entero a daga babaen kadagiti im-imayo.
௨மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள்.
3 Naisinan dagiti nadangkes manipud pay iti aanakan; maiyaw-awandan apaman a maipasngayda, agsasaodan kadagiti inu-ulbod.
௩துன்மார்க்கர்கள் கர்ப்பத்தில் தோன்றியதுமுதல் முறைதவறுகிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.
4 Ti gitada ket kasla gita ti uleg; kasla da la tuleng a kobra a napullatan dagiti lapayagda,
௪பாம்பின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.
5 a saan a mangipangpangag iti timek dagiti mangkaykayaw, uray no kasano ti kinalaingda.
௫பாம்பாட்டிகள் விநோதமாக ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்தைக் கேட்காதபடிக்குத் தன்னுடைய காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள்.
6 Pusiem dagiti ngipen kadagiti ngiwatda; O Dios; pusiem dagiti saong dagiti urbon a leon, O Yahweh.
௬தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; யெகோவாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.
7 Mapukawda koma a kas iti danum nga ages-es; inton ibiatda dagiti panada, agbalinda koma a kasla awan tiradna.
௭கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன்னுடைய அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாகப் போகட்டும்.
8 Agbalinda koma a kasla bisukol a marunaw ken agpukaw, kas iti natay a maladaga a naipasngay iti saanna pay a tiempo ket saanna man la a nakita ti lawag ti init.
௮கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; பெண்ணின் முதிர்ச்சி அடையாத கருவைப்போல் சூரியனைக் காணாமல் இருப்பார்களாக.
9 Sakbay a marikna dagiti bangam ti pudot ti mapupuoran a sisiit, iyadayonanto dagitoy babaen iti alipugpog, dagiti nalangto kasta met dagiti mapupuoran a sisiit.
௯முள் நெருப்பினால் உங்களுடைய பானைகளில் சூடேறுவதற்கு முன்பே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல் காற்றினால் அடித்துக்கொண்டு போவார்.
10 Agrag-onto dagiti nalinteg inton makitana ti panagibales ti Dios; bugoannanto dagiti sakana iti dara dagiti nadangkes,
௧0பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன்னுடைய பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
11 tapno ibaganto dagiti lallaki, “Pudno, nga adda gunggona ti nalinteg a tao; pudno nga adda ti Dios a mangukom iti lubong.”
௧௧அப்பொழுது, மெய்யாக நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாக பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனிதன் சொல்லுவான்.